Posts

Showing posts from December, 2013

“லண்டனில் சிலுவைராஜ்“ – பயணக் கட்டுரை

Image
பயணக்கட்டுரை என்பதாலோ என்னவோ , வழக்கமான நடையில் அங்க போனேன்... அதப் பாத்தேன்.. இங்க போனேன். இதப் பாத்தேன்னு நிறைய வரலாறும் கொஞ்சம் சொந்த அனுபவமும் இருக்கு. தமிழ்நாட்டுலருந்து தன் மகள் மருமகனைப் பார்க்கப்போகும் தம்பதிகள்.. தந்தையான சிலுவைராஜின் பார்வையிலிருந்து லண்டன் மாநகரத்தைப் பற்றி வரையறுக்கும் புத்தகம் இது. ஆங்காங்கே நம் கலாச்சாரம் , மக்கள் , உணவு போன்றவற்றுடன் லண்டனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள். எந்தப் புத்தகத்தையும் வரிவிடாம படிச்சிடுவேன். ஆனா இதுல , பாதி வரைக்கும் படிச்சேன். முழுசாப் படிக்க மனசும் பொறுமையும் வரமாட்டீங்குது. கடைசி இரண்டு பக்கத்துக்கு தாவிட்டேன். அதாவது ஐம்பது நாள் லண்டனில் கழித்துவிட்டு , மறுபடியும் நம்ம ஊருக்கு வந்து “ அப்பாடா “ னு ஐக்கியமாகுற முடிவு எப்படியிருக்கும்னு படிச்சுட்டு , மூடி வச்சுட்டேன்.   புத்தகம் முழுக்க லண்டன் பற்றிய வர்ணிப்பும் அங்கலாய்ப்பும் நிறைந்திருக்கிறது. ஒரு சில நாம் அறியாத புதிய தகவல்களும் உள்ளடங்கியிருக்கு. சில இடங்கள்ல அவங்களை உயர்த்தி நம்மளை மட்டம் தட்டுறார். சில இடங்களில் தலைகீழாய்..! ஒருவேளை , நான் லண்டன் போகவேண

கையாலாகாதவர்கள்..!

Image
“உனக்கென்ன.. அரசாங்க அலுவலகத்துல வேலை. போய்ட்டு வர்றதுக்கு ஸ்டாஃப் பஸ் வேற. 9 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் கம்யூட்டர் முன்னாடி உக்காந்து ஒப்பேத்திக்கிட்டு கிளம்புவ. குடுத்துவச்ச மகராசி..“ நிறையபேர் அடிக்கடி இப்படி சொல்வதை கவனிச்சிருக்கேன். அரசாங்க அலுவலகம் என்றாலே ஏதோ வெட்டிப்பொழுது போக்கிட்டு பொழுதைக் கழிப்பவர்களென பொதுவான கருத்து இருக்கு. அங்கேயும் மாங்கு மாங்குனு வேலை பாத்துகிட்டு, சிடுசிடுக்கும் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிகிட்டு நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காலிகப் பணியாளர்கள்னு ஒரு வகை அரசாங்கத்துல இருக்குங்குறது பரவலா வெளியிலருந்து பாக்குற யாருக்கும் தெரியிறது இல்ல. அதாவது கம்மியான சம்பளத்துலயோ அல்லது தினக்கூலி அடிப்படையிலயோ ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை பாக்குறாங்க. அதிகபட்சமாய் மூவாயிரம் கூட சம்பளம் வாங்க இயலாத இவர்கள், நாட்கள், மாதங்கள் என்பதைக் கடந்து, பல வருடங்களாய் தங்கள் பணி நிரந்தரமாகுமென கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். இதில் சாதாரண துப்புறவு தொழிலாளர்ல ஆரம்பிச்சு, டிரைவர், ப்ளம்பர், கார்பென்டர், பியூன்.. என பட்டியல் நீண்டுகொண்டே போகும். (எனக்குத் த