நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்...
எல்லா நாளுமே நமக்கு ஒரு புதுப் புது அனுபவத்த குடுத்துகிட்டு தான் இருக்கு. அந்த அனுபவம் சந்தோசமாவும் இருந்திருக்கலாம். சங்கடங்களையும் கொடுத்திருக்கலாம். அத நாம எப்படி கையாளுறோம்குறது தான் முக்கியம். என்னப்பொருத்த வரைக்கும் இந்த 2010 எனக்கு சந்தோசமான வருஷமா தான் இருந்துச்சு. ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருந்தால் எந்தக் கவலையுமில்லை. சரிதானே? இந்த வருசம் தான் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். (அதாவது மொக்கை போட ஆரம்பிச்சேன்). புது வருசத்துலயும் நெறைய மொக்கை எழுதி உங்கள ஒரு வழி பண்ணிடுவேன்னு நம்புறேன். கடந்து சென்ற இந்த நாட்கள் எனக்கு சில நட்புகளையும் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட உண்மையான நட்பு கொண்ட என் நண்பர்களுக்கு நன்றி. . ” மனதின் காயங்களை மறக்கக் கற்றுக்கொண்டால் மாயமாகிப்போகும் வலிகள் ” . கசப்பான நிகழ்வுகளை செரிக்கவும் சுகமான சந்தோசங்களை அனுபவிக்கவும்.. ஆக மொத்தம் இந்தப் புது ஆண்டு நம்பிக்கையாய் அமைய வாழ்த்துக்கள். நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்ல்ல்லாரும் நல்லாருப்போம்... . .