Posts

Showing posts with the label தமிழ் சினிமா

கோலி சோடா - என் பார்வையில்..

Image
“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை. நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான். பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க. “தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு. “ ATM ன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நம...

ஆரம்பம்..!

Image
பொதுவாகவே இன்னாரைத் தான் பிடிக்கும்.. இன்னாருடைய ரசிகை என்றெல்லாம் கூச்சலிடுவதில் எனக்கு இஷ்டமில்லை. ஆர்ப்பாட்டமில்லாது அசால்ட்டாய் நடித்துவிட்டுப்போகும் நடிகர்கள் நிறைய பேரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எல்லா நடிகர்களும் ஏதாவதொரு படத்தில் சிறப்பாகவே நடித்துவிடுகின்றனர். (குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது). அந்த விஷயத்தில் எனக்கு அஜித்தின் ஸ்டைலும், அசாலாட்டான நடிப்பும் பிடிக்கும். வாலி, பில்லா1, மங்காத்தா போன்ற படங்கள் என் கலெக்சனில் நிச்சயம் உண்டு. அந்த எதிர்பார்ப்புடன் தான் “ஆரம்பம்“ பார்த்தேன். நண்பரின் மரணத்திற்காக பழிவாங்கவும், ஊழல் சதியை முறியடிக்கவும், தொழில்நுட்பம் தெரிஞ்ச ஆர்யாவை மிரட்டி, அவர் உதவியால் வில்லன் கும்பலை அஜித் பழிவாங்குவது தான் கதை. ஒரு வரிக் கதைதான் எனினும், திரைக்கதை யுக்திகள் நம் கவனத்தை வெகுவாய் ஈர்க்கின்றன. சமீபகாலத் திரைப்படங்களில் Catwalk போய்க்கொண்டே ஸ்டைலாய் வசனம் பேசும் அஜித், இந்தப் படத்திலும் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். ஆனாலும் அந்த ஸ்டைல் தான் நம்மைக் கட்டிப்போடுகிறது. பாம் வச்ச அந்த தீவிரவாதிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்னு ஆர்யா கோபம...

ராஜா ராணி..

Image
ராஜா ராணி பாத்தாச்சு. பெருசா விமர்சனம் எழுதுற அளவுக்கு எதுவுமில்ல. தேம்பித் தேம்பி அழவைக்காம, ஹைடெக் காதல் கதை சொல்லிருக்காங்க. படத்துல எனக்குப் பிடிச்ச முக்கியமான விஷயம்.. சத்யராஜ் கதாப்பாத்திரம். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறியா?னு மகளைப் பார்த்து அசால்ட்டா கேட்கும் காட்சி செம.. மகளுடன் சேர்ந்து அழும்போது மனசுல நிக்குறார். நயனுக்கு கொஞ்சம் மேக்கப் கம்மி பண்ணிருக்கலாம். தலைக்குமேல அந்த பன் ஹேர்ஸ்டைல் பொருந்தவேயில்ல. ஆர்யாவுக்கோ நயன்தாராவுக்கோ.. நடிப்புக்குனு பெருசா வேலையில்ல. ஆளுக்கொரு பக்கம் உம்முனு இருந்தா போதும்னு அட்லீ சொல்லிட்டார் போல. மௌன ராகம் மாதிரி இந்தப் படம் நிச்சயம் இல்ல. அதுல மோகனுக்கும் ரேவதிக்கும் நிறைய காட்சிகள்.. கெமிஸ்ட்ரி.. பயாலஜினு மெலிதான காதல் இருக்கும். மௌன ராகத்துல வர்ற மாதிரி, முகம் பார்த்து காதல் ததும்புற, தடுமாறுற காட்சிகள் இதுல மிஸ்ஸிங். எங்கேயும் எப்போதும் படத்துலருந்து இன்னும் வெளிவராத ஜெய்.. வழக்கமான சந்தானம்..! காதல்ல தோல்வி அடைஞ்சுருக்காங்க..ங்குற ஒரே காரணத்தால மட்டும் ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் வருதுனு காட்டியிருக்காங்க. அது பரிதாபமா...

மூடர் கூடம் - என் பார்வையில்..

Image
மூச்சு விடாம பேசுற பன்ச் வசனம் கிடையாது. ஜிகுஜிகுனு ஆடை உடுத்திகிட்டு ஆடும் ஐட்டம் சாங் கிடையாது. ஒரே ஆள் பத்து பேரை அடித்து வீழ்த்தும் சாகசங்கள் கிடையாது. தொடைதட்டி சவால் விட்டு, ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகும் வித்தையேதும் கிடையாது. ஹீரோயினைக் கட்டிப்பிடித்து புரண்டு ரொமான்ஸ் பண்ணும் கில்மாஸ் கிடையாது. வேற என்ன தான் படத்துல இருக்கு? ஆர்ப்பாட்டாமில்லாத நச் வசனங்கள்.. யதார்த்தமான நடிப்புகள்.. பாத்திரத்திற்குப் மிகப் பொருத்தமான நடிகர்களும் வசன உச்சரிப்புகளும்.. வித்தியாசமான கதையமைப்பு.. சூப்பர் ஹிட்.. ஆஹா ஓஹோ..னு நிச்சயம் நம்ம மக்கள் வரவேற்க மாட்டாங்க. எனினும் கட்டாயம் பாராட்ட வேண்டிய முயற்சி தான். “ரெண்டாயிரம் ரூபாய்க்கு கூட சட்டை இருக்குனு இன்னைக்குத் தான் தெரியும்“ “ரெண்டு லட்சம் இப்டித்தான் இருக்குமா?“ “ஆயிரம் ரூபாய்க்கு பீட்சாவா?“ “நீங்க தானே மொபைல் மாதிரி எது இருந்தாலும் உடைக்க சொன்னீங்க.. அதுனால தான் ரிமோட்டை உடைச்சேன்“.. போகிற போக்கில் தூவிவிடும் செண்ட்ராயனின் அப்பாவித்தனம் கூடுதல் பலம். தலைகீழா நிற்க வைப்பதும், முட்டி போட வைப்பதும், பந்தினை தட்ட சொல்ல...

சிகரம் – என் பார்வையில்..

Image
நான் இதுவரைக்கும் விமர்சனம்னு எழுதினது இல்ல. இதுவும் விமர்சனம் இல்ல. ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து ராஜ் டிஜிடலில் “சிகரம்“ படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. எதனாலோ அது பற்றி பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. சிகரம் - காதல், நட்பு, கணவன் மனைவி அந்நியோன்யம், நம்பிக்கை, இழப்பு, யதார்த்தம்னு எல்லாம் கலந்த கவலையா இந்தப் படத்தைச் சொல்லலாம். ரேகா, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவினு மற்ற கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மனசுல நிக்கிறது என்னவோ, ராதா - எஸ்பிபி இந்த இருவருக்குமிடையேயான நட்பு ரீதியான காதல் தான். இதில் எனக்குப் பிடித்த காட்சிகளெனில், தான் காதலித்த பெண்ணை பல வருடங்கழித்து தனக்கான மருத்துவராக சந்தித்து, பின் நட்பு கொண்டு, பழைய நினைவுகள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள். குறிப்பா.. “நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“...