Posts

Showing posts from December, 2010

நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்...

Image
எல்லா நாளுமே நமக்கு ஒரு புதுப் புது அனுபவத்த குடுத்துகிட்டு தான் இருக்கு. அந்த அனுபவம் சந்தோசமாவும் இருந்திருக்கலாம். சங்கடங்களையும் கொடுத்திருக்கலாம். அத நாம எப்படி கையாளுறோம்குறது தான் முக்கியம். என்னப்பொருத்த வரைக்கும் இந்த 2010 எனக்கு சந்தோசமான வருஷமா தான் இருந்துச்சு. ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருந்தால் எந்தக் கவலையுமில்லை. சரிதானே? இந்த வருசம் தான் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். (அதாவது மொக்கை போட ஆரம்பிச்சேன்). புது வருசத்துலயும் நெறைய மொக்கை எழுதி உங்கள ஒரு வழி பண்ணிடுவேன்னு நம்புறேன். கடந்து சென்ற இந்த நாட்கள் எனக்கு சில நட்புகளையும் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட உண்மையான நட்பு கொண்ட என் நண்பர்களுக்கு நன்றி. . ” மனதின் காயங்களை மறக்கக் கற்றுக்கொண்டால் மாயமாகிப்போகும் வலிகள் ” . கசப்பான நிகழ்வுகளை செரிக்கவும் சுகமான சந்தோசங்களை அனுபவிக்கவும்.. ஆக மொத்தம் இந்தப் புது ஆண்டு நம்பிக்கையாய் அமைய வாழ்த்துக்கள். நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்... . .

துப்புங்க எசமான் துப்புங்க..

Image
கார்த்திக்.. சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான். காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான். ................................. அனிதா..

புறக்கணிப்பின் வெறுமை..

Image
இவ்விடம் அதிகம் பரிச்சயமில்லையெனினும் இங்கிருந்து கிளம்புவதென்பது வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது. நீ என்னைத் தீவினையின் எல்லையில் விட்டு, முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து தடை செய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன். இடங்களும் மனிதர்களும் உருவாக்கும் இந்த உறவும் பிரிவும் படர்வதற்குள் கிளம்புகிறேன் என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு. எல்லோருக்கும் போலவே இங்கிருந்து எடுத்துச் செல்ல ஞாபகங்கள் உண்டு. விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை. விட்டுச் செல்கிறேன் புறக்கணிப்பின் வெறுமையை, நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை என்கிற சிறு குறிப்பை. . .----------- சல்மா (ஒரு மாலையும் இன்னொரு மாலையும் புத்தகத்திலிருந்து)

காதல் கடிதம் – தொடர்பதிவு அழைப்பு

எல்லாரும் ஆளாளுக்கு தொடர்பதிவு எழுதுறாங்க. நாமளும் ஏதாவது அப்டி அழைக்கலாம்னு தோணுச்சு. (நெறைய பயபுள்ளைகள மாட்டி விடணும்ல) அரசியல், சமுதாயம், சினிமா அப்டினெல்லாம் நெறைய பேர் எழுதிட்டாங்க. அதுனால நமக்கு அது வேணாம். நாம ஏதாவது வித்தியாசமா செய்யலாம். ஒரு காதல் கடிதம் எழுதணும். யாருக்குனு கேக்குறீங்களா??? அவங்கவங்க (உண்மையான அல்லது கற்பனை) காதலியை நெனச்சு, அவங்ககிட்ட கொடுக்குற மாதிரி எழுதணும். விதிமுறைகள் : 1. கவிதை, இலக்கியம், எதுகை, மோனை இதெல்லாம் முக்கியம் இல்ல. மொக்கையா இருந்தாலும் பரவாயில்ல. ஆனா எழுதணும். 2. காதலியின் செல்லப் பெயரை குறிப்பிட வேண்டும் 3. குறைந்தது பத்து வரிகளுக்கு குறையாமல் இருக்கணும் (அதிகமானா பரவாயில்ல). 4. வெறுமனே ஐ லவ் யூனு பத்து தடவை பேஸ்ட் பண்ணி கணக்கு காட்ட கூடாது. இந்த தொடர்பதிவில் நான் மாட்டிவிடும் பலியாடுகள்.. சிரிப்பு போலீஸ் கோமாளி செல்வா மங்குனி அமைச்சர் கவிதைக் காதலன் தஞ்சை வாசன் நான் ஆதவன் அருண் பிரசாத் வெறும்பய பன்னிக்குட்டி ரசிகன் சௌந்தர் பாலாஜி சரவணா சங்கவி எல்.கே . .