Posts

Showing posts from July, 2011

நீங்களே சொல்லுங்க.. நா பல்பு வாங்கினேனா??

Image
காலேல நா ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தேன். பொதுவா நா வீட்ல இருந்தேனா எப்பவுமே டிவிலயோ போன்லயோ பாட்டு ஓடிகிட்டிருக்கணும். அப்ப தான் எனக்கு வேலை ஓடும். ஆனா இன்னைக்கு தற்செயலா கே.டிவில “அழகன்“ படம் போட்டிருந்தத கவனிச்சேன். எனக்கு அந்தப் படம் பிடிக்கும், அதுனால காதுல வசனத்த கேட்டுகிட்டே அடுப்படில வேலை பாத்துகிட்டு இருந்தேன். அந்த சமயம், என் அப்பாவோட நண்பர் ஒருத்தர், தன்னோட பையனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுக்க வந்திருந்தார். அவர்கிட்ட சகஜமா விசாரிச்சிட்டு, காபி போட்றதுக்காக உள்ள போனேன். அவரும் டிவில ஓடிகிட்டிருந்த படத்த பாத்துகிட்டிருந்தார். நான் காபி போட்டு எடுத்துட்டு வந்து அவர்கிட்ட குடுத்தேன். அத வாங்கிகிட்டே ” கலைஞர் டிவியா?“னு கேட்டார். நான் ” இல்ல இது கே.டிவி“னு சொன்னேன். அவர் ” அதான் கலைஞர் டிவியா?“னு திரும்பவும் கேட்டார். நானும் திரும்ப ” கலைஞர் டிவில இந்நேரம் படம் போட மாட்டாங்க, கே.டிவில தான் படம் போடுவாங்க“னு சொன்னேன். அவர் என்ன நெனச்சாரோ தெரியல, பேசாம காபிய குடுச்சிட்டு கிளம்பிட்டாரு. போகும்போது வாசல்ல நின்னு என்ன முறச்சிட்டு, உங்க வீட்ல ட்யூப்-லைட் வேலை ச

ஒரு காமெடி (காதல்) கடிதம்..

Image
நெட்ல ஏதோ தேடிகிட்டு இருந்தப்ப இந்த தெய்வீகமான காதல் கடிதம் கெடச்சது. அத நீங்களும் படிங்க.. (இத தமிழாக்கம் பண்றதுக்கு என்னால முடியல.. அதுனால அப்படியே போட்ருக்கேன்.) *********** To , ANU UKG A. Dear ANU, I love you. My dream I see you. Everywhere you. You no, I live no. I come red shirt 2morrow. You love I, you come red frock. I wait down mango tree. You no come, i jump train. Sure come... yours lovely, VICKY Std 1 B ************ ********* ********* ********* ********* ********* Reply....by ANU.... Darling, your letter mama see. Papa beat me beat me so many beat me. I cry. i cry. So no come to mango tree. No jump train. I love you. See another day. I no red frock. Only green. You love me, you love me you green shirt. Give I gift. I see you with pinky. Where you go.. NO talk to her. Okay My dream also only you Lovely ANU... UKG A . .

பதிவர்களுக்குப் பரிசு குடுக்குறேன்.. சம்பந்தப்பட்டவங்க வாங்கிக்கங்க..

Image
பதிவர்களுக்குள்ள ஆளாளுக்கு விருதுகள் குடுத்துக்குறாங்க. நானும் ஜிந்திச்சுப் பார்த்தேன். ஏதோ என்னால முடிஞ்ச பரிச, சக பதிவர்களுக்கு குடுக்கலாம்னு முடிவு பண்ணேன். இதுல யாருக்கு எந்தப் பரிசு பொருத்தமா இருக்கோ.. அவங்கவங்க எடுத்துக்கங்க. 1. சண்டை போடும் பதிவர்களுக்கு.. மற்ற பதிவர்களுடன் அடிக்கடி சண்டை போட்டுகிட்டே இருக்கும் பதிவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட பதிவர்கள் எடுத்துக்கலாம். 2. குறை சொல்லும் பதிவர்களுக்கு.. பதிவு எழுதுறாங்களோ இல்லையோ.. அடுத்த பதிவர்கள் பற்றி குறை சொல்லியே காலம் தள்ளும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. என்னானு பாக்குறீங்களா??? கண்ல விட்டுகிட்டு பாக்கணும்ல.. அட.. இது தாங்க விளக்கெண்ணெய். 3. கவிதை எழுதும் பதிவர்களுக்கு.. கவிதைகள் எழுதி பிரபலமான பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்குறேன். இதுல உக்கார்ந்துகிட்டு இன்னும் நல்லா ஜிந்திக்கலாம்ல.. அதுக்குத் தான்.. எப்பூடிஈஈஈஈ... 4. சமுதாயம் பற்றி எழுதும் பதிவர்களுக்கு.. சமுதாயத்த திருத்துறேங்குற பேர்ல பதிவெழுதும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. தண்ணியக் குடிங்க.. தண்ணியக் குடிங

சும்மா ஒரு பில்ட்-அப்..

Image
என்னடா சம்மந்தமில்லாம ஹார்லிக்ஸ், காம்ப்ளான் , பழங்கள், ஜூஸ் எல்லாம் இருக்கேனு பாக்குறீங்களா??? இதெல்லாம் உங்களுக்கு இல்லங்க.. எனக்கு. கொஞ்ச நாளா பதிவு எழுத முடியாத அளவுக்கு வேலை. அதுமட் டுமில்லாம பழைய ப்ளாக் தொலைஞ்சுபோனதால கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துடுச்சு. என்னோட கிறுக்கல்கள படிக்காம நிறைய பேர் நிம்மதியா இருக்குறதா கேள்விப்பட்டேன். ம்ஹூம்.. விட மாட்டேன். அதுனால இதெல்லாம் குடிச்சிட்டு தெம்பா எழுதப் போறேனாக்கும்.. ....................... உங்களுக்கு இதுல பங்கு தரமாட்டேன். ம்ம்ம்ம்.. வேணும்னா கீழ வர்ற படத்த எடுத்துக்கங்க. ஏன்னா.. என்னோட பதிவுகள படிக்கிறவங்களுக்கு இது கண்டிப்பா தேவைப்படும். . .

நீ அழையாத என் கைபேசி..

Image
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினா