எனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...

நா வேலைக்கு சேர்ந்த புதுசுல பஸ் பாஸ் எடுக்கலாம்னு, கூட வேலை பாக்குற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருந்தோம். வேலை பாக்குற கம்பெனில இருந்து ஒரு சான்றிதழும் போட்டோ ரெண்டும் கொண்டு போகணும்னு , தெரிய வந்துச்சு. ஆபீஸ்ல அந்த சான்றிதழ, தனித்தனியா முந்தின நாளே வாங்கி வச்சுகிட்டோம். அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் பேசிவச்சு, மறுநாள் காலேல பத்து மணிக்கு பாஸ் எடுக்குற எடத்துக்கு போய்டலாம்னு சொல்லி வச்சிருந்தோம். அதுல ரெண்டு பேர் வரமுடியாதுனு சாக்கு சொன்னாங்க. நான் தான் அவங்கள திட்டி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன். சரின்னு சொல்லிட்...