Posts

Showing posts from January, 2018

'மசால் தோசை 38 ரூபாய்' - வா.மணிகண்டன்

Image
எழுத்துக்கள் பற்றியோ , எழுதியவர் பற்றியோ எந்தவித முன் அபிப்ராயங்களும் இல்லாமல் ஒரு படைப்பை கையாளுவது நன்றாகத்தான் இருக்கிறது.   ‘ மசால் தோசை 38 ரூபாய் ’ பற்றிச் சொல்வதற்கு முன் ‘ லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் ’ பற்றி ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். 2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பணத்தை கொடுப்பதற்குள் “ மேடம் “ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். தான் தேனியிலிருந்து வருவதாகவும் லிண்ட்சே லோஹன் பிரதிகள் தீர்ந்துவிட்டதாகவும் இந்தப் புத்தகத்தைத் தனக்கு கொடுக்க முடியுமாவென்றும் கேட்டபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நிறைய வாசிப்பவர் போலும். மறுப்பின்றி கொடுத்துவிட்டாயிற்று. அதன்பிறகு மாரியப்பனின் மனைவிக்கு ஹாய் சொல்லும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. ஒரு புத்தகத்திற்காக ‘ ப்ளீஸ் ’ என்றதை அன்றைக்கு தான் கேட்டேன். மசால் தோசை 38 ரூபாய் - தொகுத்திருக்கும் விடயங்கள்.. எழுத்து நடை.. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாய் என்னைக் கவர்ந்தது கடைசியில் குறிப்புகளுக்கென விடப்பட்டிருக்கும் கோடிட்ட மூன்று வெற்றுத்தாள்கள் தான். வாசிப்பாளனுக்குத் தரப்படும் அடிப்படை