ஊடலுக்காகக் காத்திருக்கிறேன்



என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே..

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..

அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..

பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.

பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..




ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..

உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..

எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..

என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..

Comments

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..//

இந்த வரி நல்ல இருக்கு கவிதைக்கு ஏற்ற புகைபடம் வாழ்த்துக்கள்
//ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..///

அட அட ..சூப்பர் வரி..
// சௌந்தர்..

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..//
இந்த வரி நல்ல இருக்கு கவிதைக்கு ஏற்ற புகைபடம் வாழ்த்துக்கள்//

முதல் ஆளா வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி சௌந்தர்.


//ஜெய்லானி..

அட அட ..சூப்பர் வரி..//

நன்றி ஜெய்லானி,. உங்கள் ரசனை என்னை உற்சாகப்படுத்துகிறது..
fall down... ???

நல்லா எழுதியிருக்கீங்க...

a romantic poem...!!!

:))
Chitra said…
உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..


..... அப்படியே சொக்கி- ஒன்றி போய் எழுதி இருக்கிறீர்கள்......கவிதையில், காதல் ரசம் சொட்டுகிறது. படங்களே கவிதையாய் போலவும் .......... அசத்தல்.
r.selvakkumar said…
சமீபத்தில் நான் வாசித்ததிலேயே பெஸ்ட் ரொமாண்டிக் கவிதை இதுதான். அறிமுகப்படுத்திய தங்கை சித்ராவிற்கு நன்றி..

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..

இங்கே இருந்து டாப் கியரில் கிறுகிறுக்க வைக்கிற கவிதை, கடைசி வரி வரும்போது காதல் கிறுக்குப் பிடிக்க வைக்கிறது.

அசத்தல்!
நிஜமாய் கரைந்து தான் போகிறது! படிப்பவர் மனதும் ......
R.Gopi said…
//என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே..//

அசத்தல் ஆரம்பம் இந்திரா

//பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..//

வாவ்வ்வ்வ்வ் காதல் பொங்கி வழிகிறது......

//'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.//

ஊடலின் கோபம் குறைய ஊட்டி விடப்படுமோ??

//ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..//

பலே....

//உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..//

ஆஹா... நான் எதிர்பார்த்த வரி, கடைசியில் மாறிவிட்டதே!!! அதான் உங்கள் வெற்றியோ!!?

//என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை களைத்துவிட்டேன்..
'பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..//

கலைத்து விட்டேன் என்றிருக்க வேண்டுமோ இந்திரா??

//ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக.. //

சூப்பர் ஃபினிஷ்..... ஊடல் எனும் நாடகம் கூடலில் தானே போய் முடியும்...

கலக்கல் எழுத்து உங்களுடையது...
அருமையான கவிதை...வாழ்வின் சிறு விடயங்களை சுவை பட எழுதி இருக்குறீர்கள்...
//Chitra said...
..... அப்படியே சொக்கி- ஒன்றி போய் எழுதி இருக்கிறீர்கள்......கவிதையில், காதல் ரசம் சொட்டுகிறது. படங்களே கவிதையாய் போலவும் .......... அசத்தல்.//

செல்வகுமார் சொல்லி விட்டார்.. நானும் சொல்கிறேன்..
நன்றி சித்ரா ..

//ப்ரின்ஸ் said...
நிஜமாய் கரைந்து தான் போகிறது! படிப்பவர் மனதும் ......

மனத்தைக் கரைத்து விட்டதா??
நிஜமாகவா?? அப்படியென்றால் எனக்கு மகிழ்ச்சி தான் நண்பரே..
ப்ரியமுடன் வசந்த் said...
fall down... ???
நல்லா எழுதியிருக்கீங்க...
a romantic poem...!!!
:))//

நன்றி வசந்த்..
fall down எல்லாம் இல்ல..

// r.selvakkumar said...
சமீபத்தில் நான் வாசித்ததிலேயே பெஸ்ட் ரொமாண்டிக் கவிதை இதுதான். அறிமுகப்படுத்திய தங்கை சித்ராவிற்கு நன்றி..
சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..
இங்கே இருந்து டாப் கியரில் கிறுகிறுக்க வைக்கிற கவிதை, கடைசி வரி வரும்போது காதல் கிறுக்குப் பிடிக்க வைக்கிறது.
அசத்தல்!//

செல்வகுமாருக்கு என் நன்றி..
பாராட்டுவதற்கும் ஒரு மனது வேண்டும்..
உங்களுக்கு அது தாராளமாக இருக்கிறது..
மேலும் அடிக்கடி வாங்க..
R.Gopi said...

//அசத்தல் ஆரம்பம் இந்திரா
வாவ்வ்வ்வ்வ் காதல் பொங்கி வழிகிறது......
ஊடலின் கோபம் குறைய ஊட்டி விடப்படுமோ??
பலே....ஆஹா... நான் எதிர்பார்த்த வரி, கடைசியில் மாறிவிட்டதே!!! அதான் உங்கள் வெற்றியோ!!?
கலைத்து விட்டேன் என்றிருக்க வேண்டுமோ இந்திரா??
சூப்பர் ஃபினிஷ்..... ஊடல் எனும் நாடகம் கூடலில் தானே போய் முடியும்...
கலக்கல் எழுத்து உங்களுடையது...//


நான் இதுவரை எழுதிய பதிவுகளில் இந்த அளவிற்கு ஒரு பாராட்டு கிடைத்ததில்லை.

நன்றி கோபி..

உங்கள் ரசனையை நான் வரவேற்க்கிறேன்..

ஒருவரின் செயல்களை சிறப்பானதாக்குவது அதற்கும் அவருக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் தான்.

அதே சமயம் அதிலுள்ள குறைகளையும் சுட்டிக் காட்டுவது முக்கியம்.

உங்கள் கருத்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகிறது.
நன்றி.

தவறை திருத்தி விட்டேன். சரிதானே?? அடிக்கடி வாங்க..
//ராசராசசோழன் said...

அருமையான கவிதை...வாழ்வின் சிறு விடயங்களை சுவை பட எழுதி இருக்குறீர்கள்...//


நன்றி நண்பரே..
வாழ்க்கை என்பதே சுவையான அத்தியாயங்களின் தொகுப்பு தானே..
//ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக.. //

கலக்கல்....

அருமையான கவிதை.
//பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..//

நைஸ் லைன்ஸ்... ரொம்ப ரசிச்சேன்
//சே.குமார் said...

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக.. //
கலக்கல்....
அருமையான கவிதை.///


நன்றி குமார்..


//கவிதை காதலன் said...

பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..//
நைஸ் லைன்ஸ்... ரொம்ப ரசிச்சேன்//

உங்க அளவுக்கு எழுத முடியாது..
இருந்தாலும் முயற்சி பண்ணியிருக்கேன்..
பாராட்டியதற்கு நன்றி..
r.v.saravanan said…
கலக்கல் கவிதை.
kalai said…
supera eruku ene en fav.poem ethuthan thanks
r.v.saravanan said...
கலக்கல் கவிதை.//

நன்றி சரவணன்..


//kalai said...
supera eruku ene en fav.poem ethuthan thanks //

நன்றி கலை.. ஆனா காமெடி ஏதும் பண்ணலையே..
HariShankar said…
அசத்தல்.. காதல் தெரிகுது. காதலி இல்லாத ஒரு இளைஞன் படிச்சா ரொம்ப பீல் பண்ண நேரிடும் :)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..