என்னைப் பார்த்து சிரிக்கும் உன் கொலுசுகள்

காற்றிற்கும் ஒலியிருக்குமா உண்மையை சொல்.. அது உன் கால் கொலுசின் ஓசை தானே.. எல்லாப் பெண்களின் கொலுசுகளும் சத்தமிடுகின்றன.. உன் கொலுசுகள் மட்டும் சங்கீதம் பாடுகின்றன.. குளியலிலும் பிரியாது உன்னுடனிருக்கும் போதும் உன்னை முந்திக்கொண்டு வெட்கப்பட்டு சிணுங்கும் போதும் மௌனங்களை களைந்து ஊடல்களை உடைத்து கூடல்களை நெருக்கும்போதும் பின் வந்து கண்பொத்தும் தருணங்களில் காட்டிக்கொடுக்கும் போதும் என்னைப் பார்த்து ரகசியமாய் சிரிக்கின்றன.. உன்னுடன் சேர்ந்து உன் கொலுசுகளும்..