Posts

Showing posts with the label படித்ததில் பாதித்தது

படித்ததில் பாதித்தது..

Image
உள் தாழ்ப்பாள் இடப்பட்ட அறை, இறக்கமற்றதொரு உறவு, பொய்யான உரையாடல், பிரியமற்ற ஸ்நேகம், காத்திருத்தல், எதிர்பார்த்தல், கனவுகள் சிதைவு, எதிர்நம்பிக்கை எழும்புதல், ஏக்கம், குரூரம், அவமதிப்பு, உதாசீனப்படுத்துதல், துரோகம், மூர்க்கமாய் ஒரு பிரியத்தை நிராகரித்தலென, எதன் வழியாயும் நிகழ்ந்து விடுகின்றன மன வலிகளும் அதன் பிறகான மரணமும். எவ்வளவு எளிதாய் ஏமாற்றப்பட்டுவிடுகிறோம்.. எத்தனை மூர்க்கத்தைக் கொண்டிருக்கிறது மென்மையான ஏதோ ஒன்று. எவ்வளவு இதமாய் வந்து விடுகிறது இரக்கமற்றதொரு சாபம். நீண்ட நேரக் கெஞ்சுதல்களாலான பிரார்த்தனையின் முடிவில் ஒரு சாபம் கூட கிடைக்கலாம் என்பதை எவ்வளவு நிதானமாய்க் கற்றுக்கொடுக்கிறது ஒரு ஸ்நேகிதம். எதிர்த்துத் தாக்க இயலாது என்று அறியும் கணமொன்றில் எவ்வளவு உக்கிரமாய் தாக்கப்பட்டு விடுகிறோம் நம்முடைய பலவீனங்களைக் கொண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விடக் கொடுமையானது பிரியம் நிறைந்ததொரு சம்பவத்தை பிரியமற்றதொரு கணத்தில் நினைத்துப் பார்த்தல் தான். . நீண்ட நாட்களுக்கு முன் ஒரு புத்தகத்திலிருந்து குறித்து வை...

அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)

Image
ஒவ்வொரு முறையும் மறக்கத்தான் நினைக்கிறேன்.. கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்த பின் … காதலை எந்த வடிவில் கண்டாலும், மறுபடியும் கண்ணீர் வருவதை ஏன் என்னால் தடுக்க முடிவதில்லை ? மெமரி கார்டில் என்னை அழித்துவிட்டாய்.. என் மெமரியை என்ன செய்ய முடிந்தது உன்னால் ? யாருக்கெல்லாமோ கால் செய்தேன். உனக்கு மட்டுமே காதல் செய்தேன். கால் கொண்டு எட்டி உதைத்தாய்.. அட , எட்டி உதைத்தாலும் உன்னிலே ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணியாய் வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல். நீ வாழ தொடங்கிவிட்டாய் உன் வாழ்க்கையை.. அதில் தவறேதும் இல்லை. என் வாழ்க்கையை ஏன் என்னிடம் தர மறுக்கிறாய் ? எடுத்துக்கொள் என்று இயல்பாக சொல்கிறாய். வர மாட்டேன் என அடம்பிடிக்கும் இதயத்தை சிலுவையிலா அறைய முடியும் ? அதுவும் சரிதான். நேற்று என் இதயத்தை சிறையில் வைத்தாய்.. இன்று சிலுவையில்.... எப்போதும் இல்லாமல் விழித்திரை இப்போதெல்லாம் அதிகநேரம் வேலை செய்கிறது. தூக்கத்தை விடவும் துடிப்பதைதான் அவைகள் அதிகம் விரும்புகின்றன போலும். கண்ணில் விழுந்த தூசியை முன்பெல்லாம் ஊதி எடுத்தாய். இப்போதெல்லாம் ஊசி கொண்டு ...