Posts

Showing posts with the label அறிவியல்

மின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)

Image
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்கோ... நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும். மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை ” டைனமோ ” அல்லது “ஜெனரேட்டர் ” என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ ( Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும். டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள்...

மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..

Image
1.        இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள் 2.        ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை. 3.        நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று. 4.        மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு. 5.        உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது. 6.        உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது. 7.        ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள். 8.        இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது. 9.        இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை...