Posts

Showing posts with the label 200வது பதிவு

200வது பதிவு.. (நோ நோ.. அழக்கூடாது)

பதிவு போடலாம்னு தற்செயலா பார்க்கும்போது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பக்கத்துல ஒரு நண்பர்கிட்ட சொன்னேன். உடனே விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிடுச்சு. யார் யாரோ போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. நிறைய பிரபல பதிவர்கள் ஒண்ணா சேர்ந்து பாராட்டு விழா வச்சுடலாம்னு கூட பேசிகிட்டாங்களாம். விருந்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்களாம். தகவல் கேட்டு எனக்கு கண்ணே கலங்கிடுச்சுன்னா பாத்துக்கங்க. பாசக்கார பயபுள்ளைங்க..!! யோசிச்சுப் பார்த்தேன். என் ஒருத்திக்காக எதுக்காக இவ்ளோ செலவு? பாராட்டுவிழா அதுஇதுனு யாரையும் கஷ்டப்படுத்த நா விரும்பல. ஏன்னா நா ரொம்ம்ம்ப நல்லவளாக்கும். அதுனால வேணாம்னு சொல்லிட்டேன். டிவில கூட என்னைய பாராட்டி நிகழ்ச்சியெல்லாம் நடத்துறதா இருந்தாங்காளாம். “வேணாங்க... நா எழுதுற பதிவ நாலு பேர் படிச்சு திருந்துனா அதுவே போதும்“னு சொல்லிட்டேன். இத கேட்டு ஒபாமாவே உணர்ச்சிவசப்பட்டு குமுறிக் குமுறி அழுதுட்டார்னா பாத்துக்கங்களேன். காலேலருந்து மாத்தி மாத்தி வாழ்த்து சொல்லிகிட்டே இருக்காங்க. அதுனால என்னால பதிவு எதுவும் எழுதமுடியலங்க. அடுத்த பதிவுல சந்திக்கிறேன். ---------------- ஹிஹி.. எ...