Posts

Showing posts from August, 2012

அத்தனையும் மீறி..

Image
நேசத்தின் அவசியமின்றி நிகழ்ந்திடலாம் ஒரு பிரிவு..! நேரடியாகச் சொல்லாமல் நெருங்கிடலாம் ஒரு ஏமாற்றம்..! தார்மீகப் பொறுப்பேற்று தாக்கிடலாம் ஒரு தோல்வி..! அடக்க முடியாமல் ஆர்ப்பரித்திடலாம் ஒரு அழுகை..! நட்பைத் தகர்த்து நையாண்டி செய்யலாம் ஒரு துரோகம்..! வெறுமை சூழ்ந்து வேடிக்கை காட்டலாம் ஒரு இயலாமை..! ஏதுமற்ற வெற்றிடமாய் எளிதாய்த் தோன்றிடலாம் ஒரு விரக்தி..! நெஞ்சுக்கூட்டுக்குள் சுருண்டு நீங்காமல் வந்திடலாம் ஒரு வலி..! அத்தனையும் மீறி வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!! . .

பதிவர் சந்திப்பும் களைகட்டிய பதிவுலகமும்..

Image
(சந்திப்புல கலந்துகிட்டவங்க தான் அதுபற்றிய பதிவு போடணுமா என்ன? கலந்துக்கலைனாலும் நாங்களும் எழுதுவோம்ல..) ரொம்ப நாளைக்குப் பின் சமீபத்தில் பதிவுலகம் களைகட்டியது. இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது சென்னை பதிவர் சந்திப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. போன வாரம் முழுக்க பதிவர்களுக்கிடையே இதுபற்றி எழுந்த சர்ச்சைகளும் சண்டைகளும் அனைவரும் அறிந்ததே.. இந்த வாக்குவாதங்கள்கூட, பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு வித எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம். என்னால் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியல. ஆனாலும் அதில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்த பதிவுகளும் புகைப்படங்களும் சந்திப்பில் கலந்துகொள்ளாத குறையை நீக்கி நிறைவைத் தந்தது. முகம் தெரியாத, பதிவுகள் மூலமே பழகிய பல நண்பர்கள் ஒன்றாய் இணைவதற்கு இதுமாதிரியான சந்திப்புகள் பெரிதும் உதவுகிறது. விழா பற்றிய நிறை குறை விமர்சனங்கள் வரலாம்.. வராமலும் போகலாம். ஆனாலும் விழா சிறப்பாய் அமைய பாடுபட்டவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.. கொஞ்ச நாளாவே பல பதிவர்கள் பதிவெழுதுறத குறைச்சிட்டாங்க.. நிறுத்திட்டாங்கனு கூட சொல்லலாம்.

விலகிச் செல்லும் வாழ்க்கை.. (படித்ததில் பிடித்தது)

Image
இன்றும் ஒன்றை என்னைவிட்டு வழியனுப்ப நேர்கிறது.. நேற்றும் அதற்கு முன்பும் கூட.. இது வாசல் வரை சென்று வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல. ஒவ்வொரு வழியனுப்புதலும் வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வை வழியனுப்புதல் போல இதயத்தை கணக்க வைக்கிறது. இப்படியே நம் நண்பர்களை நம் நினைவுகளை நம் சிந்தனைகளை என தினமும் ஏதாவது ஒன்றை வழியனுப்பிக் கொண்டிருப்பதை நாம் யாரும் ஆழமாய் அறிவதில்லை..!! ஆனால் பயணத்தில் விலகிப் போகும் ஒற்றை மரத்தின் நிழலையும் என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்..! இந்த வாசலில் மிகவும் விரும்பத்தக்க எதையோ எதிர்பார்த்து எப்போதும் தனித்திருக்கிறோம்.. ஆனால் எப்போதும் யாராலுமே விரும்ப இயலாத கள்ளிச் செடிகள் மட்டும்தான் நம் வாழ்க்கை முழுவதற்குமான மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன..!! . .

ஈமு போனா என்ன.. பன்னி வரலாம்!! ஏமாற ரெடியா இருப்போம்.

