இப்படியும் பதிவு போடுவோம்ல..இந்த வருஷத்தோட முதல் பதிவு இது.

ம்ம்ம் என்ன பதிவு போடலாம்..?? எதப் பத்தி எழுதலாம்??

மொக்கையா ஏதாவது எழுதலாமா???

ம்ஹூம் வேணாம். வருஷம் பூராவும் தான் மொக்கை போட்றோம். மொத பதிவுலயாவது மொக்கையில்லாம ஏதாவது எழுதலாம்.

எதுக்காவது டிப்ஸ் குடுக்கலாமா??

வேணாம் வேணாம் ஏற்கனவே குடுத்த டிப்ஸயே யாரும் கேட்டதா தெரியல.

பதிவுலகம் பத்தியும் பதிவர்களப் பத்தியும் ஏதாவது விமர்சிச்சு எழுதலாமா?

அந்த அளவுக்கு நாம வொர்த் கிடையாதே.. அப்டினா அதுவும் வேணாம்.

சினிமா விமர்சனம் எழுதலாமா??

மத்தவங்க எழுதிருக்குற விமர்சனத்த படிக்கவே ஆளில்லாம இருக்கு. இதுல நாம வேறயா??? வேணாம்.

கதை.. கவிதை ஏதாவது??

ஐயயோ.. வேணவே வேணாம். தலைப்ப பாத்துட்டு வேற ப்ளாக் போயிட்றதா கேள்விப்பட்டேன்.

பதிவர்கள் யார்கூடயாவது சண்டை போடலாமா?

ம்கும் மற்ற பதிவர்கள் சண்டைங்குற பேர்ல போட்ற காமெடியே போதும். இதுல நாம வேற சிரிக்க வைக்க வேணாம்.

சமுதாயத்தப் பத்தி காரசாரமா விவாதம் பண்ணலாமா??

ம்கும்.. படிச்சுட்டு கெக்கே பெக்கேனு சிரிச்சிட்டு காமெடி பீசுனு சொல்லிட்டுப் போய்டுவாங்க.. வேணாம்.

அப்புறம் என்னதான் எழுதுறது??

“வருஷம் ஃபுல்லா பதிவுங்குற பேர்ல எதையாவது எழுதி எங்கள கொலையா கொல்ற.. இந்த வருஷத்தோட முதல் பதிவுலயாவது எதுவுமே எழுதாம எங்கள நிம்மதியா விடேன்“னு நீங்க கத்துறது எனக்கு கேட்ருச்சு.

பொழச்சுப் போங்க.

அடுத்த பதிவுல சந்திப்போம்..

(இப்படியும் பதிவு போடுவோம்ல..)

.

Comments

புதுவருட வாழ்த்துக்கள்
எப்படிங்க இப்படி அழகா யோசிக்கறீங்க...
R.Gopi said…
ஆஹா...

இந்த வருடத்தில் நான் படித்த முதல் பதிவே இவ்வளவு அட்டகாசமா இருந்தா, இன்னும் இருக்கற 360 நாட்கள் எப்படி இருக்குமோ!!

இருந்தாலும், இவ்ளோ அருமையா யோசிச்சு, இப்படி ஒரு அற்புதமான பதிவை போட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

இந்த மாதிரி பதிவு எழுதினா கூட, எப்படியெல்லாம் கமெண்ட் போட வேண்டியிருக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா
Jeni said…
Aen ka intha kola very ungaluku.

Any way, aetho eluthuna sari than. Enaku poluthu pogalana padichkuven.
Balaji saravana said…
//நீங்க கத்துறது எனக்கு கேட்ருச்சு //
அய்யய்யோ மைன்ட் வாய்ஸ்லாம் உங்களுக்கு கேக்க ஆரம்பிச்சுடுச்சே! இனிமே பிரச்சனை தான் :)
யாருக்கு அப்படின்னு கேக்காதீங்க.. யாருக்கோ :)
Kousalya said…
ம்ம்...ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை...நடக்கட்டும் தோழி. :))

புத்தாண்டு வாழ்த்துக்கள்
இப்படியும் கமெண்ட் போடலாம்
பதிவே இல்லாத பதிவு போல....
நடக்கட்டும்
//ஆஹா...

இந்த வருடத்தில் நான் படித்த முதல் பதிவே இவ்வளவு அட்டகாசமா இருந்தா, இன்னும் இருக்கற 360 நாட்கள் எப்படி இருக்குமோ!!

