தீராத பசிகொண்ட விலங்கு..
வாழ்வின் ஸ்வாரஸ்யமான அனுபவங்களை தொகுப்பாக வெளியிடுவதென்பது எழுத்தாளர்களுக்கேயுரிய பெருஞ்சவால். நூலிழையில் அது தற்பெருமையாகவோ, சுயசொரிதலாகவோ அமைந்துவிடக்கூடும். இதைத் தவிர்த்திடவே சிறுகதைத் தொகுப்புகள் என்ற பேர்வையில் ஆங்காங்கே அரிதாரமிட்டு சம்பவங்களை எழுதித் தள்ளுவர் சிலர். அவற்றில் பத்தில் நான்கு கதைகள் படிப்பவர் மனதை ஆட்கொண்டாலே பெரிய விஷயம் தான். வாழ்வில் இடம்பெறும் மிகச்சாதாரண சம்பவங்களில் கிடைக்கும் அசாதாரண அனுபவங்களின் தொகுப்புகளுக்கு பாவண்ணன் எழுதிய “தீராத பசி கொண்ட விலங்கு“ நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் இடம்பெறுபவர்கள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சட்டென காணாமற் போகும் மனதில் பதிந்த மனிதர்கள் தான். தினமும் நாம் கடந்து செல்லும் மரத்திலிருந்து மனிதர்கள் வரை ஏதோ ஒன்று நம்மை எந்தவகையிலோ பாதித்து பதிந்து செல்கின்றன. அவற்றிற்கான தேடல்களும் ஏக்கங்களும் புத்தகம் முழுக்க நிறைந்து கலந்திருக்கின்றது. இருபத்தி மூன்று (வெவ்வேறு) சம்பவங்களின் தொகுப்புகள் அடங்கிய இப்புத்தகத்தில் என்னை இரண்டாவதாய் படிக்கத் தூண்டிய பகுதியெனில் “நெருங்க முடியா இடைவெளி“ தான். தந்தைக்கும் மகனுக்குமா...