நான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..

பொதுவா சின்ன வயசுல நடந்த சம்பவம் எல்லாம் வளர வளர மறந்துடும். ஆனா மறக்க முடியாத சில விசயங்களும் இருக்கும். அது சோகமாவும் இருக்கலாம், சுவாரஸ்யமாவும் இருக்கலாம். என்னோட சின்ன வயசுல நா நிறைய சினிமா பாக்குறதுண்டு.. நானும் என்னோட பெரியப்பா பொண்ணும் ரொம்ப நல்ல தோழிகள். படத்துல வர்ற ஹீரோயின் எப்படி ஜடை போட்ருக்கா, எப்படி தோடு போட்ருக்கா, எப்படி செருப்பு போட்ருக்கானு பாத்து பாத்து அதே மாதிரி வேணும்னு அடம் பிடிச்சு வாங்குவோம். அப்புறம் அந்தந்த படத்துல அவங்க நடக்கிறது மாதிரி ஸ்டைலா நடந்து பாப்போம். இப்படி தான் ஒரு படத்துல (என்ன படம்னு மறந்து போச்சு) ஹீரோயின் white and white பேண்ட் ஷர்ட் போட்டுட்டு காலங்காத்தால ஜாகிங் போற காட்சியைப் பார்த்தோம். உடனே எங்களுக்கு அதே மாதிரி ஜாகிங் போகணும்னு ஆசை வந்திடுச்சு.. அதுவும் அதே மாதிரி white and white dress போட்டுக்கிட்டு ஜாகிங் பண்ணனும்னு முடிவு பண்ணினோம். நா அவளோட அம்மா கிட்ட போய் dressக்கு கெஞ்சினேன்.. அவ என் அம்மாகிட்ட வந்து கெஞ்சினா. பல நாள் கெஞ்சலுக்கு அப்புறம் ஒரு வழியா ரெண்டு பேருக்கும் வாங்கி குடுத்தாங்க. ஒரு நல்ல நாள் பாத்து ஜாகிங் பண்ண முடிவெடுத்தோ...