Image
முதல்ல நிதி நிறுவனங்கள்ல பணத்தப் போட்டு ஏமாந்தாங்க.. அப்புறம் பாலிசி போடுறேன்னு தனியார் நிறுவனத்துல கட்டி ஏமாந்தாங்க.. அப்புறம் வெளிநாடு போறேன்னு பணத்தக்கட்டி ஏமாந்தாங்க.. வெளிநாடு போய் தான் சம்பாதிக்க முடியல.. வீட்டுலயே சுயதொழில் தொடங்கலாம்னு எங்கயாவது மூலதனத்தைக் கட்டி தெரியாத தொழில்ல இறங்கி, அப்புறம் அவன் ஏமாத்திட்டான்னு போட்டதை எடுக்க முடியாம ஏமாந்தாங்க.. சமீபத்துல அப்ரோ நிறுவனத்துல ஆரம்பிச்சு இப்ப லேட்டஸ்ட்டா ஈமுல வந்து நிக்குது.. குடும்ப கஷ்டம், வறுமை, பணத்துக்குப் பாதுகாப்பு, பணத்தேவைனு நிறைய காரணங்களை அடுக்கிக்கிட்டே போனாலும் இதுக்கெல்லாத்துக்கும் மூல காரணம்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல முன்னுக்கு வர்ற மாதிரி சீக்கிரம் சம்பாதிக்கணும்.. நிறைய பணம் சேர்த்துடணும்குறது தான். மக்களைப் பெரும்பாலும் தன்பக்கம் ஈர்க்குறது, இலாப விகிதம் அதிகம்குற விளம்பரங்கள் தான். அரசாங்க வங்கிகள்ல போடுற பணத்துக்குண்டான வட்டியை விட, தனியார் நிதி நிறுவனங்கள்ல கொடுக்கப்படுற வட்டி அதிகம்னு சொல்றதை நம்பி பணத்தை அதில் போடலாம்னு முடிவெடுக்குறாங்க. இப்ப கூட ஈமு கோழி விளம்பரத்துல, மாசத்துக்கு பத்தாயிரத்து

கொஞ்சம் கொசுவத்தி.. கொஞ்சம் பல்பு..

Image
ஒரு விஷயம் முதன் முதலா நமக்கு அனுபமாகுற ஸ்வாரஸ்யமே தனிதான். அதுலயும் கொஞ்சம் பல்பு வாங்குன அனுபவமா இருந்துச்சுனா சொல்லவே வேணாம். நா நிறைய பல்பு வாங்கியிருக்கேன்குறது வேற விஷயம். இருந்தாலும் ஒரு விஷயத்தை முதன்முதலா முயலும்போதே பல்பு வாங்குன அனுபவம் எனக்குண்டு. உள்ளூர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சில செமையா சொதப்பி மேனேஜர்கிட்ட பல்பு வாங்குன அனுபவமும் உண்டு. ( ஏற்கனவே இத ஒரு பதிவுல விளக்கமா சொல்லியிருந்தேன் .) முதன்முதலா சமையல் பண்ணும்போது, என்னென்ன போட்டு தாளிக்கணும்னு தெரியாம அஞ்சறைப்பெட்டில இருந்த கடுகு, சோம்பு, சீரகம், மிளகு, உளுந்து, வெந்தயம், பட்டை, கிராம்புனு ஒண்ணு விடாம எடுத்து எண்ணெய்ல போட்டு “யாகம்“ வளர்த்த அனுபவமும் உண்டு. அதுமாதிரி இன்னும் சில (பல்பு நிறைந்த) அனுபவங்கள்.. 1. ATM கார்டு வந்த புதுசுல ரொம்ப நாளா அத உபயோகிக்காமயே இருந்தேன். அக்கவுண்ட்ல பணமில்லேங்குறது காரணமா இருந்தாலும் எப்டி உபயோகிக்கிறதுனு தெரியாம இருந்ததும் காரணம். தோழிகள்கிட்ட கேக்கலாம்னா “இது கூட தெரியாதா“னு கிண்டல் செய்துடுவாங்களோனு சும்மா இருந்துட்டேன். அப்புறம் ஒரு முறை, முதல்தடவை கார்டை உள்ள ப