Posts

Showing posts with the label சமுதாயம்

உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?

Image
உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா ? ” துணையை இழந்து தனியே வாழும் ஒரு பெண்ணை உங்கள் வாழ்வின் Companion னாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ?” ஆம் எனில் இன்னொரு கேள்வி.. “ காதலை அல்லது கணவனை இழந்து தனியே போராடும் உங்கள் மகளோ சகோதரியோ.. அல்லது தோழியோ இருப்பின் அவர்களுக்கென இன்னொரு வாழ்வை அமைத்துத் தர முயற்சிப்பீர்களா ?” ஆம் எனில் உங்களுக்கான என் கடைசி கேள்வி.. ” உங்கள் அம்மா அல்லது அப்பா , அதே சூழ்நிலையில் உங்கள் கண்முன் தனியே வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னொரு Companion தேவை என்பதை அட்லீஸ்ட் உணர்ந்தாவது இருக்கிறீர்களா ??” இக்கேள்விக்கு பெரும்பாலும் நீங்கள் புருவம் சுளிக்கலாம் அல்லது மௌனமாயிருக்கலாம். இதற்கு பெரும்பாலான.. அல்லது ஒட்டுமொத்த பதிலும் “ இல்லை “ என்பது தான் நிதர்சனம். ஒரு முறை “ அப்பாவின் காதல் “ என்ற குறும்படத்தை தற்செயலாக காண நேர்ந்தது. மனைவியின் முன்னாள் காதலன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும் , இறுதி மரியாதை செலுத்த அவளை அழைத்துச் செல்லும் கணவனின் கதாப்பாத்திரத்தை , அவர்களுடைய மகன் வாயிலாக சொல்லும் குறும்படம் அது. சுமாரான நடிப்பு என்றா...

கையாலாகாதவர்கள்..!

Image
“உனக்கென்ன.. அரசாங்க அலுவலகத்துல வேலை. போய்ட்டு வர்றதுக்கு ஸ்டாஃப் பஸ் வேற. 9 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் கம்யூட்டர் முன்னாடி உக்காந்து ஒப்பேத்திக்கிட்டு கிளம்புவ. குடுத்துவச்ச மகராசி..“ நிறையபேர் அடிக்கடி இப்படி சொல்வதை கவனிச்சிருக்கேன். அரசாங்க அலுவலகம் என்றாலே ஏதோ வெட்டிப்பொழுது போக்கிட்டு பொழுதைக் கழிப்பவர்களென பொதுவான கருத்து இருக்கு. அங்கேயும் மாங்கு மாங்குனு வேலை பாத்துகிட்டு, சிடுசிடுக்கும் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிகிட்டு நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்காலிகப் பணியாளர்கள்னு ஒரு வகை அரசாங்கத்துல இருக்குங்குறது பரவலா வெளியிலருந்து பாக்குற யாருக்கும் தெரியிறது இல்ல. அதாவது கம்மியான சம்பளத்துலயோ அல்லது தினக்கூலி அடிப்படையிலயோ ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை பாக்குறாங்க. அதிகபட்சமாய் மூவாயிரம் கூட சம்பளம் வாங்க இயலாத இவர்கள், நாட்கள், மாதங்கள் என்பதைக் கடந்து, பல வருடங்களாய் தங்கள் பணி நிரந்தரமாகுமென கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். இதில் சாதாரண துப்புறவு தொழிலாளர்ல ஆரம்பிச்சு, டிரைவர், ப்ளம்பர், கார்பென்டர், பியூன்.. என பட்டியல் நீண்டுகொண்டே போகும். (எனக்குத் த...

சதை தேடும் சாக்கடைகள்..

Image
பேருந்துகளிலும் பொது இடங்களிலும் பார்வையாலேயே புணர்கிறாய் யாரோ ஒருத்தியை..! அலுவலக விபரங்கள் சொல்வதாய் இரட்டை அர்த்த மழை பொழிகிறாய்..! யாரையோ கற்பனையாய் துகிலுரித்து சந்தோசப்படுகிறாய்..! எதிர்வருபவளின் ஸ்தன மேடுகளையும் இடுப்பு வளைவுகளையும் கேலி செய்தபடி ஏக்கம் தீர்க்கிறாய்..! யதேச்சையாய் இடிப்பதாய் , தவறுதலாய் தொடுவதாய் சாமர்த்தியமாய் நகர்ந்து செல்கிறாய்...! இறுதியாய்   அம்மாவுக்குப் புடவையும் சகோதரிக்குப் பூவும் வாங்கியபடி வேசைத்தனங்களின் ஒட்டுமொத்த வடிவமாய்..!! . .

செல்வம்..

