Posts

Showing posts with the label பி சீரியஸ்

டல்லடிக்கும் பதிவுலகம்..

Image
கிட்டத்தட்ட தலைப்ப வச்சே நா என்ன சொல்ல வரேன்னு முடிவு பண்ணிருப்பீங்க.. அதுக்காக என்னால சொல்லாம போக முடியாது. மாற்றம்குறது மனுஷனோட இயல்பு தான். அதுக்காக ஒரு விஷயத்துல இருந்து இன்னொரு விஷயத்துக்கு மாறும்போது பழச மறந்துடக் கூடாது. இது பொதுவா யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். இத பதிவர்களுக்கு கட்டாயம் சொல்லியே ஆகணும். (எனக்குத் தெரிஞ்சு) ஒரு ஆறுமாசமா பதிவுலகத்துல என்ன நடக்குதுனே புரியல. நல்லா எழுதிகிட்டிருந்த பதிவர்களெல்லாம் எங்க போனாங்கனே தெரியல. ஏதோ ஒண்ணு ரெண்டு பிரபல பதிவர்கள தவிர மத்த பதிவர்கள் பெரும்பாலானவங்க எழுதுறத குறைச்சுட்டாங்க. கேட்டா பிஸிங்குறாங்க. சிலருக்கு வேலை மாற்றம், சிலருக்கு குடும்ப வாழ்க்கை, வேறு சிலருக்கு தொழில்“னு என்னென்னவோ காரணம் சொல்றாங்க. ஆனா எல்லாத்துக்கும் மூல காரணம் “ஆர்வம் குறைஞ்சது“ தான்னு சொல்லணும். முன்னாடியெல்லாம் ஒரு பதிவு எழுதினா, அதுக்கு விமர்சனங்களும் மாற்றுக்கருத்துகளும் சரமாரியா வரும். காரசாரமான விவாதங்களை முன்வச்சு பதிவுகள்ல விவாதம் பண்ணுவாங்க. ஆனா இப்ப? நா லு வரி கவிதை, இல்லனா ஒரு ஜோக் , அதுவுமில்லைனா மொக்கை திரைப...

கருப்பா இருக்கீங்களா?? கர்வமா இருங்க..

Image
நேத்து டிவில முக க்ரீம் விளம்பரம் ஒண்ணு பார்த்தேன். எவ்ளோ தான் யோசிச்சாலும் க்ரீம் பேரு நினைவுக்கு வர மாட்டீங்குது. இத்தனை நாள் சிகப்பா மாறுவதற்குனு விளம்பரம் செஞ்சுகிட்டிருந்தாங்க. ஆனா இந்த விளம்பரத்துல “கண்ட கண்ட க்ரீம் உபயோகிச்சதால வெளுத்துப்போன மாதிரி இருக்குற சிகப்பு நிறத்தை, அழகான சிகப்பு நிறமா மாத்துவோம்“னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அத பாக்கும்போது வேடிக்கையா இருந்துச்சு. நம்மள்ல பலர், கருப்பா இருக்குறவங்க சிகப்பாகணும்னு ஆசைப்பட்றாங்க. சிகப்பா இருக்குறவங்க இன்னும் சிகப்பாகணும்னு முயற்சி எடுக்குறாங்க. கருப்பு நிறத்தை பெரும்பாலும் யாரும் விரும்புறதே இல்லை. அது அசிங்கமான ஒரு அடையாளமா தான் சமுதாயத்துல நினைக்கிறாங்க. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது கூட வெளி அழகு தான் முதல் கன்டிஷனா இருக்குது. பொண்ணு கருப்பா இருக்குதுனா, வாய்கூசாம வரதட்சணைல பத்து பவுன் நகை ஜாஸ்தியா கேக்குற மாப்பிள்ளை வீடுகளும் உண்டு. அதுக்கு விதியேனு நெனச்சு சம்மதிக்கிற பெத்தவங்களும் இருக்காங்க. குழந்தை சிகப்பா பொறக்கணும்னு குங்குமப்பூவை அள்ளி சாப்பிட்ற தாய்மார்கள் நம்ம ...