இருந்தாலும், இவ்ளோ அருமையா யோசிச்சு, இப்படி ஒரு அற்புதமான பதிவை போட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

இந்த மாதிரி பதிவு எழுதினா கூட, எப்படியெல்லாம் கமெண்ட் போட வேண்டியிருக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா//

ரொம்ப பாவம் இவர்....
THOPPITHOPPI said…
இது பதிவா?
இப்படி எப்படிங்க யோசிக்கறீங்க அழகா.

அதாங்க சங்கவி வித்தியாசமா யோசிக்கிறது
என்ன மாதிரி கமெண்ட் போடுறது?

சூப்பர்னு போட்டா இது மாதிரியே மொக்கை பதிவு நிறைய போட்டுருவாங்க.

மொக்கைன்னு போட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டாலும் படும்.

இதெல்லாம் ஒரு பதிவான்னு போட்டா கோபம் வந்து பேசமா கூட இருக்கலாம்.

ஆபிஸ்ல வேலையே இல்லயா?அப்படின்னு போட்டா "உனக்கு மட்டும் என்னவாம்?"ன்னு பதில் வந்தாலும் வரும்.

வருசத்தோட முதல் பதிவு கொஞ்சம் உருப்படியா போடகூடாதா?ன்னு கேட்டா "என்ன அட்வைஸா? ஆளைவிடு"ன்னுதெறிச்சு ஓட வாய்ப்பிடுக்கு....

என்ன பின்னூட்டம் போடுறது?? பேசாம பின்னூட்டமே போடாம இருந்திட வேண்டியது தான்.

(இப்படியும் பின்னூட்டம் போடுவோம்ல)
நான் உங்க பதிவை வரிக்கு வரி
பாராட்டி ஒரு Comment போட்டு
இருந்தேன்..

நிறைய கொலை மிரட்டல் வந்ததால
அதை நானே Delete பண்ணிடறேன்..

( இப்படியும் Comment போடுவோம்ல.. )
//சங்கவி said...

எப்படிங்க இப்படி அழகா யோசிக்கறீங்க...//

ஹிஹி..
ரொம்ப புகழாதீங்க சார்..
//Samudra said...

புதுவருட வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
//வழிப்போக்கன் - யோகேஷ் said...

ஹா ஹா........//

பதிவு அவ்ளோ நல்லா இருக்கா??
//R.Gopi said...

இந்த மாதிரி பதிவு எழுதினா கூட, எப்படியெல்லாம் கமெண்ட் போட வேண்டியிருக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா//

உங்க குமுறல் எனக்குப் புரியுது..
அடுத்து நிறையா மொக்கை பதிவுகள் எழுதி இந்தக் குறைய சரி பண்ணிட்றேன். கவலைப்படாதீங்க கோபி.
//Jeni said...

Aen ka intha kola very ungaluku.

Any way, aetho eluthuna sari than. Enaku poluthu pogalana padichkuven.//

நீங்க வெட்டியா தான் இருக்கீங்கனு எனக்குப் புரியுது ஜெனி..
//Kousalya said...

ம்ம்...ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை...நடக்கட்டும் தோழி. :))

புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி கௌசல்யா..
புது வருட வாழ்த்துக்கள்.
//Balaji saravana said...

அய்யய்யோ மைன்ட் வாய்ஸ்லாம் உங்களுக்கு கேக்க ஆரம்பிச்சுடுச்சே! இனிமே பிரச்சனை தான் :)
யாருக்கு அப்படின்னு கேக்காதீங்க.. யாருக்கோ :)//

ம்ம்ம் தெளிவா புரிஞ்சிடுச்சு பாலாஜி.
//எல் கே said...

நடக்கட்டும்//

டாங்க்ஸ்ங்க..
//ரஹீம் கஸாலி said...

பதிவே இல்லாத பதிவு போல....//கமெண்டே இல்லாத கமெண்ட் மாதிரி..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படியும் கமெண்ட் போடலாம்//

இதெல்லாம் ஒரு கமெண்டா??
(இதெல்லாம் ஒரு பதிவானு கேக்குறது காதுல விழுகுது)
//வெட்டிப்பேச்சு said...ரொம்ப பாவம் இவர்....//

என்ன பண்றதுங்க??
பதிவெழுத ஆரம்பிச்சாச்சு.
பாவ புண்ணியம் எல்லாம் பாக்க முடியாதே..
vinu said…
பொழச்சுப் போங்க.

அடுத்த commentல சந்திப்போம்..

