“மனம்“ - என் பார்வையில்..

மறுஜென்மம் அப்டினு ஏதாவது இருக்குதா? அப்டி இருந்தா திரும்ப பிறக்குறவங்க அதே உருவத்தோட பிறப்பாங்களா? குறிப்பா போன ஜென்ம ஞாபகங்கள் திரும்ப வருமா? முந்தைய ஜென்மத்துல தாங்கள் யாரை நேசிச்சாங்களோ அவங்களை இந்த ஜென்மத்துலயும் அடையாளங்காண முடியுமா? அப்பாவை கண்டுபிடிச்சாச்சு.. அப்டினா அம்மாவும் கிடைப்பாங்கனு தேட ஆரம்பிச்சா சித்ததப்பா, மாமா, தாத்தானு வரிசையா எல்லாரையும் கண்டுபிடிச்சுடலாமா?? இந்த மாதிரியான அறிவியல் கேள்விகளையெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படம் பார்க்க உக்கார்ந்தா போதும்.. “மனம்“ உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த குவியல்னு சர்டிபிகேட் குடுக்கலாம். நாகேஷ்வர்ராவ், நாகர்ஜூனா, நாகசைத்தன்யா மூவரும் நாகசைத்தன்யா, நாகர்ஜூனா, நாகேஷ்வர்ராவ் என்ற வரிசையில் நடித்திருக்கும் திரைக்கதை. ஆரம்பத்துலருந்து பார்க்கலேனா குழப்பம் தெளியிறதுக்குள்ள படம் முடிஞ்சிடும். தன் பெற்றோரான நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவின் மரணத்திற்குப் பின் நாகர்ஜூனா ரொம்ப வருடம் கழித்து அவர்களை அதே உருவில் இளைஞர்களாக காண்கிறார். இருவரையும் காதலர்களாக சேர்த்துவைக்க முயற்சி செய்து, கடைசியில் அவர்களுக்கே முன்ஜென்ம ஞாபகம் வந்து கட்ட...