Posts

Showing posts with the label விமர்சனம்

The LunchBox - என் பார்வையில்..

Image
உங்களைச் சுற்றி யார் யாரோ இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை உங்களை சூழ்வதுபோல யோசித்திருக்கிறீர்களா ? நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்மை நேசிக்க , நமக்கே நமக்கென யாருமே இல்லையென்ற சூன்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா ? சட்டென உங்களுக்காய் , உங்களைப் புரிந்துகொண்ட ஒரு நட்பு கிடைத்தால் சந்தோசப்படுவீர்கள் தானே! அப்படியெனில் The Lunchbox திரைப்படத்தின் இரு மையக் கதாப்பாத்திரங்களையும் நிச்சயம் உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பக்கம் , பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டு தனக ்கென தனிமையை உருவாக்கிக்கொண்டிருக்கும் Saajan கதாப்பாத்திரம். இன்னொரு புறம் , கணவனின் அன்பு கிடைக்காமல் சதா அடுப்பங்கறையிலேயே காலத்தைக் கழிக்கும் Ila கதாப்பாத்திரம். வெவ்வேறு உலகம் சார்ந்த இவர்களை இணைக்கும் இரண்டு விசயங்கள்.. ஒன்று தனிமை , மற்றொன்று Lunch box. தன் கணவனுக்கென அனுப்பிய மதிய சாப்பாடு தவறுதலாக இன்னொரு நபருக்கு கிடைப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம் , பின் டிபன் பாக்சிஸ் வைத்து அனுப்பப்படும் நான்கு வரிக் கடிதத்தில் தொடர்கிறது. தன் கடந்த காலங்கள் , எதிர்பார்ப்புகள்.. என ஒருவருக்கொருவர்...

CITY LIGHTS - என் பார்வையில்..

Image
கடைவீதிகளில் பெரிய பெரிய ஜவுளிக்கடைகள் அமைந்திருக்கும் தெருக்கள் அருகில், ஆள் அரவமற்ற கட்டிடமாய் சிறிய சிறிய துணிக்கடைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அக்கடைகளின் வாசலில் யாராவது வடிக்கையாளர்கள் வருகிறார்களா? வரமாட்டார்களா..! என எதிர்பார்த்தபடியே குத்தவைத்து காத்திருக்கும் கடைப் பையன்களை சில நேரம் நாம் கடந்திருப்போம். அதுபோல் ஒரு பையனை நினைவுபடுத்தும் வகையில் ஓர் அப்பாவி கதாப்பாத்திரத்தில் மிகச்சகஜமாய் பொருந்திப் போகிறார் ராஜ்குமார் ராவ். கடை வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் அவருடைய மேனரிசம் கடைசி வரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. திருடச் சொல்லி வற்புறுத்தும் நண்பனை எதிர்க்க முடியாத சூழலிலும், தன் மனைவி க்ளப்பில் நடனமாடும் வேலை  செய்கிறாள் எனத் தெரிய வரும் காட்சியிலும் குத்தவைத்து அழும்போது மனதை நிறைக்கிறார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த பரிதாபங்களையும் அள்ளிக்கொள்கிறார். தொழிலில் எவ்வித வருமானமுமின்றி கடன் தொல்லைகள் அதிகரிப்பதால் நகரத்திற்கு குடும்பத்துடன் புலம்பெயரும் ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் நடக்கும் துயரங்களை தொ...

Bungee jumping of their own - என் பார்வையில்..

Image
காதலுக்கு பாலின வேறுபாடு அவசியமில்லை .. . ஆழ்மனதில் அதை உணர்ந்தாலே போதும் என சொல்ல முயற்சித்திருக்கும் கதை. (கொஞ்சம் மறுஜென்ம சாயலும்). பயமும் ஆர்வமும் கலந்த பால்ய அழகான காதல், பிரியமான காதலி, அவர்களுக்குள்ளான ரம்மியமான ஊடல், திடீரென விபத்தில் அவள் மரணம்.. ஒரு மெல்லிய இசையை கேட்டுமுடிக்கும் தருவாயில் தோன்றும் பாரத்துடன் ஆரம்பிக்கிறது படத்தின் பிற்பாதி. நாயகன் ஆசிரியராய் சேரும் பள்ளியில், தன் இறந்துபோன காதலியை நினைவுபடுத்தும் ஒரு மாணவன். காதலியை ஒத்திருக்கும் அவனது பேச்சுக்களும் படம்வரையும் திறனும், பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு அவனைநோக்கியதான ஓர் உந்துதலை ஏற்படச்செய்கிறது. // After I'm born again, I'm going to look for you. And when I do, I'll fall in love with you again. Really? But how will you know if it's me in my next life? I'll recognize you. I'll know. How? I'm going to fall in love again with someone else. That person will be you. // காதலின் அழுத்தத்தை கவிதையாய் சொல்லிச்செல்லும் காட்சி இது. ஓரின...