இப்படியும் comment போடுவோம்ல..

ivaaru pathivu potta suyasorithal purinthullla indiraavin cheygayaay vanmayaaaga kandikkurom
vinu said…
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..

ippudi metterea illaamal pathivai poduravangalukku embuttumaa fineuu
☀நான் ஆதவன்☀ said...

என்ன மாதிரி கமெண்ட் போடுறது?

சூப்பர்னு போட்டா இது மாதிரியே மொக்கை பதிவு நிறைய போட்டுருவாங்க.

மொக்கைன்னு போட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டாலும் படும்.

இதெல்லாம் ஒரு பதிவான்னு போட்டா கோபம் வந்து பேசமா கூட இருக்கலாம்.

ஆபிஸ்ல வேலையே இல்லயா?அப்படின்னு போட்டா "உனக்கு மட்டும் என்னவாம்?"ன்னு பதில் வந்தாலும் வரும்.

வருசத்தோட முதல் பதிவு கொஞ்சம் உருப்படியா போடகூடாதா?ன்னு கேட்டா "என்ன அட்வைஸா? ஆளைவிடு"ன்னுதெறிச்சு ஓட வாய்ப்பிடுக்கு....

என்ன பின்னூட்டம் போடுறது?? பேசாம பின்னூட்டமே போடாம இருந்திட வேண்டியது தான்.

(இப்படியும் பின்னூட்டம் போடுவோம்ல)////
பதிவைவிட இந்த பின்னூட்டம் சூப்பர்.
//THOPPITHOPPI said...

இது பதிவா?//

பதிவுனு நா சொன்னேனா???
நா தான் எதுவுமே எழுதலனு சொல்லிட்டேன்ல..
//☀நான் ஆதவன்☀ said...

என்ன மாதிரி கமெண்ட் போடுறது?

சூப்பர்னு போட்டா இது மாதிரியே மொக்கை பதிவு நிறைய போட்டுருவாங்க.

மொக்கைன்னு போட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டாலும் படும்.

இதெல்லாம் ஒரு பதிவான்னு போட்டா கோபம் வந்து பேசமா கூட இருக்கலாம்.

ஆபிஸ்ல வேலையே இல்லயா?அப்படின்னு போட்டா "உனக்கு மட்டும் என்னவாம்?"ன்னு பதில் வந்தாலும் வரும்.

வருசத்தோட முதல் பதிவு கொஞ்சம் உருப்படியா போடகூடாதா?ன்னு கேட்டா "என்ன அட்வைஸா? ஆளைவிடு"ன்னுதெறிச்சு ஓட வாய்ப்பிடுக்கு....

என்ன பின்னூட்டம் போடுறது?? பேசாம பின்னூட்டமே போடாம இருந்திட வேண்டியது தான்.

(இப்படியும் பின்னூட்டம் போடுவோம்ல)//ஆனாலும் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு ஆதவன்..
karthikkumar said…
(இப்படியும் பதிவு போடுவோம்ல..///
இதுக்கு எந்த மாதிரி கமென்ட் போடறது...

ஸ்மைலி போடலாமா

வேண்டாம் வேண்டாம் அபராதம் போட்ருவாங்க.

இல்ல பதிவு அருமைனு போடலாமா

ஐயோ அப்புறம் டெரர் மச்சி வந்து ஏன்டா பொய் சொல்ற னு சொல்லுவார்.

அப்போ என்னதான் எழுதுறது....
//(இப்படியும் பதிவு போடுவோம்ல..)//

எப்படியும் எங்கள கொல்றதுன்னு முடிவுபண்ணீட்டீங்க....

பார்த்து கொஞ்சம் வலிக்காமா....

ஹிஹிஹி
//வால்பையன் said...

இப்படி எப்படிங்க யோசிக்கறீங்க அழகா.

அதாங்க சங்கவி வித்தியாசமா யோசிக்கிறது//

ஆமாங்க.. ரொம்ப நல்ல மனசு.
நானும் சங்கவிய தான் சொன்னேங்க.
//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..

ippudi metterea illaamal pathivai poduravangalukku embuttumaa fineuu//

இதுக்கு தண்டனையா கொஞ்ச நாள் பதிவுலகத்து விட்டு தள்ளி வைக்கலாம்.....
☀நான் ஆதவன்☀ said...

என்ன மாதிரி கமெண்ட் போடுறது?

சூப்பர்னு போட்டா இது மாதிரியே மொக்கை பதிவு நிறைய போட்டுருவாங்க.

மொக்கைன்னு போட்டா அவங்க மனசு கஷ்டப்பட்டாலும் படும்.

இதெல்லாம் ஒரு பதிவான்னு போட்டா கோபம் வந்து பேசமா கூட இருக்கலாம்.

ஆபிஸ்ல வேலையே இல்லயா?அப்படின்னு போட்டா "உனக்கு மட்டும் என்னவாம்?"ன்னு பதில் வந்தாலும் வரும்.

வருசத்தோட முதல் பதிவு கொஞ்சம் உருப்படியா போடகூடாதா?ன்னு கேட்டா "என்ன அட்வைஸா? ஆளைவிடு"ன்னுதெறிச்சு ஓட வாய்ப்பிடுக்கு....

என்ன பின்னூட்டம் போடுறது?? பேசாம பின்னூட்டமே போடாம இருந்திட வேண்டியது தான்.

(இப்படியும் பின்னூட்டம் போடுவோம்ல)////
பதிவைவிட இந்த பின்னூட்டம் சூப்பர்.
மொக்கையா ஏதாவது எழுதலாமா???

இந்திரா: அந்த alaவுக்கு நான் வொர்த் இல்லிங்க

எதுக்காவது டிப்ஸ் குடுக்கலாமா??

இந்திரா:ஹோட்டல்ல சாப்டதுக்கே காசு கொடுக்க வக்கில்லை டிப்ஸ் வேறயா?

பதிவுலகம் பத்தியும் பதிவர்களப் பத்தியும் ஏதாவது விமர்சிச்சு எழுதலாமா?

இந்திரா: அடிவாங்கிற அளவுக்கு தெம்பில்லை

சினிமா விமர்சனம் எழுதலாமா??

இந்திரா: சினிமாபார்த்து புரியுற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாதே..

கதை.. கவிதை ஏதாவது??

இந்திரா: இருங்க வேற பிளாக்கில இருந்து திருடட்டு வரேன்

பதிவர்கள் யார்கூடயாவது சண்டை போடலாமா?

இந்திரா:கடைசில அடி வங்க போறது நாந்தான

சமுதாயத்தப் பத்தி காரசாரமா விவாதம் பண்ணலாமா??

இந்திரா: அப்டின்ன என்ன ? சமுதாயம் எந்த கடைல கிடைக்கும்
அப்புறம் என்னதான் எழுதுறது??

மக்கள் : நீ ஆணிய புடுங்க வேணாம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீங்க ரொம்ப நல்லவுங்க
அடடே..! புதுவருட வாழ்த்துக்கள்..
பொழச்சுப் போங்க.

அம்மா இந்திரா, இத நீ கடைசி வரைக்கும் ஃபாலோ பண்ணன்னா, அல்லாருமா சேந்து உனக்கு முக்கு ரோட்டுல செல வப்போம்......

டீலா... நோ டீலா...?
//வெங்கட் said...

நான் உங்க பதிவை வரிக்கு வரி
பாராட்டி ஒரு Comment போட்டு
இருந்தேன்..

நிறைய கொலை மிரட்டல் வந்ததால
அதை நானே Delete பண்ணிடறேன்..//

மிரட்னது யாருனு மட்டும் சொல்லுங்க.. அவங்களுக்காக ஸ்பெஷலா ஒரு மொக்கை பதிவு போட்டுடலாம்.
//vinu said...

பொழச்சுப் போங்க.

அடுத்த commentல சந்திப்போம்..

இப்படியும் comment போடுவோம்ல..

ivaaru pathivu potta suyasorithal purinthullla indiraavin cheygayaay vanmayaaaga kandikkurom//

கண்டிக்கிறீங்களா??? நா தான் எதுவுமே எழுதலயே.. ஒரு வேளை எழுதலனு தான் இந்த கோவமா?
சரி விடுங்க.. சீக்கிரமே அடுத்த பதிவு எழுதிட்றேன்.
ஆஹா இது நல்லாருக்கே
//ரஹீம் கஸாலி said...

பதிவைவிட இந்த பின்னூட்டம் சூப்பர்.//

ஹிஹிஹி
நல்லா சமாளிக்கிறீங்க..
//மாணவன் said...

எப்படியும் எங்கள கொல்றதுன்னு முடிவுபண்ணீட்டீங்க....

பார்த்து கொஞ்சம் வலிக்காமா....