Image
“மதியத்துக்கு பாயாசம் கொஞ்சம் சேத்து வச்சுவிடும்மா“ நண்பர்களுக்காக கேட்கிறேனென அம்மாவும் கொடுத்தனுப்பினாள். அவளுக்குத் தெரியாது. இது செல்வத்திற்காக என்று. சொன்னால் திட்டுவாள். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று. புரிந்துகொள்ளாதவளிடம் நடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். செல்வம் என்றதும் என் காதலன் என்று நினைப்பவர்களுக்கு தலையில் ஒரு குட்டு. செல்வம் என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிறுவன். “அக்கா அக்கா“ என்று வாய் நிறைய அழைக்கும் பாலகன் அவன். படிக்க ஆர்வமிருந்தும் ஏழைகளுக்கே உரிய சாபக்கேடாய் இங்கு வந்து எடுபிடி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் படிக்கும் வயதில் கஷ்டப்படுகிறானே என்று வருத்தம் தோன்றும். அவனைப் படிக்க வைக்கும் வசதி என்னிடம் இல்லாததால் வெறுமனே ஆதங்கம் மட்டும் பட்டுக்கொண்டிருந்தேன். அலுவலகம் சென்றதுமே அவனைத்தான் தேடினேன். மேலாளரின் இருக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்தவனை அருகில் அழைத்து பாயாசத்தை நீட்டினேன். “என்னக்கா விஷேசம்?“ என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் கடகடவெனக் குடித்தான். மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண...

அத்துணையும் அர்த்தமற்றதாய்..

Image
என் பெயர்..   எப்போதும் நினைவிருப்பதில்லை ‘ பிச்சைக்காரன் ’ என்பதைத் தவிர..! எதிர்காலம் பற்றிய ப்ரஞ்கையில்லாது பிற எச்சிலின் மிச்சத்திற்காகவே   காத்துக்கொண்டிருக்கிறேன்.. ! கள்வனாயும் கையேந்தியவனாயும் காலப்போக்கை கடத்திச்செல்கிறேன்..! புறக்கணிப்பும் பரிகாசமும் புதைகுழியாய் இழுத்துக்கொண்டிருக்க புறம்பாய் வெளித்தள்ளுகிறேன் எனக்கான இருத்தல்களை..! சமூகமெனும் சாக்கடையோரம் நீந்திக்கொண்டிருக்கும் கழிவுப்புழுவாய் சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறேன். .! கடந்துசெல்கையில் சுழிக்கும் முகங்களுக்கு கடுகளவும் கவலையில்லை.. காணாமல் போன என் கனவுகள் பற்றி..! எனக்கான மறுவாழ்வென்பது   மறவாமல் நிரப்பப்படுகிறது சூன்யம் எனும் மொழிபெயர்ப்பு கொண்டு..! அத்துணையும் அர்த்தமற்றதாய் , கண்ணெட்டும் தூரத்திலோர் குழந்தையின்   பிஸ்கெட் துண்டுகள் கீழே விழக்கோறியபடி   பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் பொறுக்குவதற்கு ஆயத்தமாய்..!! .

“அவனும் அவளும்“..

Image
“அவனும் அவளும்“ என்று ஆரம்பிக்கும்போதே கள்ளப்பார்வையும் காதலோ என்ற கேள்வியுமாய் அசட்டுச் சிரிப்புடன் ஆர்வமாய் பிரகாசிக்கிறாய்..! அருகருகே நடந்து செல்பவர்களை உற்று நோக்கி கலிகாலம் என்று காரி உமிழ்கிறாய்..! பயண நெரிசலில்கூட பக்கத்திலமர்வது பாவமென்று குறுக்கிக்கொள்கிறாய் உனக்கான யதார்த்தங்களை..! ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதைத்தாண்டி ஆணென்றும் பெண்ணென்றும் பாகுபடுத்திப் பாழாக்குகிறாய்..! தனித்துவமென்றும் தனிமைப்படுத்தலென்றும் தற்பெருமைபேசியே தள்ளிவைத்துப் பழக்குகிறாய்..! பலருடன் படுத்தெழுந்தாலும் “ஆண்“ என்ற ஜம்பத்தையும் நினைத்தாலே நடத்தை தவறிய “பெண்“ என்ற சமாளிப்பையும் கேட்டுக் கேட்டுப் பழகிய உனக்கு என்றுமே புரிவதில்லை பால் வேறுபாடில்லா தோழமையின் உறுதிப்பாடு..! கழுத்துக்குக் கீழே குறிவைக்கும் உனக்கு கண்கள் மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு என்றுமே புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..! இச்சைக் குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு என்றுமே பிடிபடப்போவதில்லை.. தாய்ப்பாலுக்கும் காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!! . .