Posts

Showing posts from 2014

“மனம்“ - என் பார்வையில்..

Image
மறுஜென்மம் அப்டினு ஏதாவது இருக்குதா? அப்டி இருந்தா திரும்ப பிறக்குறவங்க அதே உருவத்தோட பிறப்பாங்களா? குறிப்பா போன ஜென்ம ஞாபகங்கள் திரும்ப வருமா? முந்தைய ஜென்மத்துல தாங்கள் யாரை நேசிச்சாங்களோ அவங்களை இந்த ஜென்மத்துலயும் அடையாளங்காண முடியுமா? அப்பாவை கண்டுபிடிச்சாச்சு.. அப்டினா அம்மாவும் கிடைப்பாங்கனு தேட ஆரம்பிச்சா சித்ததப்பா, மாமா, தாத்தானு வரிசையா எல்லாரையும் கண்டுபிடிச்சுடலாமா?? இந்த மாதிரியான அறிவியல் கேள்விகளையெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படம் பார்க்க உக்கார்ந்தா போதும்.. “மனம்“ உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த குவியல்னு சர்டிபிகேட் குடுக்கலாம். நாகேஷ்வர்ராவ், நாகர்ஜூனா, நாகசைத்தன்யா மூவரும் நாகசைத்தன்யா, நாகர்ஜூனா, நாகேஷ்வர்ராவ் என்ற வரிசையில் நடித்திருக்கும் திரைக்கதை. ஆரம்பத்துலருந்து பார்க்கலேனா குழப்பம் தெளியிறதுக்குள்ள படம் முடிஞ்சிடும். தன் பெற்றோரான நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவின் மரணத்திற்குப் பின் நாகர்ஜூனா ரொம்ப வருடம் கழித்து அவர்களை அதே உருவில் இளைஞர்களாக காண்கிறார். இருவரையும் காதலர்களாக சேர்த்துவைக்க முயற்சி செய்து, கடைசியில் அவர்களுக்கே முன்ஜென்ம ஞாபகம் வந்து கட்ட

Bungee jumping of their own - என் பார்வையில்..

Image
காதலுக்கு பாலின வேறுபாடு அவசியமில்லை .. . ஆழ்மனதில் அதை உணர்ந்தாலே போதும் என சொல்ல முயற்சித்திருக்கும் கதை. (கொஞ்சம் மறுஜென்ம சாயலும்). பயமும் ஆர்வமும் கலந்த பால்ய அழகான காதல், பிரியமான காதலி, அவர்களுக்குள்ளான ரம்மியமான ஊடல், திடீரென விபத்தில் அவள் மரணம்.. ஒரு மெல்லிய இசையை கேட்டுமுடிக்கும் தருவாயில் தோன்றும் பாரத்துடன் ஆரம்பிக்கிறது படத்தின் பிற்பாதி. நாயகன் ஆசிரியராய் சேரும் பள்ளியில், தன் இறந்துபோன காதலியை நினைவுபடுத்தும் ஒரு மாணவன். காதலியை ஒத்திருக்கும் அவனது பேச்சுக்களும் படம்வரையும் திறனும், பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு அவனைநோக்கியதான ஓர் உந்துதலை ஏற்படச்செய்கிறது. // After I'm born again, I'm going to look for you. And when I do, I'll fall in love with you again. Really? But how will you know if it's me in my next life? I'll recognize you. I'll know. How? I'm going to fall in love again with someone else. That person will be you. // காதலின் அழுத்தத்தை கவிதையாய் சொல்லிச்செல்லும் காட்சி இது. ஓரின

செல்போன்..

Image
“என்னக்கா இந்நேரம் வந்துருக்கீங்க?“ சட்டை பட்டனை போட்டுக்கொண்டே கேட்ட பக்கத்துவீட்டு சாரதியிடம் தயங்கியபடி விஷயத்தை சொன்னேன். சிரிப்பா ஏளனமாவெனப் புரிந்துகொள்ள முடியாதபடி புன்னகைத்தான். “இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்கக்கா. கண்டுக்காம விட்ருங்க“ சொன்னவனை நிமிர்ந்து பார்த்தேன். இவனுக்கு நான்பட்ட அவமானம் புரியவில்லை. “உன்னால எனக்கு உதவ முடியுமா முடியாதானு மட்டும் சொல்லு“ “ம்ம் சரிங்கக்கா. உங்களுக்காக பண்றேன். ஆனா எனக்கென்னவோ இது தேவையில்லாத வேலைனு தோணுது.“ கடைசி வார்த்தையை கவனிக்காதவளாய் “எட்டு மணிக்கு வாங்கிவச்சுடுவேன். சரியா காலேல எட்டரைக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடு.“ என்றவாறு வீடுவந்து சேர்ந்தேன். இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. ச்சே.. எல்லாம் அந்த சந்திராவால் வந்தவினை.  நான்குநாட்களாக வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்தவள் இன்று நேரடியாகவே பேசிவிட்டாள். இருக்கட்டும். நாளைக்கு நான் யார்னு காட்டுறேன். மறுநாள் சரியாய் ஏழு மணிக்கு செல்லதுரை வீட்டுக் கதவை தட்டினேன். அவர் மனைவியின் பலத்த சிபாரிசு என்பதால் அதிகம் கேள்வி கேட்காமல், பொருள் பத்திரம் என்றும் சாயந்திரம் ஒப்படைத்

தீராத பசிகொண்ட விலங்கு..

வாழ்வின் ஸ்வாரஸ்யமான அனுபவங்களை தொகுப்பாக வெளியிடுவதென்பது எழுத்தாளர்களுக்கேயுரிய பெருஞ்சவால். நூலிழையில் அது தற்பெருமையாகவோ, சுயசொரிதலாகவோ அமைந்துவிடக்கூடும். இதைத் தவிர்த்திடவே சிறுகதைத் தொகுப்புகள் என்ற பேர்வையில் ஆங்காங்கே அரிதாரமிட்டு சம்பவங்களை எழுதித் தள்ளுவர் சிலர். அவற்றில் பத்தில் நான்கு கதைகள் படிப்பவர் மனதை ஆட்கொண்டாலே பெரிய விஷயம் தான். வாழ்வில் இடம்பெறும் மிகச்சாதாரண சம்பவங்களில் கிடைக்கும் அசாதாரண அனுபவங்களின் தொகுப்புகளுக்கு பாவண்ணன் எழுதிய “தீராத பசி கொண்ட விலங்கு“ நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் இடம்பெறுபவர்கள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சட்டென காணாமற் போகும் மனதில் பதிந்த மனிதர்கள் தான். தினமும் நாம் கடந்து செல்லும் மரத்திலிருந்து மனிதர்கள் வரை ஏதோ ஒன்று நம்மை எந்தவகையிலோ பாதித்து பதிந்து செல்கின்றன. அவற்றிற்கான தேடல்களும் ஏக்கங்களும் புத்தகம் முழுக்க நிறைந்து கலந்திருக்கின்றது. இருபத்தி மூன்று (வெவ்வேறு) சம்பவங்களின் தொகுப்புகள் அடங்கிய இப்புத்தகத்தில் என்னை இரண்டாவதாய் படிக்கத் தூண்டிய பகுதியெனில் “நெருங்க முடியா இடைவெளி“ தான். தந்தைக்கும் மகனுக்குமா

துருப்பிடித்த நேயம்..!

Image
சடுதியில் விலகிச்செல்லும் பைத்தியக்காரனின் அருகாமையென இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை.. ! நின்று நிதானமாய் எதையும் ரசித்திட அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை.. ! பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில் முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்... ! வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில் லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில் துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்.. ! காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு வேறேதும் செய்வதற்கில்லை நாம்.. ! வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது வாழ்வதற்கான முகாந்திரங்கள்.. !! . .

“Highway” – என் பார்வையில்..

Image
Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான். சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt . எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார். Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலிய

“அவன்-அது=அவள்“ - என் பார்வையில்..

Image
மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்வை வெட்டவெளிச்சமாய் தன் எழுத்துக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியதற்கே பாலபாரதியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். “அவன்“ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும் அப்படியே எழுத்தின் வடிவாய் தந்திருக்கிறார் எழுத்தாளர். கதையில், மூன்று சம்பவங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. கூவாகத்துக்குப் போகிற வழியில் நான்கு பேர் ஆசணவாய் மூலம் அவளைக் கற்பழிக்கும் காட்சி, காவல் நிலையத்தில் எத்தவறுமே செய்யாமல் கைது செய்யப்பட்டு ஆடைகள் உருவப்பட்டு அடி வாங்கும் காட்சி, இறுதியாய் ஆணுறுப்பை கத்தியால் அறுக்கும்போது அவள் அலறும் காட்சி... எழுத்தாளரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட, இம்மாதிரியான மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படவே தோன்றுகிறது. நாயகி ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் அ

கோலி சோடா - என் பார்வையில்..

Image
“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை. நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான். பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க. “தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு. “ ATM ன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நம

தலைப்புகளில்லா கட்டுரைகள்..!

Image
“என்ன கட்டுரை யோசிச்சு வச்சிருக்க?“ கேட்ட சத்யாவிடம் வெறுமையாய் உதடு பிதுக்கினேன். “எவ்வளவு யோசிச்சாலும் தலைப்பே கிடைக்க மாட்டீங்குது“ கவலையாய் பதில் சொன்னேன். “வீட்லயே உக்காந்திருந்தா சரிவராது. கொஞ்சம் நடந்துட்டு வரலாம் வா“ என்றாள். எனக்கும் சரியெனப்படவே கிளம்பினோம். விடிந்தால் கட்டுரைப்போட்டி. பரிசு வாங்கவில்லையெனினும் நல்ல கட்டுரையென்று தோழமைக்குள் பேர் வாங்குமளவுக்காவது எழுதி விடுவதுண்டு. இம்முறை அதுவுமில்லை. இரவுக்குள் கட்டாயம் யோசித்திட வேண்டும். இல்லையெனில் மானம் போய்விடும். இருவருமாய் ஏதேதோ பேசிக்கொண்டு நடந்தாலும் மனம் மட்டும் கட்டுரைக்கான தேடலையே சுற்றிச்சுற்றி வந்தது. “ஏய்.. என்ன யோசனை? எழுத முடியலனா விட்டுத்தள்ளு. அதுக்கு ஏன் பேய் பிடிச்சது மாதிரி நடந்து வர்ற?“ என்றவளிடம் “எழுதிடுவேன். பேசாம வா“ என்றேன். “குழந்தைத் தொழிலாளர்..“ “பாலியல்..“ “திருநங்கைகள்..“ “தலைமுறை இடைவெளி..“ மனதினுள் உருப்போட்டுக்கொண்டே வந்த சிந்தனையை சட்டென ஒரு குவியலுக்குள் நிறுத்தியது அக்காட்சி. பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பெண், இடுப்பில் குழந்தையுடன் கையில் பெரிய பையுடன் இறங

மரம்.. பறவை.. நான்.. நீங்கள்..!

Image
ஏதாவது கதை சொல்லேன் எனும்போதெல்லாம் ஏனோ உடன்வந்தமர்கிறது இயல்பு தொலைத்த பெருங்கதையொன்று.. எனக்கான கதைகளில் வழக்கமாய் அதனதன் இயல்பிலிருக்கவே முனைகின்றன அத்தனையும்.. மரம் மரமாக.. பறவை பறவையாக.. நான் நானாக.. பின் நீங்களும்.. என இயல்பிலிருப்பதாய் ஒரு கதை சொல்லத் துவங்குகிறேன் நான்..! .