Posts

Showing posts from May, 2012

ஜாக்கிரதை - இணைய நட்பு (!!!)..

Image
கம்ப்யூட்டர் என்பதே கனவா இருந்த காலம் மாறி, இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமாகத் திரியுற காலம் வந்தாச்சு. ” பொழுதே போகல, Browsing Centre போயிட்டு வரேன் ” னு சொல்றவங்க பல பேர். எதுவும் இல்லேனா போன்லயாவது இணையத்தை பார்த்துக்கொண்டிருப்பவங்க நிறைய.. தகவல்களுக்காக, தொழிலுக்காகனு இந்த ஊடகத்தை உபயோகிக்குறது தவிர்த்து பெரும்பாலானவங்க பங்கெடுத்துக்குறதுக்கு ஒரே முழுமுதற் காரணம் - எதிர்பாலின ஈர்ப்பு தான். மெயில் பார்க்குறதுல தொடங்கி ஆர்குட், ட்விட்டர், பேஸ்புக்னு எதுல பார்த்தாலும் இணைய நட்புங்குற ஒரு விஷயம் பரவிகிட்டு வருது. எந்நேரமும் ச்சாட்டிங்.. ச்சாட்டிங்.. ச்சாட்டிங் தான். இந்த மாதிரியான நட்புல ஆண் பெண் பாகுபாடில்லாம நட்பை வளர்த்துக்குறது நல்ல விஷயம் தான். ஆனா அந்த நட்பு ஆரோக்யமா இருக்குதா இல்லையாங்குறது தான் இன்னைக்கு கவலைக்குரிய விஷயம். செய்தித்தாள்கள்ல இப்ப எல்லாம் அடிக்கடி வரும் செய்திகள் இணைய நட்புக்களைப் பத்திதான்.. “நண்பர்போல பேசி ஏமாத்தினவங்க.. முகம் காட்டாம காதல் வளர்த்து மோசம் போனவங்க..“னு என்னென்னவோ கேள்விப்படுறோம். விபரங்கள் புதுசா இருந்தாலும் நடக்குற எல்லா

அர்த்தமற்ற நம் முகமூடிகள்..

Image
போலிகள் நிறைந்த வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை முகமூடிகள்??? துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ.. அன்றாட வாழ்வின் இம்முகமூடிகளைக் களைந்துவிடின், நொடிளுக்கான நகர்தல்கள் பரிதாபத்திற்குரியதே.. ஆயினும், நம்மை நாமாகக் காட்ட நமக்குத் துணிவில்லையென்பதே இம்மூடிகளுக்கான ஆதாரம். எச்சூழலையும், இயல்பென ஏற்றுக்கொள்ளவும், யதார்த்தமாய்ப் பகிர்ந்துகொள்ளவும் எவருக்கும் மனமிருப்பதில்லை இந்நாட்களில். உண்மை முகம் மறைக்கும் போலியாய், எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஏதாவதொரு வேஷங்கள். அர்த்தமற்ற இந்நடிப்புகளில் மறைந்து மறந்துபோய்க்கொண்டிருக்கிறது நமக்கான இயல்புகள். சட்டென உணர்வுகளை வெளிப்படுத்தி, பின் யதார்த்தத்திற்குத் திரும்பி, விளைவுகளை ஏற்றுக்கொண்டு, உண்மையாய் இருக்க எவரொருவரும் தயாராய் இருப்பதில்லை எ

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரைக் கண்டறிய..

Image
மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக... Kannan - 60 20 46 46 20 46 ) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக. பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை   வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக. உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள். 100 சதவீதம் உண்மையானது... A-10 B

படித்ததில் பாதித்தது..

Image
உள் தாழ்ப்பாள் இடப்பட்ட அறை, இறக்கமற்றதொரு உறவு, பொய்யான உரையாடல், பிரியமற்ற ஸ்நேகம், காத்திருத்தல், எதிர்பார்த்தல், கனவுகள் சிதைவு, எதிர்நம்பிக்கை எழும்புதல், ஏக்கம், குரூரம், அவமதிப்பு, உதாசீனப்படுத்துதல், துரோகம், மூர்க்கமாய் ஒரு பிரியத்தை நிராகரித்தலென, எதன் வழியாயும் நிகழ்ந்து விடுகின்றன மன வலிகளும் அதன் பிறகான மரணமும். எவ்வளவு எளிதாய் ஏமாற்றப்பட்டுவிடுகிறோம்.. எத்தனை மூர்க்கத்தைக் கொண்டிருக்கிறது மென்மையான ஏதோ ஒன்று. எவ்வளவு இதமாய் வந்து விடுகிறது இரக்கமற்றதொரு சாபம். நீண்ட நேரக் கெஞ்சுதல்களாலான பிரார்த்தனையின் முடிவில் ஒரு சாபம் கூட கிடைக்கலாம் என்பதை எவ்வளவு நிதானமாய்க் கற்றுக்கொடுக்கிறது ஒரு ஸ்நேகிதம். எதிர்த்துத் தாக்க இயலாது என்று அறியும் கணமொன்றில் எவ்வளவு உக்கிரமாய் தாக்கப்பட்டு விடுகிறோம் நம்முடைய பலவீனங்களைக் கொண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விடக் கொடுமையானது பிரியம் நிறைந்ததொரு சம்பவத்தை பிரியமற்றதொரு கணத்தில் நினைத்துப் பார்த்தல் தான். . நீண்ட நாட்களுக்கு முன் ஒரு புத்தகத்திலிருந்து குறித்து வை