மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..

மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது. “மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன் / காதலியாக, கணவன் / மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இர...