Posts

Showing posts from November, 2013

Life is Beautiful - என் பார்வையில்..!

Image
முன்வழுக்கை, ஒட்டிய கன்னங்கள், சற்றே குள்ளமாய் ஒடிசலான உருவம்.. இதுவே  Life is Beautiful   படத்தின் நாயகன் Roberto Benigni யின் தோற்றம். சராசரிக் கதாநாயகனுக்குரிய எந்தவிதமான ஹீரோயிசமுமின்றி படம்முழுக்க நம் மனதில் நிறைந்து நிற்கிறார். ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து இவர் முகத்திலிருக்கும் புன்னகை, இறுதிவரை சற்றும் குறையாமல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ( படத்தினை எழுதி இயக்கியவரும் இவரே..!). வாழ்க்கையை, எந்த சூழலிலும் பாஸிடிவ்வாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது திரைப்படம். காதலன் , கணவன் , தகப்பன் என முப்பரிணாமத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் . ஒரு காட்சியில் , இசைநாடகம் நடந்துகொண்டிருக்கும் அரங்கத்தில் பால்கனியிலிருக்கும் காதலியை , கீழிருந்து திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார் ஹீரோ . அப்போது, நாயகனுக்கு பக்கத்து இருக்கைப் பெண் இவரை முறைத்ததும் , எனக்கு வலதுபக்க காது தான் கேட்கும் . அதனால் அவ்வாறு திரும்பி உட்கார்ந்திருப்பதாக கூறி சமாளிப்பார் . ஹய்ய்ய்யோ ... செம சீன் அது . இருவரும்

அணுவைத் துளைத்து..

Image
அணுமின் நிலையம் என்பது என்ன ? அதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன.. கதிர்வீச்சு.. புரோட்டான்.. நியூட்ரான்.. இன்னும் நிறைய நிறைய தகவல்கள் அடங்கிய நாவல் இது. அறிவியல் ரீதியாய் ஃபார்முலா சொல்லி குழப்பாம , முடிந்தவரைக்கும் புரியிற மாதிரி விளக்கியிருக்கிறார்   செய்யாறு தி.தா.நாராயணன் . ( அப்படியுமே சில தகவல்களை உள்வாங்க , திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாயிற்று. என்ன பண்றது ?? நமக்கு அந்த அளவுக்கு தான் அறிவு..)   வெறுமனே தனிமங்கள் , திரவங்கள்னு சொற்பொழிவு செய்து மொக்கை போடாம , கதைக்களம் ஒரு அணுமின் நிலையம் , அதன் ஊழியர்கள் , நடுவே ஒரு மெல்லிய காதல் , சில கொலைகள் , கடத்தல்கள் , சில மர்மங்கள் , நிறைய அறிவியல் , போலீஸ் , இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம்.   மர்ம நாவல்கள்ல கடைசி வரைக்கும் யார்மேல சந்தேகம் வரலையோ அவங்க தான் வில்லன் “ னு காலங்காலமா கடைபிடிச்சுகிட்டு வரும் விதிகள் நமக்கு அத்துப்படியாதலால் , அப்பாவியான கதாப்பாத்திரத்தின் மீது தான் நமக்கு முதலில் சந்தேகம் வருது.. அது கடைசியில் ஊர்ஜிதமாகவும் ஆகுது. (முடிவில் புரோட்டான் கொண்டு தங்க உலோகம்

லாக்கப் – சாமான்யனின் குறிப்புகள்..

Image
சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நான்குபேர், காவல் நிலையத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்களென எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் இது. சில புத்தகங்கள், வாங்கிவிட்ட காரணத்துக்காகவே வேறுவழியின்றி படிக்கப்படும். சில, பாதி கூட தாண்டாது. ‘ லாக்கப் ’ படிக்கும்போதே, பிடிபட்ட நால்வருடன் நம் பயணமும் ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொருமுறை சிறையின் கதவுகள் திறப்பதாய் படிக்கும் வினாடிகளில், அடி வாங்கப்போகிறார்களே என இதயத்துடிப்பு கணிசமாய் கூடுவதை என்னால் உணரமுடிந்தது. 1983ல் குண்டூரில் ஒரு காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது கதை. எங்கோ நடந்த கடைத் திருட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட ரவி, மொய்தீன், நெல்சன் மற்றும் குமார் (சந்திரகுமார்) ஆகியோரை சிறையில் அடைத்து, தவறை ஒத்துக்கொள்ளும்படி அடித்து சித்திரவதைப்படுத்துவது தான் முழுக்கதையும். மொழி தெரியாத ஊரில், போதுமான தண்ணீரோ சாப்பாடோ கிடைக்காமல், மலம் கழிக்க இயலாமல், லட்டியால் விளாசும் அடிகளை வாங்கி அலறும்போதெல்லாம்.. ஒவ்வொரு முறை சிறைக்கதவு தி