Posts

Showing posts from October, 2013

நின் இருப்பு..!

Image
குறுஞ்செய்திகளின் சேமிப்பிலும் காகிதங்களின் மடிப்பிற்குள்ளும் மின்னஞ்சலின் கிடப்புகளிலும் ஆக்கிரமித்தபடி நிறைந்துகிடகிறாய்..! தத்தெடுத்த வீட்டினுள் புதிதாய் நுழையும் சிறுமியாய் ஒட்டாது ஒதுங்கிக்கொள்கிறேன் உனதிருப்பில்லா எவ்விடத்திலும்..! நுனிவிரல் பிடித்து ஏக்கமாய் நீ தருமந்த சிறு அழுத்தம் போதுமாயிருக்கிறது ஆயுளுக்குமான ஆத்மத்ருப்திக்கு..! .

படத்துல இருக்குறது என்னானு தெரியிதா?

Image
இது பொண்ணுங்க தலைல வைக்குற க்ளிப். உத்துப் பாத்ததும்  தான் தெரியுது. அது செருப்பு டிசைன். அடக்கொடுமையே.. எதையெதைத்தான் தலைல வைக்குறதுனு விவஸ்தை இல்லயா? இவனுகளோட, டிசைன்பண்ற ஆர்வத்துக்கு அளவே இல்லாமப் போச்சு. (இத வாங்குறதுக்கும் சில பயபுள்ளைக இருக்கத்தான் செய்யுது)

ஏதுமில்லா ஏதோவொன்று..!

Image
அவனுக்காக இதை எழுதுவேனென நிச்சயம் அவன் அறிந்திருக்க மாட்டான்..! ஒருவேளை தெரிந்திருக்கக்கூடும் இதை எழுதிச்சென்றவள் நானென்பது..! ஒவ்வொரு வார்த்தைக்குமான இடைவெளிகள் உணர்த்திப்போகிறது எனக்கும் அவனுக்குமான ஏதோ ஒரு உணர்த்துதலை..! எதுவெனப் புரியாதெனினும் ஏதோவொன்று இருந்துதான் தொலைக்கிறது..! எல்லாமும் நிறைந்திருக்கின்றன ஏதுமில்லா வெற்றுக் காகிதங்களில்..! ஒருவேளை அவனுக்குப் புரியக்கூடும்.. எழுதி நிரப்பவோ, எழுதாமல் நிரம்பவோ ஏதோ ஒன்று இருக்கக்கூடுமென..! . .

ஷ்ஷ்ஷ்ப்பா..

Image
வாழ்நாள் சாதனையாக வித்தையேதும் செய்யத்தேவையில்லை. குறைந்தபட்சம்.. அவசரமாய் லிப்ட் கேட்பவர்களை வண்டியில் ஏற்றுங்கள். வாசல் நின்று தாகமாய் இருக்கிறதென்பவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். வங்கியில் பேனா இல்லையென முழிப்பவர்களை முறைக்காது கொடுத்துதவுங்கள். நிறுத்தத்திலிருக்கும் படிப்பறிவில்லாதவர்களை அவர்களுக்கான பேருந்தில் ஏற்றிவிடுங்கள். புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். மழையில் ஒருமுறையேனும் நனையுங்கள். பொருள் தானமில்லையெனினும் உறுப்புதானமாவது உணருங்கள். (இவைபோன்ற) அறிவுரை வழங்க மாட்டேனென உறுதிகொள்ளுங்கள். அதுவே போதும். . .

ராஜா ராணி..

Image
ராஜா ராணி பாத்தாச்சு. பெருசா விமர்சனம் எழுதுற அளவுக்கு எதுவுமில்ல. தேம்பித் தேம்பி அழவைக்காம, ஹைடெக் காதல் கதை சொல்லிருக்காங்க. படத்துல எனக்குப் பிடிச்ச முக்கியமான விஷயம்.. சத்யராஜ் கதாப்பாத்திரம். ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறியா?னு மகளைப் பார்த்து அசால்ட்டா கேட்கும் காட்சி செம.. மகளுடன் சேர்ந்து அழும்போது மனசுல நிக்குறார். நயனுக்கு கொஞ்சம் மேக்கப் கம்மி பண்ணிருக்கலாம். தலைக்குமேல அந்த பன் ஹேர்ஸ்டைல் பொருந்தவேயில்ல. ஆர்யாவுக்கோ நயன்தாராவுக்கோ.. நடிப்புக்குனு பெருசா வேலையில்ல. ஆளுக்கொரு பக்கம் உம்முனு இருந்தா போதும்னு அட்லீ சொல்லிட்டார் போல. மௌன ராகம் மாதிரி இந்தப் படம் நிச்சயம் இல்ல. அதுல மோகனுக்கும் ரேவதிக்கும் நிறைய காட்சிகள்.. கெமிஸ்ட்ரி.. பயாலஜினு மெலிதான காதல் இருக்கும். மௌன ராகத்துல வர்ற மாதிரி, முகம் பார்த்து காதல் ததும்புற, தடுமாறுற காட்சிகள் இதுல மிஸ்ஸிங். எங்கேயும் எப்போதும் படத்துலருந்து இன்னும் வெளிவராத ஜெய்.. வழக்கமான சந்தானம்..! காதல்ல தோல்வி அடைஞ்சுருக்காங்க..ங்குற ஒரே காரணத்தால மட்டும் ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு காதல் வருதுனு காட்டியிருக்காங்க. அது பரிதாபமா