Posts

Showing posts from May, 2010

என் ஒரு தலைக் காதல்

Image
ஓடும் படகில் துள்ளும் ஒற்றை மீனாய் என் காதல். கதவிடுக்கின் விளிம்பில் கசியும் குளிர்ந்த சாரலாய் என் காதல் சிதறும் உன் பார்வைக்கும் சிலிர்க்கும் சிறு புன்னகைக்கும் ஏங்கும் என் காதல் நிஜம் தொடரும் நிழலாய் நீங்காத தயக்கத்துடன் என் காதல் "காதலோ !!!" என்ற பிற கேலிக்குப் பொய்யாக கோபப்பட்டு ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக என் காதல் முன்வந்தாலும் மூளையைச் சுடும் நட்பெனும் போர்வையாய் என் காதல் நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத வெளிப்படுத்தாத தருணமாய் என் காதல் நெடுங்கால அவஸ்த்தைக்குப் பின் முடிவெடுத்து முன்வந்தது என் காதல் “நேசிக்கிறேன்”. எனக்கு முந்திக்கொண்டு எனைப்பார்த்து உச்சரித்தன உன் உதடுகள். கால்கள் தரையிருக்க காற்றில் பறந்தேன். "ஆம்" என்றேன் தலை குனிந்து. அணைத்துக்கொண்டாய் அருகில் வந்து. காணாமல் போனது என் உலகம் கண்டேன் புதியதாய் கண்முன்னே. ஆனந்தப் பெருமூச்சில்.. உன்மீதான என் காதல்

மனிதன் எனும் மிருகம்

Image
சில சமயங்களில் வார்த்தைகளை விட மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு. அதுபோல சில நேரங்களில் எழுத்துக்களை விட புகைப்படங்கள் நம்மை அதிகமாக பாதிக்கின்றன. இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்களும் அந்த வகையை சேர்ந்தவை தான். எட்டு வயது சிறுவன், சந்தையில் ஒரு ரொட்டித்துண்டை திருடிவிட்டான் என்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இது. மனிதத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது. ஒரே ஆறுதல்… நம் நாட்டில் அல்ல, இது ஈரான் நாட்டில் நடந்த அரக்கத்தனம். மிருகங்கள் கூட நேசிக்கும் தன்மை கொண்டவை. மனிதன் எனும் மிருகம் எப்போது இதை கற்றுக்கொள்ளப் போகிறான்? இந்த புகைப்படங்கள் பாதிக்காத மனிதன் இருக்க முடியாது. உங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது தானே?

எதிலும் நீ இருந்தால்..

Image
உலகமே கைக்குள் அடங்கியதோ..!! என் உள்ளங்கையில் உனது ரேகைகள். எனது தோள்கள் உன் காதுகளுடன் ரகசியம் பேச வேண்டுமாம்.. சற்றே சாய்ந்து கொள்ளேன். நமக்குள் தூரம் கொடுமையடி.. உன் இதழ் தரும் ஈரம் வேண்டுமடி.. என்னைப்போல் உன்னிடத்தில் காதல் கொள்ள எவனும் இல்லை.. எவனும் இல்லை.. என்னிடத்தில் உள்ள உன்னை ஈடு செய்ய எதுவும் இல்லை.. எதுவும் இல்லை.. இனியொரு வரம் வேண்டாம்.. எப்போதும் நீ அருகில் இருந்தால். எதையும் செய்கிறேன்.. எதிலும் நீ இருந்தால்.

கூட்டாஞ்சோறு

Image
குழந்தைப் பருவத்துல கூட்டாஞ்சோறு விளையாடாதவங்களே இருக்க முடியாது.. சின்ன சின்ன விளையாட்டு சாமான் எடுத்துட்டு வந்து எல்லாரும் சேந்து அவங்களுக்கு தெரிஞ்சத சமைக்கிரோம்குற பேர்ல ஏதோ பண்ணி அத பெருமையா ஏதோ சாதிச்சுட்ட மாதிரி நெனச்சு சாப்டுவாங்க.. என்னோட சின்ன வயசுலயும் இந்த மாதிரி நெறைய வாலுத்தனம் எல்லாம் பண்ணிருக்கேன். அப்டி தான் ஒரு நாள் என்னோட பக்கத்து வீட்டுப் பட்டாளங்கள எல்லாம் கூப்டு மீட்டிங் போட்டோம். சமைச்சு விளையாடலாம்னு முடிவு பணினோம். முதல்ல என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சோம். ஆளாளுக்கு ஒன்னொன்னு சொன்னாங்க.. கடைசியா சர்க்கரை பொங்கல் செய்யலாம்னு முடிவு பணினோம். அதுக்கு எனென்ன வேணும்னு பட்டியல் போட்டோம். அரிசி, தண்ணி,சர்க்கரை, அடுப்பு பத்த வைக்க தீப்பெட்டி, அப்புறம் அடுப்பு மாதிரி செட் பண்றதுக்கு மூணு கல்லு, அடுப்பு எரிக்கிறதுக்கு பேப்பர் எல்லாம் கொண்டு வரலாம்னு பிளான் போட்டோம். முக்கியமான விஷயம், இதை எல்லாம் நாங்க வீட்டுக்கு தெரியாம கொண்டு வரணும்.. தெரிஞ்சா குடுக்க மாட்டங்க. அதனால பூனை மாதிரி நடந்து போய் அவங்கவங்க சமையலறைல எடுத்துகிட்டு ஓடி வந்துட்டோம். இந்த பட்ஜெட் பட்டியல்ல எனக்கு