ஓடும் பேருந்தில் வன்புணர்வு – இந்தியா ஒளிர்கிறது..!!

காலையில் ஒரு கப் டீயோடு சாவகாசமாய் பேப்பரை மேய்ந்துகொண்டிருக்கும்போது கண்ணில் பட்டிருக்கலாம் இந்தச் செய்தி. ஓடும் பஸ்ஸில் மாணவி பலாத்காரம்...! டெல்லியில் பயங்கரம்! லோக்சபா, ராஜ்யசபாவில் இதுகுறித்து அமளி..! மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவரை பார்த்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர்..! குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு..! கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்றும் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது..! படித்துவிட்டு எந்தவிதப் பதட்டமுமின்றி செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடச் சென்றுவிடலாம். நியாயம்தானே.. நமக்கேன் இதுபற்றியெல்லாம் கவலை?? நண்பர்களுடன் பேசும்போது, கசாப் தூக்கிலப்பட்டதைப் பற்றியும் பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் முடித்துவிட்டு, அவர்களில் யாரேனும் இதுபற்றிப் பேச்சையெடுத்தால் ” ஆமா.. நா கூட காலேல படிச்சேன். ரொம்பக் கொடுமையான செய்தி தான். இவனுகளையெல்லாம் சுட்டு...