நீங்களே சொல்லுங்க.. நா பல்பு வாங்கினேனா??

காலேல நா ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தேன். பொதுவா நா வீட்ல இருந்தேனா எப்பவுமே டிவிலயோ போன்லயோ பாட்டு ஓடிகிட்டிருக்கணும். அப்ப தான் எனக்கு வேலை ஓடும். ஆனா இன்னைக்கு தற்செயலா கே.டிவில “அழகன்“ படம் போட்டிருந்தத கவனிச்சேன். எனக்கு அந்தப் படம் பிடிக்கும், அதுனால காதுல வசனத்த கேட்டுகிட்டே அடுப்படில வேலை பாத்துகிட்டு இருந்தேன். அந்த சமயம், என் அப்பாவோட நண்பர் ஒருத்தர், தன்னோட பையனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுக்க வந்திருந்தார். அவர்கிட்ட சகஜமா விசாரிச்சிட்டு, காபி போட்றதுக்காக உள்ள போனேன். அவரும் டிவில ஓடிகிட்டிருந்த படத்த பாத்துகிட்டிருந்தார். நான் காபி போட்டு எடுத்துட்டு வந்து அவர்கிட்ட குடுத்தேன். அத வாங்கிகிட்டே ” கலைஞர் டிவியா?“னு கேட்டார். நான் ” இல்ல இது கே.டிவி“னு சொன்னேன். அவர் ” அதான் கலைஞர் டிவியா?“னு திரும்பவும் கேட்டார். நானும் திரும்ப ” கலைஞர் டிவில இந்நேரம் படம் போட மாட்டாங்க, கே.டிவில தான் படம் போடுவாங்க“னு சொன்னேன். அவர் என்ன நெனச்சாரோ தெரியல, பேசாம காபிய குடுச்சிட்டு கிளம்பிட்டாரு. போகும்போது வாசல்ல நின்னு என்ன முறச்சிட்டு, உங்க வீட்ல ட்யூப்-லைட் வேலை ச...