Posts

Showing posts from October, 2012

நான்.. பெயரற்றவள்!!

Image
“சனியனே.. நேரமாகுது எழுந்திரிடீ“ அம்மாவின் சுப்ரபாதத்தை ஏந்தியபடி சோம்பலாய் கண்திறந்து, சாம்பலும் பற்களுமாய் ஆரம்பித்தேன் என் நாளை! சில்லென்ற நீரிலொரு காக்கா குளியலிட்டு, ஒட்டுப்போட்ட பாவாடை சட்டையுமாய் தேநீரென்ற பெயரில் குடித்தேன் ஒரு திரவத்தை..! அவசரமாய்   தலைவாரிப் பொட்டு வைத்து, பழைய கஞ்சியை டப்பாவிலும் வாயிலும் அடைத்தபடி, ஓட்டமும் நடையுமாய் இடம்பெயர்ந்தேன் தொழிற்சாலைக்கு. மேனேஜருக்கு வணக்கத்தையும் மேற்பார்வையாளனுக்கு சல்யூட்டையும் காணிக்கையாக்கி பெருமூச்சுடன் ஆரம்பித்தேன் எனக்கான கடமையை.. கட்டளையிடாத குறையாய் கைகள் பரபரக்க, நக இடுக்கில் கூட புகையிலைகளாய்..!! ஒவ்வொன்றாய் நெம்பி, நிரப்பி, அடக்கி அடுக்கி கட்டுக்களாக்கி நிமிர்ந்தபோது மணியடிக்கவே, ஆளுக்கொரு பக்கமாய் அவரவர் கஞ்சியை எடுத்துக்கிளம்பினர்.. அறைகுறையாய் கைகழுவி, முதற்கவளைக்கு வாய்திறந்தேன்.. உச்சந்தலையில் “நங்“கென்றொரு கொட்டு விழுகவே அலறியடித்துக்கொண்டு எழுந்தேன்... கட்டுக்களின் அளவுகள் மாறுபடுகிறதென அறை விழுந்தது! ஏதேதோ கெட்ட வார்த்தைகள் எனைப்பார்த்துச் சிதறவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்க எட்டிமிதித

தூக்கம் – ஒரு பார்வை

Image
இப்போதைக்கு இருக்கும் சூழலைப் பார்த்தால், இருபத்திநான்குமணிநேர மின்வெட்டை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த இம்சைக்கு நடுவே தூக்கம் என்பதே கஷ்டமான விஷயமாய்டுச்சு. நம்மகிட்ட யாராவது வந்து, “நல்லாத் தூங்கினேன்“னு சொன்னா, நாம சொன்னவனை பொறாமையாகப் பார்க்கிறோம். அந்த தூக்கத்தைப் பற்றி, நான் படித்த ஒரு சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்குறேன். சாதாரணமாய் தூக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று டீப் ஸ்லீப் ( Deep Sleep)   எனப்படும் Orthodox Sleep.   மற்றொன்று ( Dreaming Sleep ) ட்ரீமிங் ஸ்லீப் எனப்படும் பாரடாக்ஸியல் ஸ்லீப் ( Paradoxial Sleep) . இந்த பாரடாக்ஸ் எனப்படும் நிலையில், உள்மனம் அரைகுறை விழிப்பு நிலையில் இருக்கும். கண் மூடி இருந்தாலும், உள்ளுக்குள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும். இதைத்தான் REP (Rapid eye movement)   என்பார்கள். ஆர்தடாக்ஸ் தூக்கம் NREP (Non rapid eye movement) எனப்படும் . நமது மொத்த தூக்கத்தில் 20 சதவிகித்த்தை பாரடாக்ஸ் ஸ்லீப்பும் 80 சதவிகித தூக்கத்தை ஆர்தடாக்ஸும் பங்கு போட்டுக் கொள்கின்றன. தூக்க நிலையில் இரண்டும் மாறி மாறி வருகின்றன. த

எங்க ஆபீசர் அறிவாளியாக்கும்ம்ம்..

Image
அலுவலகத்துல நிரந்தரப்பணியாளர்களோட அடிப்படை சம்பளம், இன்க்ரிமென்ட், DA, HRA எல்லாத்தையும் விவரமா டைப் பண்ணி, சமீபத்துல இன்க்ரிமெண்ட் வாங்கின தொகையையும் சேர்த்து, ரிப்போர்ட் அனுப்பசொல்லியிருந்தாங்க. Word ல டைப் பண்ணினா கால்குலேசன் பண்றதுக்கு கஷ்டமாயிருக்கும்னு நா அதையெல்லாம் Excel ல டைப் பண்ணேன். கூட்டல் மற்றும் சதவிகிதக் கணக்கையெல்லாம் ஃபார்முலா உபயோகிச்சு ஒரு மணிநேரத்துல முடிச்சுட்டு ஆபீசர்கிட்ட சொன்னேன். சரிபார்க்குறேன்னு வாங்கிப்பார்த்தவர், கால்குலேட்டரை எடுத்து ஒவ்வொண்ணா கணக்குப்போட ஆரம்பிச்சாரு. அப்பவே எனக்குத் தெரிஞ்சுபோச்சு, இன்னைக்குப் பொழுது இதுக்கே சரியாய்டும்னு. Excel ல தான் போட்ருக்கேன் சார். ஃபார்முலா உபயோகிச்சுத் தான் பண்ணேன்னு சொன்னாலும் அவரு கேக்கல. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்.. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சதவிகிதம், கூட்டல் தொகைனு கணக்குப்போட்டு மொத்தம் பார்த்தா, என்னோட ரிப்போட்டுக்கும் கால்குலேட்டர்ல வந்த பதிலுக்கும் வித்தியாசம் வந்துச்சு. ஆபீசர் என்னைய முறைச்சுப்பார்த்துட்டு, ஏதோ தப்பாயிருக்கு இந்திரா.. சரி பண்ணிட்டு வாங்கனு சொன்னார்.

உப்புமா.. (04.10.2012)

ரொம்ப நாளைக்கப்புறம் போன மாதம் தான் ஒன்பது பதிவு எழுதியிருக்கேன். 2010ல வலைப்பூ ஆரம்பிச்சு, இடையில ஹேக் ஆகி மறுபடியும் பேக்-அப் எடுத்து புது வலைப்பூ தொடங்கி பதிவுகள் எழுதி..னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. நடுவுல கொஞ்ச நாள் பதிவுகளோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. எழுதுற ஆர்வம் குறைஞ்சதும், முகநூல்பக்கம் ஒதுங்குனதும் முக்கியமான காரணம்னு சொல்லணும்.   ஜூலை மாசத்துல நாலே நாலு பதிவு தான் எழுதியிருந்தேன். அப்புறம் ஒருவழியா திரும்பவும் ஓரளவு வேகம்பிடிச்சு, செப்டம்பர்ல ஒன்பது பதிவு தேத்தியாச்சு. (ஒருநாளைக்கு நாலு பதிவு போடுறவங்களுக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா எனக்கு இது பெரிய விஷயமுங்க..) எழுதுற ஆர்வம் இருந்தாலும் இந்திரா“ங்குற அங்கீகாரமும் அடையாளமும் கிடைச்சது வலைப்பூவுல தான். நடுவுல கொஞ்சம் டல்லானாலும் மறுபடியும் பழைய சுறுசுறுப்போட பதிவுகள் தொடரச் செய்யணும். :-) ---------------------------------------------------- இந்த மாசத்தோட நான் அலுவலகத்துல சேர்ந்து அஞ்சு வருஷமாகுது. நிரந்தரப் பணியாளராகுற தகுதியை அடைஞ்சுட்டேன். ஆனா நிரந்தரமாக்குறது தான் நிலுவைல இருக்கு. அதுக்கு இன்னும் வ