முகமறியாதவன்..!!
அது நீங்களாக இருக்கலாம்.. சில சமயம் நானாகக் கூட..! ஒரு முறை சாலையில்.. சில முறை பயணத்தில்.. வேறொரு முறை மருத்துவமனையில்.. பிரிதொரு முறை எங்கோவென அவனைக் கடந்து சென்றிருக்கலாம்..!! வற்றிப்போன கண்களும் வரண்டுபோன இதயமுமாய் வெறுமையான நினைவலைகளுடன் எதையோ தேடிக்கொண்டிருப்பவனாய் நம் அருகிலேயே அமர்ந்திருக்கலாம்..! அழுகைகளும் அவமானங்களும் உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருக்க, வெளிக்காட்டாதவனாய் எதிர் வந்துகொண்டிருக்கலாம்..! நேசிப்பின் இழப்பை சந்தித்தவனாய்.. நட்பின் துரோகத்தில் மூழ்கியவனாய்.. உறவின் பிரிவை ஏற்றுக்கொண்டவனாய்.. வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவனாய்.. எல்லாம் மறைத்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம்..!! “எனக்கு மட்டும் ஏன் இப்படி“ என்று சலித்துக்கொள்ளும் நம்மைப் பார்த்து உள்ளுக்குள் புன்முறுவல் புரிந்தவனாய்.. முகமறியாதவனாய்.. முகவரி தொலைத்தவனாய்.. நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே!! . .