தூக்கம் – ஒரு பார்வை
இப்போதைக்கு இருக்கும் சூழலைப் பார்த்தால், இருபத்திநான்குமணிநேர மின்வெட்டை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த இம்சைக்கு நடுவே தூக்கம் என்பதே கஷ்டமான விஷயமாய்டுச்சு. நம்மகிட்ட யாராவது வந்து, “நல்லாத் தூங்கினேன்“னு சொன்னா, நாம சொன்னவனை பொறாமையாகப் பார்க்கிறோம். அந்த தூக்கத்தைப் பற்றி, நான் படித்த ஒரு சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்குறேன். சாதாரணமாய் தூக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று டீப் ஸ்லீப் ( Deep Sleep) எனப்படும் Orthodox Sleep. மற்றொன்று ( Dreaming Sleep ) ட்ரீமிங் ஸ்லீப் எனப்படும் பாரடாக்ஸியல் ஸ்லீப் ( Paradoxial Sleep) . இந்த பாரடாக்ஸ் எனப்படும் நிலையில், உள்மனம் அரைகுறை விழிப்பு நிலையில் இருக்கும். கண் மூடி இருந்தாலும், உள்ளுக்குள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும். இதைத்தான் REP (Rapid eye movement) என்பார்கள். ஆர்தடாக்ஸ் தூக்கம் NREP (Non rapid eye movement) எனப்படும் . நமது மொத்த தூக்கத்தில் 20 சதவிகித்த்தை பாரடாக்ஸ் ஸ்லீப்பும் 80 சதவிகித தூக்கத்தை ஆர்தடாக்ஸும் பங்கு போட்டுக் கொள்கின்றன. தூக்க நிலையில் இரண்டும் மாறி மாற...