“Highway” – என் பார்வையில்..

Image
Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான். சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt . எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார். Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலிய...

கோலி சோடா - என் பார்வையில்..

Image
“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை. நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான். பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க. “தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு. “ ATM ன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நம...

“லண்டனில் சிலுவைராஜ்“ – பயணக் கட்டுரை

Image
பயணக்கட்டுரை என்பதாலோ என்னவோ , வழக்கமான நடையில் அங்க போனேன்... அதப் பாத்தேன்.. இங்க போனேன். இதப் பாத்தேன்னு நிறைய வரலாறும் கொஞ்சம் சொந்த அனுபவமும் இருக்கு. தமிழ்நாட்டுலருந்து தன் மகள் மருமகனைப் பார்க்கப்போகும் தம்பதிகள்.. தந்தையான சிலுவைராஜின் பார்வையிலிருந்து லண்டன் மாநகரத்தைப் பற்றி வரையறுக்கும் புத்தகம் இது. ஆங்காங்கே நம் கலாச்சாரம் , மக்கள் , உணவு போன்றவற்றுடன் லண்டனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள். எந்தப் புத்தகத்தையும் வரிவிடாம படிச்சிடுவேன். ஆனா இதுல , பாதி வரைக்கும் படிச்சேன். முழுசாப் படிக்க மனசும் பொறுமையும் வரமாட்டீங்குது. கடைசி இரண்டு பக்கத்துக்கு தாவிட்டேன். அதாவது ஐம்பது நாள் லண்டனில் கழித்துவிட்டு , மறுபடியும் நம்ம ஊருக்கு வந்து “ அப்பாடா “ னு ஐக்கியமாகுற முடிவு எப்படியிருக்கும்னு படிச்சுட்டு , மூடி வச்சுட்டேன்.   புத்தகம் முழுக்க லண்டன் பற்றிய வர்ணிப்பும் அங்கலாய்ப்பும் நிறைந்திருக்கிறது. ஒரு சில நாம் அறியாத புதிய தகவல்களும் உள்ளடங்கியிருக்கு. சில இடங்கள்ல அவங்களை உயர்த்தி நம்மளை மட்டம் தட்டுறார். சில இடங்களில் தலைகீழாய்..! ஒருவேளை , நான் லண்டன் போ...

Life is Beautiful - என் பார்வையில்..!

Image
முன்வழுக்கை, ஒட்டிய கன்னங்கள், சற்றே குள்ளமாய் ஒடிசலான உருவம்.. இதுவே  Life is Beautiful   படத்தின் நாயகன் Roberto Benigni யின் தோற்றம். சராசரிக் கதாநாயகனுக்குரிய எந்தவிதமான ஹீரோயிசமுமின்றி படம்முழுக்க நம் மனதில் நிறைந்து நிற்கிறார். ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து இவர் முகத்திலிருக்கும் புன்னகை, இறுதிவரை சற்றும் குறையாமல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ( படத்தினை எழுதி இயக்கியவரும் இவரே..!). வாழ்க்கையை, எந்த சூழலிலும் பாஸிடிவ்வாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது திரைப்படம். காதலன் , கணவன் , தகப்பன் என முப்பரிணாமத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் . ஒரு காட்சியில் , இசைநாடகம் நடந்துகொண்டிருக்கும் அரங்கத்தில் பால்கனியிலிருக்கும் காதலியை , கீழிருந்து திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார் ஹீரோ . அப்போது, நாயகனுக்கு பக்கத்து இருக்கைப் பெண் இவரை முறைத்ததும் , எனக்கு வலதுபக்க காது தான் கேட்கும் . அதனால் அவ்வாறு திரும்பி உட்கார்ந்திருப்பதாக கூறி சமாளிப்பார் . ஹய்ய்ய்யோ ... செம சீன் அது . இ...