உப்புமா.. (27.02.2012)


இன்னைக்கு ராசிப்பொண்ணுக்கு பிறந்தநாள். அவளோட கல்யாணத்துக்கப்புறம் வர்ற முதல் பிறந்தநாள்“ங்குறதால கொஞ்சம் ஸ்பெஷல். காலேலயே எல்லாரும் போன் பண்ணி வாழ்த்திட்டோம். எங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்“னு புலம்பினா.. அம்மா ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இன்டியாவாயிட்டாங்க.. ஒரே அழுவாச்சி தான் போங்க.. ஹாப்பி பர்த்டே ராசிப்பொண்ணு..
**********************
நேத்து சன்-மியூசிக்“ல வெடி படத்துலயிருந்து “இப்படி மழையடித்தால்“ பாட்டு பார்த்தேன். அட.. அட.. என்னமா இருக்கு தெரியுமா??? விஷால், சமீராவோட டிரெஸ்ஸிங் இருக்கே.. கலக்கல் போங்க.. அதுலயும் அவங்க நடனம்குற பேர்ல ஏதோ ஆடுவாங்க பாருங்க... பாட்டு முழுக்க கண்ணுக்குள்ளயே நிக்குது.. யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டரு??? சுத்திப்போடுங்கப்பா.. பாக்கியராஜ், பாண்டியராஜன், ராமராஜன் டான்ஸ் எல்லாம் போட்டி போடணும் போங்க... அப்படியொரு ஸ்டெப்ஸ்.. (பேசாம நாம கூட டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்போல.. கொடுமடா சாமி..)


***********************
விஜய் டிவில புதுசா “உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி?னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும். சீரியல்ல தான் அழுது குவிக்குறாங்கனா, கேம் ஷோவுல அதுக்கு மேல அழுவுறாங்க.. செலக்ட் பண்ணினாலும் அழுவை.. ரிஜெக்ட் பண்ணினாலும் அழுவை.. கடுப்பா வருது.. அவங்க அழுகுறது மட்டுமில்லா தொகுத்து வழங்குறவங்க, ஜட்ஜ்கள்“னு எல்லாரையும் அழுக வச்சு.. நம்மளயும் கடுப்பேத்துறாங்க. அப்புறம் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா“ நிகழ்ச்சில ஜட்ஜா வர்ற, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரோட சட்டைக் கையை கொஞ்சமாவது இறக்கி வச்சு தைக்கலாம்ல.. கையப் பாத்தாலே ஏதோ திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரியிருக்கு. பாக்கவே அறுவறுப்பா இருக்குதுப்பா..
*************************
இன்னைக்கு காலேல பஸ்ல வந்துகிட்டு இருக்கும்போது எனக்குப் பின்னாடி ஒரு அம்மா, தன் நாலு வயசு மகளோடு உக்காந்துருந்தாங்க. திடீருனு என்னைய பார்த்து ஹே.. என்னம்மா நல்லாயிருக்கியா? எங்க இந்தப் பக்கம்? அம்மா நல்லாயிருக்காங்களா? அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தேன்.. உன்னைய பாக்க முடியல. சரி அம்மாவ விசாரிச்சேன்னு சொல்லிடும்மா“னு அடுக்கிகிட்டே போனாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. அவங்க யாருனே தெரியல. கேக்கவும் தயக்கம். அசடு வழிஞ்சபடியே தலையாட்டி வச்சேன். ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தென். ம்ஹூம்.. ஞாபகத்துக்கு வரவேயில்ல. இறங்கும்போது அவங்களப் பாத்து சம்பிரதாயமா “போயிட்டு வரேங்க“னு சொன்னேன். உடனே அவங்க ஸாரிம்மா.. நீ என் சொந்தக்காரப் பொண்ணு மாதிரியே இருந்த.. தப்பா நெனச்சுட்டேன்னு சொன்னாங்க.. (அடப்பாவிகளா.. இதுக்கா இவ்ளோ நேரம் மூளைய கசக்கிகிட்டேன்..) அவ்வ்வ்..
*****************
கொஞ்சம் வேலையிருக்குங்க.. அதுனாலதான் உப்புமா கிண்டிட்டேன்..
அடுத்த பதிவுல சந்திக்கிறேங்க...
.
.

Comments

வணக்கம் சகோ.


அப்படியா சரி நானும் ஹாப்பி பர்த்டே ராசிப்பொண்ணு..
//பேசாம நாம கூட டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்போல//

மாஸ்டர் கலா, பிருந்தா உசார்..
//“உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி?”னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும். மட்டுமில்லா தொகுத்து வழங்குறவங்க, ஜட்ஜ்கள்“னு அப்புறம் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா“//

செம காமடி போங்க...இப்படி அழ வச்சித்தானே அவுக பொழப்பு ஓடுது ஹி ஹி ஹி
Unknown said…
ஹெஹெஹெ...உப்புமா நல்லாத்தான் இருக்குது சகோ!
மணிவண்ணன் காமடி போங்க...( பஸ்ஸில் துங்கிரவனை எழுப்பி அவனை குழப்பி)

நல்லாத்தான் கிண்டி இருக்கிகே..உப்புமாவை.. சுவையாத்தான் இருக்கு
அவசரத்துல கிண்டுற உப்புமா எப்பவுமே நல்லாருக்கும்.
வெடி டான்ஸ் பவர் ஸ்டாருக்கு போட்டி போல.
Unknown said…
MANY MORE HAPPY BIRTHDAY TO YOUR SISTER.
Marc said…
அருமைப் பதிவு வாழ்த்துகள்
//விஜய் டிவில புதுசா “உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி?”னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும்.//

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
உப்புமா நல்ல டேஸ்ட்! ராசிப் பெண்ணுக்கு என் இதயம் கனிந்த பிறந்ததின நல்வாழ்த்து்க்கள்!
Unknown said…
சூப்பர் காமெடி போங்க. ஓன்னுமில்ல ஸ்ரீதர் மாஸ்டர் கை மேல உங்களுக்கு பலத்த கோபம் போல.....???
என் சொந்தக்காரப் பொண்ணு மாதிரியே இருந்த..இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டு சகோ .
//ஸாரிம்மா.. நீ என் சொந்தக்காரப் பொண்ணு மாதிரியே இருந்த.. தப்பா நெனச்சுட்டேன்”னு சொன்னாங்க.//
நல்ல காமெடி...
ராசிப்பொண்ணுக்கு என்சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க...
ராசிப்பொண்ணுக்கு என் பிறந்தநாள் வாழ்த்து....!
கடைசி ஜோக்கைப் படித்ததும் என்னமா ரசிக்கறாங்க வாழ்க்கையை என்று தோன்றியது!
மீசைக்காரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்..
//வால்பையன் said...

மீசைக்காரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//


பிறந்தநாள் மீசைக்காரனுக்கு இல்ல அருண். ராசிப்பொண்ணுக்கு..

இருந்தாலும் வாழ்த்து சொன்னதுக்கு நன்றி.

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..