Posts

Showing posts from March, 2011

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

Image
இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான். “வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும், பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு, தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள். பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள் கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும். இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கிற மாதிரிய

பேசும் படங்கள்...

Image

அரிதாரக் கடவுள்கள்..

Image
நேத்து கே.டிவில ஏதோ ஒரு சாமி படம் போட்டான். ரோஜா அதுல கடவுளாவும் பக்தையாவும் நடிச்சிருந்தாங்க. அதென்னவோ தெரியல.. சினிமாவுல வர்ற கடவுள் மட்டும் ஏன் தான் இப்படி மொக்கையா வருதுகளோ தெரியல. அதாவது நா ரோஜாவ சொல்லல.. அவங்க போட்ருந்த வேஷத்த சொல்றேன். மத்த மொழிகள்ல எப்டியோ.. இந்தத் தமிழ் சினிமாவுல வர்ற கடவுள்கள் எல்லாம் பயங்கர காமெடியா இருக்குதுங்க. தலைல பெரிய்ய்ய்ய கிரீடம், கலர் கலரா முகத்துல பெயிண்ட் அடிச்சிருப்பாங்க. (அழகா இருக்குற மூஞ்சியையும் அசிங்கப்படுத்திக்கிறது), கழுத்துல எழுமிச்சம்பழ மாலை.. கையில சூலம், அயர்ன் பண்ணின பட்டுப் புடவை.. கண்ண அடிக்கடி உருட்டி உருட்டி பாத்துகிட்டு.. முக்கியமா ராமநாரயணன் படம்னா சொல்லவே வேணாம். அந்த வேஷம் போட்டவங்க ஆட்றது மட்டுமில்லாம அவங்களோட சூலம், வேப்ப மரம்னு எல்லாமே டான்ஸ் ஆடும். கொடுமைடா சாமி. அப்புறம் இந்த மாதிரி படங்கள்ல கண்டிப்பா ஒரு அப்பாவி பொண்ணு ஹீரோயினா இருக்கும். ஏதாவதொரு டம்மி பீசு ஹீரோவா இருப்பான். அந்தப் பொண்ண தவிர மத்த எல்ல்ல்ல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க. ஒரு மந்திரவாதி வில்லனா இருப்பான். அவனோட கெட்அப் பத்தி சொல்லவே வேணாம். கழுத்துல

படித்ததில் புரியாதது

Image
“அதற்குத் தக“ புத்தகத்திலிருந்து தமிழ்மணவாளன் என்பவர் எழுதிய “தெளிவுறுதல்“ என்ற தலைப்பிலான கவிதை *************************************** தெளிவுறுதல் மீனொன்று காற்றில் பறந்துபோனது வியப்பாயிருக்கிறது. காற்றுப் பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு. அவ்வாறெனில் காற்று எப்போது நீராய் மாறியது.. மீன் பறவையானதா? செதில்கள் சிறகுகளாய். மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது. காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது. காற்றாக மீனாக நீராக பறவையாக.. காற்று நீர் மீன் பறவை மீன் பறவை காற்று நீர் நீர் மீன் பறவை காற்று வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட மீனொன்று காற்றில் பறந்து போனது. *************************************** . (படிச்சுட்டீங்களா??? என்ன சொல்ல வர்றாருனு தெளிவ்வ்வ்வா புரியுது.. இல்ல?) .

நின்னைச் சரணடைந்தேன் (3)

Image
நின்னைச் சரணடைந்தேன் (1) படிக்க இங்கே க்ளிக் செய்யவும் நின்னைச் சரணடைந்தேன் (2) படிக்க இங்கே க்ளிக் செய்யவும் “இந்த கல்யாணத்துக்கு நீ வரமாட்டேனு நெனச்சேன் காயத்ரி. அந்த அளவுக்கு என் மேல உனக்குக் கோவமிருக்கலாம். என்ன மன்னச்சிடு. ஆனா என்னோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சுக்குவனு நம்புறேன் ” ரமேஷின் குரல் தெளிவாய்க் கேட்டது சித்தார்த்து க்கு. மெல்லிய குழப்பம் அவனை சூழ்ந்து கொள்ள, தொடர்ந்து வந்த காயத்ரியின் குரலைக் கேட்க ஆயத்தமானான். “இதுல கோவப்பட்றதுக்கு ஒன்னுமேயில்ல ரமேஷ். சின்ன வயசுலருந்தே, பெரியவங்க பேசி வச்சதுனால உங்கள என் மனசுல நெனச்சிருந்தது வாஸ்தவம் தான். ஆனா அது உங்கள பாதிக்கலைங்கும்போது உங்க மேல கோவப்பட என்ன இருக்கு? இதுல உங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் வேண்டாம் ” காயத்ரியின் சலனமில்லாத பதில் சித்தார்த்தைக் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படியானால்.... காயத்ரி ரமேஷை காதலித்தாளா?? அதிர்ச்சியாய் நின்றவனின் காதுகளில் விழுந்தது.. மீதமான உரையாடல்.. “நிஜமா தான் சொல்றியா காயத்ரி?? உனக்கு இந்த கல்யாணத்துல எந்த வருத்தமும் இல்லையே? இல்ல எனக்காக