Posts

Showing posts from 2018

6174 - சுதாகர் கஸ்தூரி

Image
“நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா? விண்கல் ஒன்று வானத்தில் தெரிகிறது என்பதைவிட விண்கல் ஒன்று, இரண்டு நாட்களில் பூமியைத் தாக்கப்போகிறது எனும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் தானே? சொல்லப்படும் தொனியின் தன்மையைப் பொருத்தே ஒரு விஷயம் அதன் ஸ்வாரஸ்யத்திற்கான சதவீதத்தைப் பெறுகிறது. இதுதான்  Calculate the Target  வகையறா.   கையிலெடுத்திருப்பது அறிவியல் புனைவு எனும்போது, காலம் குறித்தான கணக்கீடு இருக்கும்பட்சத்தில் கதை நிச்சயம் வேகமெடுக்கும். இத்தனை மணிக்கு வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்ற பதற்றத்தில், காலங்காலமாக கடைசி இரண்டு வினாடியின்போது  Defuse  செய்யும்   திரைப்பட டெக்னிக் இந்த முறையைச் சார்ந்ததுதான். கடைசியாக தமிழில் அறிவியல் புனைவுக்கதையை எப்போது வாசித்தீர்கள்? Fritz Leiber  எழுதிய  ‘A Pail of Air’ -ன் தமிழாக்கமான “ஒரு வாளி ஆக்ஸிஜன்“ தான் கடைசியாக நான் வாசித்த ஸ்வாரஸ்யமான அறிவியல் புனைவுக் குறுங்கதை. (கவனிக்க,  ‘ ஸ்வாரஸ்யமான ’).

'மசால் தோசை 38 ரூபாய்' - வா.மணிகண்டன்

Image
எழுத்துக்கள் பற்றியோ , எழுதியவர் பற்றியோ எந்தவித முன் அபிப்ராயங்களும் இல்லாமல் ஒரு படைப்பை கையாளுவது நன்றாகத்தான் இருக்கிறது.   ‘ மசால் தோசை 38 ரூபாய் ’ பற்றிச் சொல்வதற்கு முன் ‘ லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் ’ பற்றி ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். 2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பணத்தை கொடுப்பதற்குள் “ மேடம் “ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். தான் தேனியிலிருந்து வருவதாகவும் லிண்ட்சே லோஹன் பிரதிகள் தீர்ந்துவிட்டதாகவும் இந்தப் புத்தகத்தைத் தனக்கு கொடுக்க முடியுமாவென்றும் கேட்டபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நிறைய வாசிப்பவர் போலும். மறுப்பின்றி கொடுத்துவிட்டாயிற்று. அதன்பிறகு மாரியப்பனின் மனைவிக்கு ஹாய் சொல்லும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. ஒரு புத்தகத்திற்காக ‘ ப்ளீஸ் ’ என்றதை அன்றைக்கு தான் கேட்டேன். மசால் தோசை 38 ரூபாய் - தொகுத்திருக்கும் விடயங்கள்.. எழுத்து நடை.. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாய் என்னைக் கவர்ந்தது கடைசியில் குறிப்புகளுக்கென விடப்பட்டிருக்கும் கோடிட்ட மூன்று வெற்றுத்தாள்கள் தான். வாசிப்பாளனுக்குத் தரப்படும் அடிப்படை