நான் திமிரானவள்..



உருவமில்லா உள்மனது
உள்ளூர உருமுகிறது..
உனை சந்திக்கும் அந்நிமிடம்
வருத்தமில்லாமல் வந்தே தீருமென..

வீணாய்ப்போன விசும்பல்களுக்கும்,
விரட்டியெடுத்த புலம்பல்களுக்கும்,
ஒட்டு மொத்த சமாதானமாய்
உருமாறும் அந்நிமிடம்..

கண்ணாடி முன் நிற்க
கண் கூசிய பொழுதுகள்,
இனி பின்னோடிப் போய்விடவே
முன் வந்துநிற்பேன்.. அந்நிமிடம்..

நீ மட்டுமே உலகமென
நிஜம் தொலைத்த நிழலான,
நெருப்பாய் சுட்ட நினைவுகளை
நசுக்கிச் சாகடிக்க,
நிச்சயமாய் காத்திருக்கும்
நெருடலற்ற அந்நிமிடம்.

வேண்டாமென வேண்டுமென்றே
விட்டகர்ந்த உன்னை,
தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க
தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும்
தடையில்லா அந்நிமிடம்.

கண்கள் தாழாது,
கலங்கி நிற்காது,
முகம் பார்த்து கூறக் கேட்பாய்
முழுதாய் அந்நிமிடம்..

வேரூன்றி விட்டதாய்
வெறுப்பில் வெந்து தவிக்காது,
விடிந்துவிட்ட என் பொழுதுகள்
விடியச் செய்தது உன்னாலான இருள்களை..
விட்டு விலகிச் சென்றபின்னும்,
விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும்
விம்மாது வாயாரச் சொல்வேன்
வந்தடையும் அந்நிமிடம்..

துயரத்தால் துடிக்காது,
ஏமாற்றத்தில் நொருங்காது,
மறுப்பில் மடியாது, காத்திருக்கிறேன்..
உன்னைப் பழிவாங்கும் அந்நிமிடம்..

வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்
விடையளிக்கும் அந்நிமிடத்தில்,
வீண் திமிரென நினைத்தால்...

ஆம் -
நான்... திமிரானவள்..
.
.

Comments

எக்ஸலண்ட். இந்தத் திமிர் அவசியம் வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.
Unknown said…
புரட்சி கவிதை
வாழ்த்த வயதில்லை
வணக்கங்கள்
கவிதை கம்பீரத்துடன் மிளிர்கிறது..

வாழ்த்துக்கள்..
SURYAJEEVA said…
இங்க இந்திரான்னு ஒருத்தர் தமாஷா எழுதிகிட்டு இருந்தாங்க, அவங்களை காணோம்? யார் மேலேயோ கோபம் போலிருக்கு... ரௌத்திரம் பழகுங்கள்.. மிகவும் அவசியமானது
"வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்" நல்ல சொல்லாடல்!
" வாழ்ந்து என்ன ஆகப்போகிறது?
சேது தொலையலாம்!
செத்து என்னவகபோகிறது?
வாழ்ந்து பார்க்கலாம்"! வாழ்த்துகள்!
"வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்" நல்ல சொல்லாடல்!
" வாழ்ந்து என்ன ஆகப்போகிறது?
செத்து தொலையலாம்!
செத்து என்ன ஆகபோகிறது?
வாழ்ந்து பார்க்கலாம்"! வாழ்த்துகள்!
K.s.s.Rajh said…
////வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்
விடையளிக்கும் அந்நிமிடத்தில்,
வீண் திமிரென நினைத்தால்...////

சிறப்பான வரிகள்
தலைப்பே பயமா இருக்கு....?
வேண்டாமென வேண்டுமென்றே
விட்டகர்ந்த உன்னை,
தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க
தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும்
தடையில்லா அந்நிமிடம்.//

அருமையா போகுது ம்ம்ம்ம்....!!!
கண்கள் தாழாது,
கலங்கி நிற்காது,
முகம் பார்த்து கூறக் கேட்பாய்
முழுதாய் அந்நிமிடம்..//

நிமிடங்கள் நிமிடங்கள்.....
துயரத்தால் துடிக்காது,
ஏமாற்றத்தில் நொருங்காது,
மறுப்பில் மடியாது, காத்திருக்கிறேன்..
உன்னைப் பழிவாங்கும் அந்நிமிடம்..//

நெருப்பு நிமிடங்கள்....
வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்
விடையளிக்கும் அந்நிமிடத்தில்,
வீண் திமிரென நினைத்தால்...//

இதைவிட பழி தீர்த்தம் வேறொன்றுமில்லை அசத்தல்...!!!
Anonymous said…
மீனுவுக்கு என்னாச்சு! இவ்வளவு கோபம்..?
கவிதை அருமையாக இருக்கிறது.
கோழைகள் மட்டுமே உயிர்விட துணிவர். மண்ணின் மணம் ஒரு வீரப்பெண்மணி என்பதனை உங்களின் கவிதை மீண்டும் நிருபித்திருக்கிறது.
//கணேஷ் said...

