உப்புமா.. (27.02.2012)
இன்னைக்கு ராசிப்பொண்ணுக்கு பிறந்தநாள். அவளோட கல்யாணத்துக்கப்புறம் வர்ற முதல் பிறந்தநாள்“ங்குறதால கொஞ்சம் ஸ்பெஷல். காலேலயே எல்லாரும் போன் பண்ணி வாழ்த்திட்டோம். எங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்“னு புலம்பினா.. அம்மா ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இன்டியாவாயிட்டாங்க.. ஒரே அழுவாச்சி தான் போங்க.. ஹாப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. ********************** நேத்து சன்-மியூசிக்“ல வெடி படத்துலயிருந்து “இப்படி மழையடித்தால்“ பாட்டு பார்த்தேன். அட.. அட.. என்னமா இருக்கு தெரியுமா??? விஷால், சமீராவோட டிரெஸ்ஸிங் இருக்கே.. கலக்கல் போங்க.. அதுலயும் அவங்க நடனம்குற பேர்ல ஏதோ ஆடுவாங்க பாருங்க... பாட்டு முழுக்க கண்ணுக்குள்ளயே நிக்குது.. யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டரு??? சுத்திப்போடுங்கப்பா.. பாக்கியராஜ், பாண்டியராஜன், ராமராஜன் டான்ஸ் எல்லாம் போட்டி போடணும் போங்க... அப்படியொரு ஸ்டெப்ஸ்.. (பேசாம நாம கூட டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்போல.. கொடுமடா சாமி..) *********************** விஜய் டிவில புதுசா “உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி? ” னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும். சீரியல்ல தான் அழுது குவிக்குறாங்கனா...