Posts

Showing posts from November, 2010

பெண் மனசு - தொடர்பதிவு

Image
" பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த வெறும்பயலுக்கு நன்றி. தமிழில் பல்வேறு பாடல்கள் இந்த வகையைச் சார்ந்திருப்பினும் யோசித்த மறுநொடியே மனதில் எழுந்த இரண்டு பாடல்களை இங்கு கொணர்ந்துள்ளேன். முதல் பாடல் பிடித்ததற்கான காரணம் : காதலின் வலியையும் அதன் இழப்பையும் அழகாய்ச் சொல்லும் பாடல். படம் : ஆயிரத்தில் ஒருவன் பாடல் : மாலை நேரம் மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்ததே - அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே இதம் தருமே .. உன் கரம் கோற்கையில் நினைவு ஓர் ஆயிரம் பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ஒரு காலையில் ந

கீழ்த்தரவாதிகள்

Image
பேருந்து வழக்கம்போல கூட்டமாய்த் தான் இருந்தது. நிற்க இடம் கிடைத்தாலே பெரிய விஷயம். அலுவலகப் பேருந்து , என்னைப்போன்ற தற்காலிகப் பணியாளர்களின் நிறுத்தத்திற்கெல்லாம் வராது என்ற விதிமுறையுள்ளதால் , நிரந்தரப் பணியாளர்களின் வழக்கமான நிறுத்தத்தை நோக்கி தினமும் நான் பயணிக்க வேண்டிய கட்டாயம். அதை விடுத்தால் இரண்டு பேருந்து மாறிப்போவது மட்டுமல்லாது அலுவலகத்தின் வாசலிலிருந்து என் பிரிவிற்கு 20 நிமிடம் நடக்க வேண்டும். வேறுவழியில்லாமல் முந்தியடித்துக்கொண்டு ஏறி , மெதுமெதுவாய் நகர்ந்து கம்பியைப் பிடித்து வாகாக நின்றுகொண்டேன். 15 நிமிடத்தில் அலுவலகப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என நம்பிக்கை இருந்தது. ஐந்தாவது நிமிடத்தில் என் பின்னால் ஏதோ உரசுவது போல உணர்ந்தேன். கூட்டத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதது தான். ஆனாலும் ஏதோ அசௌகரியமாய் தோன்றவே சிறிது நகர்ந்து நின்றேன். சில வினாடிக்குப் பின் மீண்டும் அதே அசௌகரியம். பெண்களுக்கே உரித்தான அறுவறுப்புடன் பின்னால் நிற்பவனைத் திரும்பி பார்த்தேன். எவனோ ஒருவன