Posts

Showing posts from September, 2015

Kon-Tiki - என் பார்வையில்..

Image
“ கடலுக்குள் ஒரு சாகசப் பயணம் “ இந்த ஒற்றை வரியினுள் உயிர் பிழைப்பதற்கான விளிம்பு நிலை சந்தர்ப்பங்கள் எத்தனை அடங்கியிருக்கிறது!! கடற்கரையில் அலைகளை வேடிக்கை பார்த்து சிலிர்க்கும் அதே நேரம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. காற்றால் மட்டுமே இயங்கும் மரத்தாலான படகு , சுற்றிலும் சுறாக்களும் திமிங்கலங்களும் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் உணவு , சில நண்பர்கள் , அதோடு சுமார் 4000 மைல்களை கடந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கைவசம் இருக்கிறது. இது தான் Kon-Tiki . பிரபஞ்சத்தி ற்கு அடுத்ததாக ஆச்சர்யங்கள் நிறைந்ததெனில் அது கடல் தான். இன்னும் இன்னும் என எத்தனை தேடினாலும் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்றதொரு சாகசப் பயணத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது திரைப்படம். “ Cast away”, “Life of Pi ” திரைப்படங்கள்போல் வழி தவறி கடலுக்குள் மாட்டிக்கொள்வதாக அல்லாமல் , திட்டமிட்டே ஒரு ஆராய்ச்சிக்கென தன் குடும்பத்தைப் பிரிந்து மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஸ்வாரஸ்யங்கள். படகின் அடிப்பகுதி கொஞ்சங்கொஞ்சமாய் கரைந்துகொண்டே வருவதாய் கூறும்போது , இவர்கள் சீக்கிரம்

Extremely Loud & Incredibly Close - என் பார்வையில்..

Image
தந்தையின் மரணத் தருவாயினுடைய கடைசி நொடிகளை தெரிந்தே தவறவிடுவதன் குற்ற உணர்ச்சி , ஒரு சிறுவனை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தான் “Extremely Loud & Incredibly Close”. படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் ஒரு கதாப்பாத்திரம்.. கேட்கப் பொறுமையிருந்தால் நிச்சயம் அவன் பேசுவதன் வலி நமக்குப் புரியும். ட்வின் டவர் வீழ்ந்த 9/11 சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை. ஒரு விபத்தை வெறும் செய்தியாக மட்டுமே வேடிக்கை பார்ப்பவர்களுக்கு , அதே விபத்தில் தனக்கே தனக்கான ஏதோ ஒன்றை இ ழந்து தவிக்கும் முகம் தெரியாத யாரோ ஒருவருடைய இழப்பை புரிய வைக்க முயற்சித்திருக்கின்றனர். தந்தையின் மரணத்திற்குப் பின் தற்செயலாய் கைக்குக் கிடைக்கும் சாவியை வைத்துக்கொண்டு அதன் மூலத்தை தேடிப் புறப்படும் சிறுவன் , ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது பார்த்து மிரண்டு ஓடும்போது சில நேரம் நம்மையும் பிரதிபலித்துச் செல்கிறான். Tom Hanks, Sandra Bullock வழக்கம்போலவே கதாப்பாத்திரம் உணர்ந்த நடிப்பு. வாய்பேச முடியாத தாத்தா க்ளாசிக் படைப்பு. அறிமுகமில்லாத சாவியின் உரிமையாளரிடம் தன் தவறுக்கான பாவமன்னிப்பு கேட்டு அழும

விட்டுச் சென்ற ஏதோ ஒன்று..

Image
அழத் திராணியற்று அலமாறிக்குள் திணிக்கப்பட்டுக் கிடக்கும் அவ்வார்த்தைகள் சொல்வதற்கு எதையோ மிச்சம் வைத்திருக்கின்றன. கொத்தித் திங்கும் நினைவுப் பருந்திற்கு ஓடி ஒளியும் ரண மாமிசங்கள். தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அழைப்பான்களை அறுத்தெறிந்து மெளனத்தின் பேரிரைச்சலுக்குள் புதைந்துகொண்டே.. சதா புகைந்துகொண்டே இருக்கிறது தீர்ந்துவிட்ட சொற்களின் குளிர்ச்சி. அடித்து அடித்தே தோலுரித்த சாட்டையாய் தழும்புகளை அடையாளப்படுத்திப் போகின்றன அப் பிரியங்கள். விட்டுச்சென்ற ஏதோ ஒன்று விழுங்கிக் கொண்டிருக்கிறது எல்லாவற்றையும். .

The Fault in our Stars - என் பார்வையில்..

