Posts

Showing posts with the label ராசிப்பொண்ணு

ஆண் குழந்தை மோகம்..

Image
போன வாரம் தான் ராசிப்பொண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துச்சு. தாயும் சேயும் நலமாக இருக்குறாங்க. அவளுக்கு நல்லபடியா பிரசவமாகணும் வாழ்த்துன நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சரி பதிவுக்கு வரேன். ராசிப்பொண்ணு பிரசவமாகும்போது அறைக்கு வெளில நாங்க வெய்ட் பண்ணிகிட்டு இருந்தோம். அப்போ, அவளோட மாமியார் ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்தாங்க. நானும் என் அம்மாவும் “என்ன குழந்தையா இருந்தா என்ன? ஆரோக்யமா பிறக்கணும்னு நெனைங்க..“னு அவரை சத்தம்போட்டோம். அப்புறம் குழந்தை பிறந்து அழுகுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல நின்னுகிட்டிருந்த உறவினர், அழுகும் சத்தத்தைக் கேட்டா பொம்பளைக் குழந்தை மாதிரிதான் தெரியுதுனு சொன்னார். உடனே அந்த அம்மா அவரிடம் சண்டைக்குப் போயிட்டாங்க. குழந்தை ஆண் ’ னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானாங்க. ‘ சிங்கக்குட்டி பிறந்துருக்கு.. எங்க வாரிசு பிறந்துருச்சு.. ’ அப்படி இப்படினு குதிச்சு கும்மாளம் போட்டுட்டாங்க. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருந்துச்சு. வயித்துல இருக்குற குழந்தை ஆரோக்கியமா எந்தப் பிரச்சனையுமில்லாம பிறக்கணும்னு நினைக்குறது தான் நியாய...

கடுப்பேத்துறதுக்குனே கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்க...

Image
போன வாரம், ராசிப்பொண்ணு க்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனு ம் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க. சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..) ******************************************* என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா...

ராசிப்பொண்ணுக்கு ஒரு வாழ்த்து..

Image
இப்படி வாழ்த்துப் பதிவு போட்றதுலயும் ஒரு வசதி இருக்குங்க.. பின்னூட்டம் போட்றவங்களுக்கு சிரமமே இருக்காது. தங்களோட கருத்துனு தனியா சொல்றதுக்கு எதுவும் இருக்காது.. மிஞ்சிப்போனா ரெண்டு வரில ஏதாவது வாசகம், இல்லேனா வெறுமனே “வாழ்த்துக்கள்“, ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ னு மட்டும் போடலாம் .. அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே???? (அதாவது தயவு செஞ்சு வாழ்த்திடுங்க ப்ளீஸ்..னு சொல்ல வரேன். ஏன்னு, பதிவப் படிச்சா உங்களுக்கே புரியும்.) சரி விஷயத்துக்கு வரேன்... எனக்கு ரெண்டு தங்கைனு ஏற்கனவே சொல்லிருக்கேன். (எப்ப“னு கேட்டு பல்பு குடுக்காதீங்க.. முந்தின ஏதோ ஒரு பதிவுல சொல்லிருக்கேங்க.) அதுல ரெண்டாவது தங்கைக்கு, அதாவது எங்க வீட்டு கடைக்குட்டிக்கு, வர்ற ஞாயித்துக் கிழமை (27.02.2011) பிறந்தநாள். (அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க). அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க.. தயவு செஞ்சு சொல்லிடுங்க ப்ளீஸ்.. “எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (...