ஆண் குழந்தை மோகம்..

போன வாரம் தான் ராசிப்பொண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துச்சு. தாயும் சேயும் நலமாக இருக்குறாங்க. அவளுக்கு நல்லபடியா பிரசவமாகணும் வாழ்த்துன நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சரி பதிவுக்கு வரேன். ராசிப்பொண்ணு பிரசவமாகும்போது அறைக்கு வெளில நாங்க வெய்ட் பண்ணிகிட்டு இருந்தோம். அப்போ, அவளோட மாமியார் ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்தாங்க. நானும் என் அம்மாவும் “என்ன குழந்தையா இருந்தா என்ன? ஆரோக்யமா பிறக்கணும்னு நெனைங்க..“னு அவரை சத்தம்போட்டோம். அப்புறம் குழந்தை பிறந்து அழுகுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல நின்னுகிட்டிருந்த உறவினர், அழுகும் சத்தத்தைக் கேட்டா பொம்பளைக் குழந்தை மாதிரிதான் தெரியுதுனு சொன்னார். உடனே அந்த அம்மா அவரிடம் சண்டைக்குப் போயிட்டாங்க. குழந்தை ஆண் ’ னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானாங்க. ‘ சிங்கக்குட்டி பிறந்துருக்கு.. எங்க வாரிசு பிறந்துருச்சு.. ’ அப்படி இப்படினு குதிச்சு கும்மாளம் போட்டுட்டாங்க. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருந்துச்சு. வயித்துல இருக்குற குழந்தை ஆரோக்கியமா எந்தப் பிரச்சனையுமில்லாம பிறக்கணும்னு நினைக்குறது தான் நியாய...