எக்ஸலண்ட். இந்தத் திமிர் அவசியம் வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.//


நன்றிங்க..
//siva said...

புரட்சி கவிதை
வாழ்த்த வயதில்லை
வணக்கங்கள்//


வாங்க சிவா..
கருத்துக்கு நன்றி.
//கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை கம்பீரத்துடன் மிளிர்கிறது..

வாழ்த்துக்கள்..//


நன்றி சௌந்தர்..
//suryajeeva said...

இங்க இந்திரான்னு ஒருத்தர் தமாஷா எழுதிகிட்டு இருந்தாங்க, அவங்களை காணோம்? யார் மேலேயோ கோபம் போலிருக்கு... ரௌத்திரம் பழகுங்கள்.. மிகவும் அவசியமானது//


அப்பப்ப சீரியசாவும் எழுதியிருக்கேனே.. படிச்சதில்லையா??

“ரௌத்திரம்” அந்தப் படம் பாக்கலைங்க..
//ஓசூர் ராஜன் said...

"வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்" நல்ல சொல்லாடல்!
" வாழ்ந்து என்ன ஆகப்போகிறது?
சேது தொலையலாம்!
செத்து என்னவகபோகிறது?
வாழ்ந்து பார்க்கலாம்"! வாழ்த்துகள்!//


நன்றிங்க..
//K.s.s.Rajh said...

////வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..
வானம் விரியும் என் சிறகுகள்
விடையளிக்கும் அந்நிமிடத்தில்,
வீண் திமிரென நினைத்தால்...////

சிறப்பான வரிகள்//


கருத்துக்கு நன்றிங்க..
//MANO நாஞ்சில் மனோ //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மனோ சார்..



//தலைப்பே பயமா இருக்கு....?//


ம்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..
//atchaya said...

மீனுவுக்கு என்னாச்சு! இவ்வளவு கோபம்..?
கவிதை அருமையாக இருக்கிறது.
கோழைகள் மட்டுமே உயிர்விட துணிவர். மண்ணின் மணம் ஒரு வீரப்பெண்மணி என்பதனை உங்களின் கவிதை மீண்டும் நிருபித்திருக்கிறது.//


கருத்துக்கு நன்றி..

அப்புறம் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.
யார் அந்த மீனு????
//வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..//

அருமையான வரிகள்,இந்திரா.
ஒரு சிறப்பான கவிதைக்கு மிக்க நன்றி.
குட். நானும் சில சமயம் திமிரானவனா இருக்கனும்னு நினைப்பேன். பட் முடியதில்ல :)
இன்றைய சமுதாயத்தின் சீர்க்கேடை களைவதற்க்கும், எதிர் கொள்வதற்க்கும் மிக அவசியம் தேவை இந்த திமிர்.

இந்த திமிர் ரசிக்கும் படியாக....

வாழ்த்துகள்... சகோ...
நீ..............திமிரானவள்...

திமிரில் கவிதையும் அழகாக இருக்கிறது...
Unknown said…
சாமி ஏன் இம்புட்டு கோவம்...பயமா இருக்கு!
ஹேமா said…
இந்த உறுதிதான் வேணும் இந்திரா.வீழ்ந்துவிடாமல் வாழ்ந்துகொள்ளலாம் தோழி
Anonymous said…
வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..//

பிச்சி உதறிட்டீங்க சகோ! கலக்கல் கவிதை.
வேண்டாமென வேண்டுமென்றே
விட்டகர்ந்த உன்னை,
தயக்கமின்றி எதிர்வந்து, திடமாய் சந்திக்க
தீர்க்கமாய் வந்துகொண்டிருக்கும்
தடையில்லா அந்நிமிடம்.// என்னவொரு தைரியம்..
வீழ்ந்தாலும் வாழலாம் இந்த திமிர் இருந்தால்..

அற்புதமான கவிதை..

வாழ்த்துக்கள்+பாராட்டுகள்..
நேர்மையான திமிர்தனமும் ஒருவித அழகும்தான்.
உ உ
க க
நி நி

போன்ற எதுகை மட்டுமே கவிதைக்கான கவர்ச்சியை தருகிறது. உட்பொருளில் இன்னும் ஆளம் தேவை, அதுவும் இம்மாதிரியான கவிதைகளுக்கு இம்மாதிரியான மேக்கப் தேவையே இல்லை, ஒருவேளை இயல்பிலேயே இப்படிதான் கவிதை வரும் என்றால் நீ இன்னும் வளரணும் பொண்ணு என்று சொல்லி கமெண்டை முடிச்சிகிறேன்!

ஏற்கனவே இதை பற்றி ஒருக்கா பேசியதாக நினைவு!
கவர்ச்சியை தரும் அதே விசயம் கொஞ்சம் எரிச்சலையும் தருகிறது என சேர்த்துக் கொள்ளவும்!
ஆர்வா said…
கவிதாயினி இந்திரா கலக்குங்க...
he he he wt a comedy ,,, ithalam wast ya,,
eallam maayai than,,,
நிமிடத்தில் தீர்க்கமாய்
முடிவெடுக்கும் அழகிய
புரட்சிக் கவிதை...

