Posts

Showing posts from November, 2011

மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..

Image
மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது. “மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன் / காதலியாக, கணவன் / மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இர

செல்போன் பேச நடுரோடு சிறந்த இடமோ??? உதாரணப் புகைப்படம் இதோ..

Image
காலேல Staff Busக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்ப, நடு ரோட்ல ஒருத்தர் வண்டில போய்கிட்டு இருந்தார்.. திடீருனு போன் வந்துச்சு போல.. அப்படியே வண்டிய நிறுத்திட்டு போன் பேசினார்.. பின்  எந்த ரியாக்சனும் இல்லாம கிளம்பிட்டாரு. (இடம்: மதுரை டிஸ்ட்ரிக்ட் கோர்ட் எதிரில், ட்ராபிக் போலீஸ் கண்முன் தான்) இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க.. . (குறிப்பு : ரெண்டு பக்கமும் வாகனங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால வண்டி நிக்குற மாதிரி தெரியும். படத்துல, அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடிகிட்டு இருக்கு) . .

சில கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்..

Image
 

ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..

Image
இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய்டுச்சு. ஆண் பெண் பேதமில்லாம, இணையம் மூலமாவே, (முகம் பார்க்காம கூட) மாசக் கணக்கா பேசி ஒருத்தருக்கொருத்தர் நட்ப வளத்துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர்மறையான விஷயங்கள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்புங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல ஆர்வக்கோளாறுகள் இதுலயே மூழ்கி வாழ்க்கைய கெடுத்துக்குறாங்க. பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர்னு நெறைய நெறைய இணையதளங்கள் மூலமா நமக்குப் புதுப் புது நட்புகள் கிடைக்குது. தற்செயலா, எந்த உள்நோக்கமும் இல்லாம, நட்பின் அடிப்படைல மட்டும் பழகுறவங்க சிலர் இருந்தாலும், தங்களுடைய வக்கிர புத்திக்காக, ஆண்கள் / பெண்கள் யாராவது சிக்க மாட்டாங்களானு வலை விரிக்கிறவங்களும் இருக்காங்க. அப்படி புதுசா அறிமுகமாகுற ஆண் பெண் மத்தியில நடக்குற ச்சாட்டிங்குல, சம்மந்தப்பட்ட ஆண் எப்படியெல்லாம் சாமர்த்தியமா பேச

150 மொக்கை போட்டாச்சு… (ஏதோ என்னால முடிஞ்ச இம்சை..)

Image
இது என்னோட 151வது பதிவு.. இதுவரைக்கும் எழுதுன 150 மொக்கை பதிவுகளையும் பொறுமையா படிச்சுகிட்டு (!!!!) வந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என் நன்றி... நன்றி.. நன்றி.. இனி வருங்காலத்தில் எழுதப்போற கடஞ்செடுத்த பல மொக்கைகளையும் (ஏதோ என்னால முடிஞ்ச இம்சைய குடுக்கணும்ல..) தைரியமாப் படிக்கப் போகிறவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றிகள்.. ம்ம்ம்ம்ம்... ஸ்டார்ட் மியூசிக்.. . .

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Image
1.        குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். 2.        அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது, இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு. 3.        உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்). 4.        அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள். 5.        இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்). 6.        குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொ