உன் தற்கொலைக்கு என் வாழ்த்துக்கள்..
கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொள்..
நாக்கும் கண்களும் வெளித்தள்ள
எலும்புகள் உடைத்திடு வலுக்கட்டாயமாய்..
விஷத்தால் உயிரைப் போக்கிக்கொள்..
சுவாசம் தடைபட்டு இதயத்தை நிறுத்திடு சுதந்திரமாய்..
கத்தியால் நரம்பை அறுத்துக்கொள்..
இரத்தத்துடன் உயிரையும் வெளியேற்று சாவகாசமாய்..
மாத்திரைகளால் நித்திரைக்குள் புதைந்துகொள்..
மீளாத கனவுகளில் மூழ்கிப்போ நிதானமாய்..
ஓடும் வாகனம் முன் பாய்ந்துகொள்..
அடித்துநொருக்கிடு உறுப்புக்களை அதிரடியாய்..
மாடியேறி தரைதளம் குதித்துக்கொள்..
சிறகில்லா பறவையாய் சின்னாபின்னமாகிப்போ சுலபமாய்..
எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்
உன் தற்கொலை..
உன் விருப்பமாக எதுவேண்டுமானாலும்
இருந்துவிட்டுப்போகட்டும்..
கத்தியோ கயறோ..
மாத்திரையோ வாகனமோ..
உன் மரண நொடியை நீயே முடிவு செய்யலாம்..
ஆனாலும்
அதே நொடியில்
ஏதோ ஒரு எலி ஒரு பூனையிடமிருந்து
உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கலாம்..
ஏதோ ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு
யாரோ ஒருவர் இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கலாம்..
ஏதோ ஒரு தாய், தன் சுகப்பிரசவத்திற்காக
பிரார்த்தனை செய்துகொண்டிருக்கலாம்..
ஏதோ ஒரு உயிர், உலகின் எங்கோ ஒரு மூலையில்
தன் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கலாம்..
அதுபற்றியெல்லாம் நீ கவலைப்படாதே..
தோல்வியெனும் காரணம் தான் உன்னிடம் இருக்கிறதே..
தாராளமாகத் தற்கொலை செய்துகொள்..
என் வாழ்த்துக்கள்.
.
.
Comments
மரண அடி..
நச்சுன்னு சொன்னீங்க வாழ்த்துக்கள்
சூப்பரோ சூப்பர்!!!!
#எச்சூச்மி... எனக்கு இதுக்கு மேல சொல்லத் தெரியலைங்க...
ஆரம்ப வரிகளில் ஏன் இந்த வெறுப்பு என சிந்தித்தேன்
பின்னர் அருமையான விடயத்தை சொல்லி முடித்துள்ளிர்கள்
நன்றாகவிருக்கிறது
தன் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கலாம்..
இப்படியும் சொல்ல முடியுமா?
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
//மனசாட்சி//
//வெளங்காதவன்//
//joe.....!//
//rufina rajkumar //
//வரலாற்று சுவடுகள் //
// சிட்டுக்குருவி //
//Sasi Kala //
//Athisaya//
//ஹாரி பாட்டர்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்..
:-)