தேடிப்போய் வாங்குன பல்பு...

ஏதோ வேண்டுதல்னு குலதெய்வம் கோயிலுக்கு அம்மா போகணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. லீவு கெடைக்காததால போகமுடியாம இருந்தது. என்னோட தங்கைக்கு மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்குறதால, யாரோ ஜோசியர் அவளை அந்த கோவில்ல விளக்கேத்த சொல்லியிருந்தாராம். அதுனால இந்தவாரம் எல்லாரும் சேர்ந்து அந்த கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்னு முடிவெடுத்தாங்க. ஒரு வேன் பிடிச்சு, எங்க குடும்பம், என் சித்தப்பா குடும்பம்னு ஒரு 12 பேர் போயிருந்தோம். எங்க சித்தப்பாவோட பேத்தி எங்களோட வந்திருந்துச்சு. அதுக்கு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும். பூஜைய முடிச்சிட்டு வெளில வரும்போது வாசல்ல நெறைய பிச்சைக்காரங்க இருந்தாங்க. அம்மா அவங்களுக்கு காசு போட்டாங்க. எங்க கூட வந்திருந்த அந்த குட்டிப்பொண்ணு, தான்தான் காசு போடுவேணு அடம்பிடிச்சு என்கிட்ட வந்து கேட்டுச்சு. நானோ “அதான் அவங்க போட்டுட்டாங்கல்ல.. போதும் வா“னு கையப் பிடிச்சு இழுத்தேன். (சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க). உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. (அவ்வ்வ்வ்..)...