தமிழ்மணம் 7
நல்ல கவிதை. நம்மைப் பார்த்துச் சிரிப்பவர்களை லட்சியம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது பழி வாங்குவதில் சேருமா என்று தெரியவில்லை.அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமே...நம்பிக்கையைக் காட்டும் கவிதை.
மனம் கவர்ந்த அருமையான பதிவு
கண்டு கொள்ளாமல் இருப்பதே மிகப் பெரிய புறக்கணிப்பு
வாழ்ந்து காட்டுதலே சரியான பழிவாங்கல்
தொடர வாழ்த்துக்கள்
//RAMVI//

// ☀நான் ஆதவன்☀ //

//ராஜா MVS //

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) //


கருத்துக்கு நன்றிங்க..
//விக்கியுலகம் said...

சாமி ஏன் இம்புட்டு கோவம்...பயமா இருக்கு!//


ஹிஹி..
நன்றிங்க..
//ஹேமா //

//மாய உலகம் //

//!* வேடந்தாங்கல் - கருன் *! //

//சி.பி.செந்தில்குமார் //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//வால்பையன் //


உங்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னூட்டம் மட்டும் வித்தியாசப்படுகிறதே.. காரணம் புரிகிறதா உங்களுக்கு??
இத.. இத... இத தான் நா எதிர்பார்த்தேன் அருண் சார்..
சரியான (எரிச்சலடைந்த) புரிதலுக்கு நன்றிங்க..
//கவிதை காதலன் //


நன்றி மணி சார்..
என்ன இநதப் பக்கம் ஆளையே காணோம்???
//மழலைப் பேச்சு //


அட.. வாங்க வாங்க..
எதிர்பார்த்த கருத்து தான்.
வருகைக்கு நன்றி நண்பரே..
//மகேந்திரன் //

//ஸ்ரீராம் //

// Ramani //


நன்றிங்க..
moosa shahib said…
ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518
துயரத்தால் துடிக்காது,
ஏமாற்றத்தில் நொருங்காது,
மறுப்பில் மடியாது, காத்திருக்கிறேன்..
உன்னைப் பழிவாங்கும் அந்நிமிடம்..

arumai sir....

www.rishvan.com
please read my blog and leave your comments.
////வேரூன்றி விட்டதாய்
வெறுப்பில் வெந்து தவிக்காது,
விடிந்துவிட்ட என் பொழுதுகள்
விடியச் செய்தது உன்னாலான இருள்களை..
விட்டு விலகிச் சென்றபின்னும்,
விரட்டிப் பிடித்தும் பிரிந்தபின்னும்
விம்மாது வாயாரச் சொல்வேன்
வந்தடையும் அந்நிமிடம்../////

துரத்து துரத்துவென
துரத்திகொண்டிருந்த
சோகங்கள்.......... அன்று...!

சோர்ந்துபோகாமல்
அழுத்தத்தின்
அழுத்தத்தினால்..
வெடித்து கிளம்பியுள்ளது
வீறுகொண்ட
வலிமிகு
வலிமைமிகு வரிகள்...இன்று...!


வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....
//காஞ்சி முரளி //


கருத்துக்கு நன்றி முரளி சார்..
பழையபடி நண்பரின் பின்னூட்டங்கள் தொடர எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி..
வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..

சபாஷ்!
Unknown said…
துயரத்தால் துடிக்காது,
ஏமாற்றத்தில் நொருங்காது,
மறுப்பில் மடியாது, காத்திருக்கிறேன்..
உன்னைப் பழிவாங்கும் அந்நிமிடம்..

இந்திரா இந்த வரிகளை படித்ததும் கொஞ்சம் பதறி அடித்தது என்னடா இந்திரா பழிவாங்க கிளம்பிட்டாங்களேன்னு

இறுதி வரிகள் சான்சே இல்லை இந்திரா கையக்குடுங்க

வாழ்ந்துகாட்டுதலை விட வேறில்லை
வலுவானதொரு பழிவாங்கல்..

சூப்பர் போங்க :)
//ரிஷபன்//


நன்றி நண்பரே..
//ரேவா //


வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றிங்க..
இந்த கவிதைக்கு இரண்டு முகம் போல் தெரிகிறது எனக்கு............
முதல் முகம் - காதலன் மீது கொண்ட அன்பும் அவனை மீண்டும் சந்திக்கும் ஏக்கமும்
இரண்டாம் முகம் - அவனது பிரிவால் உண்டான கோவம்.

முதல் ஏழு பத்திகளில் (ஏதோ காரணத்திற்காக) பிரிந்த காதலனை மீண்டும் சந்திக்கும் ஆர்வமும் ஆசையும் தெரிகிறது.
ஆனால் அந்த கடைசி இரண்டு பத்திகள் தான் உண்மையான உணர்ச்சியை சொல்கிறது.

கடைசி வரியை படித்த பின்பு திரும்பவும் படித்தேன் முழு கவிதையையும் உங்களுடைய உண்மையான உணர்ச்சியை புரிந்து கொண்டு.

அருமை இந்திரா.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..