Image
ஒன்றிலிருந்து பத்துக்குள் நமக்கு ஏற்படும் வலிகளை அளவிடச் சொன்னால் நாம் என்ன செய்வோம் ? அதிகபட்சமாய் ஒன்பது வரைக்கும் காட்டுவோம் தானே ? ( எப்போதாவது பத்தையும்). அந்தக் கடைசி பத்தாவது எண்ணை நாம் சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். அதாவது பத்துக்கு பதிலாய் ஒன்பது என்றே குறிப்பிட்டுக் கொண்டிருப்போம். அந்த மன தைரியம் தான் ”The Fault in our Stars ” திரைப்படத்தின் அடித்தளம். மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் வெவ்வேறு விதமான புற்றுநோயாளிகளுடைய உணர்வுகளை ஒரு வயலின் இசை போல உணரச் செய்திருக ்கிறார்கள். அந்த மெல்லிய காதல் , நட்பு , தன்னம்பிக்கை , போராட்டம் அனைத்துமே பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கின்றன. “I willed myself to imagine a world without us... and what a worthless world that would be. ” ( நம்மை இழக்கும் இந்த உலகம் எவ்வளவு பயனற்றதாகிறது!) ” You put the thing that does the killing right between your teeth.. but you never give it the power to kill you.” ( உன்னை கொல்லும் விஷயத்தை மிக நெருக்கமாக வைத்துக்கொள் , ஆனால் உன்னைக் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பை அதற்கு வழங்கிடாதே!) “The world i

The LunchBox - என் பார்வையில்..

Image
உங்களைச் சுற்றி யார் யாரோ இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை உங்களை சூழ்வதுபோல யோசித்திருக்கிறீர்களா ? நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்மை நேசிக்க , நமக்கே நமக்கென யாருமே இல்லையென்ற சூன்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா ? சட்டென உங்களுக்காய் , உங்களைப் புரிந்துகொண்ட ஒரு நட்பு கிடைத்தால் சந்தோசப்படுவீர்கள் தானே! அப்படியெனில் The Lunchbox திரைப்படத்தின் இரு மையக் கதாப்பாத்திரங்களையும் நிச்சயம் உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பக்கம் , பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டு தனக ்கென தனிமையை உருவாக்கிக்கொண்டிருக்கும் Saajan கதாப்பாத்திரம். இன்னொரு புறம் , கணவனின் அன்பு கிடைக்காமல் சதா அடுப்பங்கறையிலேயே காலத்தைக் கழிக்கும் Ila கதாப்பாத்திரம். வெவ்வேறு உலகம் சார்ந்த இவர்களை இணைக்கும் இரண்டு விசயங்கள்.. ஒன்று தனிமை , மற்றொன்று Lunch box. தன் கணவனுக்கென அனுப்பிய மதிய சாப்பாடு தவறுதலாக இன்னொரு நபருக்கு கிடைப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம் , பின் டிபன் பாக்சிஸ் வைத்து அனுப்பப்படும் நான்கு வரிக் கடிதத்தில் தொடர்கிறது. தன் கடந்த காலங்கள் , எதிர்பார்ப்புகள்.. என ஒருவருக்கொருவர்

CITY LIGHTS - என் பார்வையில்..

Image
கடைவீதிகளில் பெரிய பெரிய ஜவுளிக்கடைகள் அமைந்திருக்கும் தெருக்கள் அருகில், ஆள் அரவமற்ற கட்டிடமாய் சிறிய சிறிய துணிக்கடைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அக்கடைகளின் வாசலில் யாராவது வடிக்கையாளர்கள் வருகிறார்களா? வரமாட்டார்களா..! என எதிர்பார்த்தபடியே குத்தவைத்து காத்திருக்கும் கடைப் பையன்களை சில நேரம் நாம் கடந்திருப்போம். அதுபோல் ஒரு பையனை நினைவுபடுத்தும் வகையில் ஓர் அப்பாவி கதாப்பாத்திரத்தில் மிகச்சகஜமாய் பொருந்திப் போகிறார் ராஜ்குமார் ராவ். கடை வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் அவருடைய மேனரிசம் கடைசி வரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. திருடச் சொல்லி வற்புறுத்தும் நண்பனை எதிர்க்க முடியாத சூழலிலும், தன் மனைவி க்ளப்பில் நடனமாடும் வேலை  செய்கிறாள் எனத் தெரிய வரும் காட்சியிலும் குத்தவைத்து அழும்போது மனதை நிறைக்கிறார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த பரிதாபங்களையும் அள்ளிக்கொள்கிறார். தொழிலில் எவ்வித வருமானமுமின்றி கடன் தொல்லைகள் அதிகரிப்பதால் நகரத்திற்கு குடும்பத்துடன் புலம்பெயரும் ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் நடக்கும் துயரங்களை தொகுத்