ரொம்ம்ப நாளைக்கப்புறம் பல்பு வாங்கினேன்..
அதிக வேலை இருந்த்தால இந்தப் பக்கம் வர முடியல.. (அப்படினு பொய் சொல்ல விருப்பமில்லீங்க.. முகபுத்தக நோய் என்னையும் தொத்திக்கிச்சு போல.. அதுனால இந்தப் பக்கம் வர லேட்டாய்டுச்சு). சரி விடுங்க விஷயத்துக்கு வரேன். ரொம்ப நாளைக்கப்புறம் நேத்து பல்பு வாங்கினேன். அதுவும் துணிக்கடைல.. அவ்வ்வ்வ்.. (உங்களுக்கு சந்தோசமா இருக்குமே..) சாதாரணத் துணில ரெண்டுவகை உண்டு. ஃபுல்வாயில், பாலிவாயில். நா நேத்து சாயந்திரம் துணிக்கடைக்குப் போய் ஃபுல்வாயில்“ல டார்க் புளூ கலர்ல ஒரு மீட்டர் துணி வேணும்னு கேட்டேன். நா கேட்ட கலர்ல ஃபுல்வாயில்ல இல்லங்க“னு கடைக்கார்ர் சொன்னார். உடனே நா ஏதோ ஞாபகத்துல, அப்படினா ஆஃப்பாயில்“ல குடுங்கனு சொன்னேன். (அவ்வ்வ்..) கடைக்காரர் என்னைய ஒரு மாதிரியா பார்த்தார். அப்பக்கூட எனக்கு நினைவுக்கு வரல. அப்புறம் அவரே “மேடம் அது ஆஃப்பாயில் இல்ல. பாலிவாயில்“னு சொன்னார். அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சுச்சு. அடக்கொடுமையே.. இந்திரா.. இந்த அவமானம் உனக்குத் தேவையா??? சரி சரி... இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. . .