காலம் கடந்து...


தனிமையில் இருவரும் பேசவேண்டும் என்கிறாய்.
கை கோர்த்து கடலோரம் நடக்கலாமா என்கிறாய்.
திரை அரங்கிற்கு மகிழ்வாக செல்லலாமா என்கிறாய்.
என்னருகிலேயே இரு என்கிறாய்.
உன் பிரிவை தாங்க முடியவில்லை என்கிறாய்.
தொலைபேசியில் அவ்வப்போது சிணுங்குகிறாய்.
உன் முகம் பார்த்து வாழும் நாட்கள் போதும் என்கிறாய்.
சின்ன சின்ன சந்தோசங்கள் தான் வாழ்க்கை என்கிறாய்.
--- மறுப்பை மட்டுமே தெரிவிக்கும் எனக்கு
சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.
இருபது வயதில் நன் உன்னிடம் எதிர்பார்த்ததை
எழுபது வயதில் நீ என்னிடம் எதிர்பார்க்கிராயே..
நான் அடைந்த ஏக்கங்கள் இப்போது உனக்குப் புரிந்து என்ன பயன்?
உன்மீதாய் என்னுள் அடங்கிப்போன எத்தனையோ எதிர்பார்ப்புகள்
வாழ்வின் கடைசி நாட்களில் புரியப்படுகிறது..
இதுவும் ஒரு ஏமாற்றமே அன்றி வேறென்ன?

Comments

அற்புதம்!!!
நன்றாக இருக்கிறது,
வாழ்த்துக்கள்.
//நான் அடைந்த ஏக்கங்கள் இப்போது உனக்குப் புரிந்து என்ன பயன்?///


அருமையான தலைப்பு
//சைவகொத்துப்பரோட்டா..

அற்புதம்!!!
நன்றாக இருக்கிறது,
வாழ்த்துக்கள்//


நன்றி அண்ணாத்தை .

//மங்குனி அமைச்சர்...

நான் அடைந்த ஏக்கங்கள் இப்போது உனக்குப் புரிந்து என்ன பயன்?///

உற்சாகப்படுத்தியதற்கு நன்றி அமைச்சரே
ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க இந்து.. நைஸ்
//கவிதை காதலன்..

ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க இந்து.. நைஸ்//

ஃபீல் பண்ணினதுக்கு நன்றி காதலரே..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்