ஹிஹிஹி//

ரொம்பப் பெருந்தன்மை சார் உங்களுக்கு.
//vinu said...

ippudi metterea illaamal pathivai poduravangalukku embuttumaa fineuu//

அவங்களுக்கு இதே மாதிரி இன்னும் நாலு பதிவு எழுதனும்னு தண்டனை குடுத்துடலாமா?? டெரரா இருக்கும்ல..
//karthikkumar said...

இதுக்கு எந்த மாதிரி கமென்ட் போடறது...

ஸ்மைலி போடலாமா

வேண்டாம் வேண்டாம் அபராதம் போட்ருவாங்க.

இல்ல பதிவு அருமைனு போடலாமா

ஐயோ அப்புறம் டெரர் மச்சி வந்து ஏன்டா பொய் சொல்ற னு சொல்லுவார்.

அப்போ என்னதான் எழுதுறது....//

இப்ப என்ன தான் சொல்றீங்க..
//மாணவன் said...இதுக்கு தண்டனையா கொஞ்ச நாள் பதிவுலகத்து விட்டு தள்ளி வைக்கலாம்.....//

அப்புறம் நா எல்லாருக்கும் என்னோட பதிவ மெயில் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்ல..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மக்கள் : நீ ஆணிய புடுங்க வேணாம்...//

தேவையில்லாத ஆணியா? தேவையிருக்குற ஆணியா?
//பட்டாபட்டி.... said...

... .. .//

இதுக்கு சி.பி.செந்தில்குமார் சார் எவ்ளவோ பரவாயில்ல பட்டா..
//சி.பி.செந்தில்குமார் said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ippadium coment poduvom.. ha ha ha//

என்ன பண்றது செந்தில் சார்?? இந்தப் பதிவப் படிக்கிற எல்லாருமே இப்படி தான் ஆயிட்றாங்க..
//மின்மினி RS said...

அடடே..! புதுவருட வாழ்த்துக்கள்..//

உங்களுக்கும் தான்.
//மங்குனி அமைச்சர் said...

நீங்க ரொம்ப நல்லவுங்க//

டாங்க்ஸ்ங்க..
ரொம்ப புகழாதீங்க மங்கு.
//dineshkumar said...

ஆஹா இது நல்லாருக்கே//

ஹிஹிஹி
//வார்த்தை said...

பொழச்சுப் போங்க.

அம்மா இந்திரா, இத நீ கடைசி வரைக்கும் ஃபாலோ பண்ணன்னா, அல்லாருமா சேந்து உனக்கு முக்கு ரோட்டுல செல வப்போம்......

டீலா... நோ டீலா...?//

நோ டீல்.. நோ டீல்..
எனக்கு செல வக்கிறதெல்லாம் பிடிக்காதுங்க.
இப்பிடியும் ஒரு பதிவா...?
ஒரு விஷயத்தையும் சொல்லாமலே பதிவ கலக்கிடிங்க

காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு
புத்தாண்டில் முதல் பல்பு கொடுத்தாச்சா? உங்களை அடிச்சிக்க ஆளேயில்ல தாயி..
ஏன் இந்த கொலைவெறி..
வைகை said…
எச் சூஸ் மீ....என் தீப்பெட்டிய யாராவது பாத்திகளா?
Lakshmi said…
என்னங்க நடக்குது இங்க? பின்னூட்டமலாம் படிச்சா தலை க்ர்ரடிக்குதே.
ஒஹோ... இப்படியும் பதிவு போடலாமா...
Chitra said…
ஹா,ஹா,ஹா,ஹா.... நேரம் இருக்கும் போது, முன்பு நான் எழுதிய பதிவு ஒன்றை வாசித்து பாருங்க..... இதே மட்டையை வச்சு ஆடி, மக்களை ஒரு வழி பண்ணிட்டோம்ல....
http://konjamvettipechu.blogspot.com/2010/06/blog-post_17.html
Sathishkumar said…
பதிவுலகில் நிலைக்க இந்த மாதிரி பதிவுகள் மிக அவசியம்... கலக்குங்க
ஹா...ஹா...ஹாஹா... எப்படி இப்படி அழகா யோசிக்கறீங்க..?
வேணா....! வலிக்குது..........!

எப்பிடியெல்லாம் பதிவப் போடுறாங்கப்பா..! உக்காந்து யோசிப்பாங்களோ...!
Balaji saravana said…
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html
ஆதவன்,வெங்கட்,நல்ல ரமேஷ் போன்ற எத்தனையோ பதிவர்களின் சிந்தனையைக் கிளறி விட்ட இந்தப் பதிவுக்கு 2011 அவார்டு
கிடைத்தாலும் கிடைக்கலாம். :)

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..