ரொம்ம்ப நாளைக்கப்புறம் பல்பு வாங்கினேன்..அதிக வேலை இருந்த்தால இந்தப் பக்கம் வர முடியல.. (அப்படினு பொய் சொல்ல விருப்பமில்லீங்க.. முகபுத்தக நோய் என்னையும் தொத்திக்கிச்சு போல.. அதுனால இந்தப் பக்கம் வர லேட்டாய்டுச்சு).
சரி விடுங்க விஷயத்துக்கு வரேன்.
ரொம்ப நாளைக்கப்புறம் நேத்து பல்பு வாங்கினேன். அதுவும் துணிக்கடைல.. அவ்வ்வ்வ்.. (உங்களுக்கு சந்தோசமா இருக்குமே..)
சாதாரணத் துணில ரெண்டுவகை உண்டு. ஃபுல்வாயில், பாலிவாயில்.
நா நேத்து சாயந்திரம் துணிக்கடைக்குப் போய் ஃபுல்வாயில்“ல டார்க் புளூ கலர்ல ஒரு மீட்டர் துணி வேணும்னு கேட்டேன். நா கேட்ட கலர்ல ஃபுல்வாயில்ல இல்லங்க“னு கடைக்கார்ர் சொன்னார். உடனே நா ஏதோ ஞாபகத்துல, அப்படினா ஆஃப்பாயில்“ல குடுங்கனு சொன்னேன். (அவ்வ்வ்..)
கடைக்காரர் என்னைய ஒரு மாதிரியா பார்த்தார். அப்பக்கூட எனக்கு நினைவுக்கு வரல. அப்புறம் அவரே “மேடம் அது ஆஃப்பாயில் இல்ல. பாலிவாயில்“னு சொன்னார். அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சுச்சு.
அடக்கொடுமையே..
இந்திரா.. இந்த அவமானம் உனக்குத் தேவையா???
சரி சரி... இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.
.
.

Comments

Unknown said…
hm me the first...
Unknown said…
பல்பு வாங்குறது சாதரண விசியமா
ஆப் ஆயில் சூப்பர்
Unknown said…
நீங்களும் றொம்ப நாளைக்கு அப்புறமா கிறுக்கி இருக்கிங்க இந்திரா அக்கா. பல்பு நல்லா மின்னிச்சா?????
ஸ்ஸ்ஸ்அபா... அந்த பல்புனால் ஒரு பதிவு தேறிச்சு. சந்தோசமான விஷயம்...] ஹி..ஹி...ஹி...
COOL said…
//சரி சரி... இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.//

நா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்...
முகநூலில் கேட்கனும்னு நினைத்தேன் என்ன பிளாக் பக்கம் வரலையே என்று.....??


பல்பு வாங்கிய விதம்......ம்.
நல்ல பல்பு தான் கிடைச்சதா?
//////முகபுத்தக நோய் என்னையும் தொத்திக்கிச்சு போல.. அதுனால இந்தப் பக்கம் வர லேட்டாய்டுச்சு/////

சும்மாச்சும் சொல்லக்கூடாது...!

முகபுத்தக நோய் உங்கள புடிச்சுகிச்சா...!
இல்ல..!
அத நீங்க புடிசிச்சுகிட்டீங்களா...!

அதோடு...!

ட்விட்டரில்
///Blog, Twitter, Facebook எல்லாமே போர் அடிக்க ஆரம்பிக்குது.. இதைத்தாண்டி ஏதாவது இருக்கா?////

இப்பிடி மாறி...மாறி...! தாண்டி..தாண்டி...!

இறுதியில் எதை புடிக்கபோறீங்க... அல்லது எதை அடையப்போறிங்க...!
Unknown said…
பல்பு வாங்கினா அதுகூட ஒரு பதிவுக்கு உதவியிருக்கே சும்மா சொல்லக்கூடாது அழகாவே எழுதியிருக்கீங்க.
ஆத்மா said…
வாங்கின பல்புட வாற்ஸ் பத்தாதே.......ரூபாக்கு 5 பல்பு வாங்கியிருக்கிறீங்க போல....
Anonymous said…
// இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. //

சத்தியமா யார்கிட்டையும் சொல்லமாட்டேன்
பஃல்பு வாங்குறது நமக்கென்ன புதுசா..

சூப்பர் பல்பு..

/////முகபுத்தக நோய் என்னையும் தொத்திக்கிச்சு போல.. அதுனால இந்தப் பக்கம் வர லேட்டாய்டுச்சு/////

அது யாரைதான் விட்டு வச்சிருக்கு ஹி ஹி..
Unknown said…
இதெல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா, நீங்க ரொம்ப க(கு)ஸ்டபடாதிங்க sorry
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்..
//காஞ்சி முரளி //


மாற்றம்குறது மனித இயல்புதானே..
பழசை மறக்காம இருக்கணும்குறது தான் என்னுடைய விருப்பம்.
மற்றபடி நோக்கமில்லாத பாதையில் உழாவும் பழக்கம் ஒருபோதும் இருந்ததில்லை நண்பரே.
பதிவுகளி்ன் எண்ணிக்கை குறையலாமே தவிர முற்றுப்பெறாது.
கருத்துக்கு நன்றி முரளி..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்