Posts

Showing posts from September, 2012

நட்பொன்று தொலைந்துபோனது..

Image
தூசு தட்டியெடுத்த பழைய டைரிகளில் ஒளிந்திருக்கிறது பால்ய நட்புக்கான பரவலான அடையாளங்கள்..! கவிதையென்றும் காவியமென்றும் என்னென்னவோ கிறுக்கல்கள் தாங்கியபடி நைந்துகிழிந்த தாள்களுள் நியாபகங்கள் நிறைந்திருக்க , ஒவ்வொன்றைத் தொடர்ந்தும் கேள்விகளாய் வந்துபோகிறது.. தொலைந்த நட்புக்கான தேடல்களுக்காய்!! . மெலிதான புன்னகையுடனும் , நலமா ? என்ற கேள்வியுடனும் பதிலுக்குக் காத்திராமல் பகட்டாய்க் கடந்து , யாரென வினவிய துணையிடம் “ கூடப் படிச்சவங்க “ என்ற உன் வார்த்தைகளில் என் நட்பொன்று தொலைந்துபோனது..!! . நமக்குள் “ அண்ணா “ என்ற ஆயுதம் தேவையில்லை..! “ சகோ “ என்ற சமத்துவம் அவசியமில்லை..! “ நண்பன் “ என்பதிலும் “ தோழி “ என்பதிலும் நட்பென்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் .