Posts

Showing posts from April, 2010

என்னைப் பார்த்து சிரிக்கும் உன் கொலுசுகள்

Image
காற்றிற்கும் ஒலியிருக்குமா உண்மையை சொல்.. அது உன் கால் கொலுசின் ஓசை தானே.. எல்லாப் பெண்களின் கொலுசுகளும் சத்தமிடுகின்றன.. உன் கொலுசுகள் மட்டும் சங்கீதம் பாடுகின்றன.. குளியலிலும் பிரியாது உன்னுடனிருக்கும் போதும் உன்னை முந்திக்கொண்டு வெட்கப்பட்டு சிணுங்கும் போதும் மௌனங்களை களைந்து ஊடல்களை உடைத்து கூடல்களை நெருக்கும்போதும் பின் வந்து கண்பொத்தும் தருணங்களில் காட்டிக்கொடுக்கும் போதும் என்னைப் பார்த்து ரகசியமாய் சிரிக்கின்றன.. உன்னுடன் சேர்ந்து உன் கொலுசுகளும்..

காலம் கடந்து...

Image
தனிமையில் இருவரும் பேசவேண்டும் என்கிறாய். கை கோர்த்து கடலோரம் நடக்கலாமா என்கிறாய். திரை அரங்கிற்கு மகிழ்வாக செல்லலாமா என்கிறாய். என்னருகிலேயே இரு என்கிறாய். உன் பிரிவை தாங்க முடியவில்லை என்கிறாய். தொலைபேசியில் அவ்வப்போது சிணுங்குகிறாய். உன் முகம் பார்த்து வாழும் நாட்கள் போதும் என்கிறாய். சின்ன சின்ன சந்தோசங்கள் தான் வாழ்க்கை என்கிறாய். --- மறுப்பை மட்டுமே தெரிவிக்கும் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை. இருபது வயதில் நன் உன்னிடம் எதிர்பார்த்ததை எழுபது வயதில் நீ என்னிடம் எதிர்பார்க்கிராயே.. நான் அடைந்த ஏக்கங்கள் இப்போது உனக்குப் புரிந்து என்ன பயன்? உன்மீதாய் என்னுள் அடங்கிப்போன எத்தனையோ எதிர்பார்ப்புகள் வாழ்வின் கடைசி நாட்களில் புரியப்படுகிறது.. இதுவும் ஒரு ஏமாற்றமே அன்றி வேறென்ன?

புதைத்தாலும் வருவேன்..

Image
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான் . அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக , ஆழமாக , சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது.. சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..   இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர் , மாறாத காதலுடன். திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. சிவா வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது.. அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.   மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.   யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்.. வரவே இல்லை. குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு