Posts

Showing posts from August, 2015

தூரங்கள் எனும் தொலைவுகள்..

Image
மன அழுத்தம் கொடுக்கும் வேலைப்பளு.. உறவினர்கள்.. பண்டிகைகள்.. டென்சன்கள்.. கமிட்மென்ட்கள்.. என எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, எதைப் பற்றியும் யோசிக்காமல், நினைத்த மாத்திரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் எத்தனை பேருக்கு வாய்க்கும்? போய்ச் சேருகிற இடம் பற்றி எந்தவொரு கவலையுமின்றி, சாலைகளையும் மரங்களையும் அந்தந்த இடத்திற்கான இயற்கை சூழலையும் மட்டுமே ரசித்து அனுபவிக்கவென just like that கிளம்புவதென்பது, குறிப்பாய் மொபைல்களே இல்லாத ஒரு பயணம் சாத்தியப்படுமா நமக்கு?!! its absolutely not possible . ஒருவேளை, கையில் பணமில்லாத சமயம் இம்மாதிரியான பயணங்கள் நமக்கு வாய்க்கலாம். ஏதோ ஒரு விரக்தியில் எங்கேயாவது சற்று நடந்துவிட்டு வரலாமென கிளம்பும் தருணங்கள், யோசிக்க ஆயிரமிருந்தும் எதையுமே யோசிக்கவிடாத ஒரு வெற்றிடத்தை நமக்காக ஏற்படுத்தித் தருகின்றன. எப்படி இவ்வளவு தூரம் நடந்துவந்தோம்? அந்த மாடிப்படி வளைவை எப்போது கடந்தோம்? என்பது கூட ஞாபகமில்லாத அளவிற்கான வெறுமைகள் பெரும்பாலும் நம்மைக் கடத்திச் செல்கின்றன. எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி  மாட்டுத்

நான், நீங்கள், அவர்கள்..!

Image
குஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா , அப்பா , மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ‘ ஐ லவ் யூ ’ சொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி “ விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா ?“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாற ாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. என்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் “ எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா ? இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா ?” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ” ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன் ?“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்த

உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?

Image
உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா ? ” துணையை இழந்து தனியே வாழும் ஒரு பெண்ணை உங்கள் வாழ்வின் Companion னாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ?” ஆம் எனில் இன்னொரு கேள்வி.. “ காதலை அல்லது கணவனை இழந்து தனியே போராடும் உங்கள் மகளோ சகோதரியோ.. அல்லது தோழியோ இருப்பின் அவர்களுக்கென இன்னொரு வாழ்வை அமைத்துத் தர முயற்சிப்பீர்களா ?” ஆம் எனில் உங்களுக்கான என் கடைசி கேள்வி.. ” உங்கள் அம்மா அல்லது அப்பா , அதே சூழ்நிலையில் உங்கள் கண்முன் தனியே வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னொரு Companion தேவை என்பதை அட்லீஸ்ட் உணர்ந்தாவது இருக்கிறீர்களா ??” இக்கேள்விக்கு பெரும்பாலும் நீங்கள் புருவம் சுளிக்கலாம் அல்லது மௌனமாயிருக்கலாம். இதற்கு பெரும்பாலான.. அல்லது ஒட்டுமொத்த பதிலும் “ இல்லை “ என்பது தான் நிதர்சனம். ஒரு முறை “ அப்பாவின் காதல் “ என்ற குறும்படத்தை தற்செயலாக காண நேர்ந்தது. மனைவியின் முன்னாள் காதலன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும் , இறுதி மரியாதை செலுத்த அவளை அழைத்துச் செல்லும் கணவனின் கதாப்பாத்திரத்தை , அவர்களுடைய மகன் வாயிலாக சொல்லும் குறும்படம் அது. சுமாரான நடிப்பு என்றா

Miss you Sweetheart..

Image
‘ பம்பாய் ’ திரைப்படம் வெளியான நேரம் அது. மணிரத்தினம் , ஏ.ஆர்.ரஹ்மான் என அத்தனைபேரையும் ஓரங்கட்டிவிட்டு , ஒரு நடிகன் இத்தனை வசீகரமாய் இருக்க முடியுமா என்று வாய்பிளந்து ரசிக்க ஆரம்பித்த காலகட்டம். என்னதான் ‘ ரோஜா ’“ வில் பார்த்துப் பார்த்து ரசித்திருந்தாலும் ஆதர்ஷ நாயகனாக்கியது பம்பாய் படத்திலிருந்து தான். வெளிர் நிறம் , நெற்றிப் புருவத்தில் சிவப்பு மச்சம் , கொழுக்மொழுக் கன்னங்கள் , சின்னதாய் உதட்டோரப் புன்னகை , மார்பு ரோமம் , அலட்டிக்கொள்ளாத நடிப்பு..என அரவிந்த்சாமியை ரொம்பவே பிடித்துப்ப ோனது. சன்-டிவியில் வரும் சூப்பர் 10 நிகழ்ச்சியில் , முதல் வாரத்தில் புதுவராயிருந்து , அடுத்த வாரமே முதலிடத்தைப் பிடித்த “ குச்சி குச்சி ராக்கம்மா “ விற்கு நடுவீட்டில் தோழிகள் சகிதம் கைதட்டி ஆரவாரம் செய்தது இன்றும் நினைவிருக்கிறது. நடைமுறைக்கு மாறாய் , ஒரு நடிகனை கொண்டாட ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டில் கலவரமாக தொடங்கினர். எங்கே அரவிந்த்சாமியைத் தேடி சென்னைக்கு (தோழிகளுடன்) ஓடிப்போய் விடுவோமோ என்று பயந்து , மாமா , சித்தப்பா என அனைவரும் சூழ அட்வைஸ் எல்லாம் வழங்கப்பட்டது பெருங்காமெடி. “