நட்போ..! காதலோ..!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள,
எல்லைகள் கடந்து எதிர்த்துப்பேச,
சலுகையில்லாது சண்டைகள் போட,
விருப்பம் குறித்து வாதம் செய்ய,
குறையிருப்பின் சுட்டிக்காட்ட,
நிறையிருப்பின் தட்டிக்கொடுக்க,
தளர்ந்துபோயின் தேற்றிவிட,
கேள்விகளுக்கான பதில்சொல்ல,
பதிலுக்குமோர் கேள்வியெழுப்ப,
தேடலின்போது துணையாய் நிற்க.. என
எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது..
முகமூடியணியாத ஓர் நட்பு..!
நம்மிடமோ.. நம்மால் பிறரிடமோ..!!
.காமம் பிரதானமில்லை எனும்போது
நட்போ..! காதலோ..!
எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.
என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது
என்பதே எனக்குப் போதுமானது..!
.
.


Comments


காமம் பிரதானமில்லை எனும்போது
நட்போ..! காதலோ..!
எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.
என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது
என்பதே எனக்குப் போதுமானது..//

!ஆழமான கருத்துடன் கூடிய
அருமையான வரிகள்
மனம் கவர்ந்த வரிகள்
தொடர வாழ்த்துக்கள்//

ஆத்மா said…
அழகான வரிகள் +
அர்த்தமுள்ள வரிகள் :)
இறுதி வரிகள் மனதைக் கவர்ந்தன மிகவும் அருமை
பைனல்டச்! அருமை! அர்த்தமுள்ள கவிதை! வாழ்த்துக்கள்!
Unknown said…
Kavithai romba pidichurukku..
Anonymous said…
எல்லாத்தையும் சொல்லிட்டு...
இறுதியில்...

//முகமூடியணியாத ஓர் நட்பு..!///
அப்படீன்னு சொன்னீங்களே...

அதுதான்...நிஜம்..

ஆனால்...
நிஜங்கள் சுடும் என்பதால்..
நிறையபேர்
நிழலை அல்லவா
நிதர்சனமாய்
‘நிஜம்’மென நம்பி...

விளக்கை தேடி
விழுந்துமடியும்
விட்டில் பூச்சிகளாய்...

உடைகளை களைந்துவிட்டு
அரிதாரத்தை மட்டுமே
ஆடையாய் பூசிக்கொண்டு...

உலவுவோரை
உலகத்தில்
பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்...


என்னைப் பொறுத்தளவில்..
யதார்த்தமான உண்மை என்னவெனில்...
இன்றைய அவசர உலகில்...

நீங்கள் சொன்ன
இந்த பத்தில்
நடைமுறையில் சாத்தியமான
எதார்த்த நட்பு
எத்தனைபேரிடம் உள்ளது..
அல்லது எதிர்பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது...

‘நட்பென்பது’ என்னவென்றால்..
‘ரயில் சிநேகம்’ போல
அப்பயணம் வரை மட்டுமே தொடரும்...
இன்றைய யதார்த்தம்..
இதனை மறுக்கமுடியுமா... நண்பி...

அடுத்து...
ஐந்து வரிகளை
திரும்ப திரும்ப படித்துப் பார்க்கிறேன்...
விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறேன்...
விளங்கவில்லை...

இருந்தாலும்...
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்..

இரண்டு கவிதையுமே..
“வாவ்” என்று சொல்ல வைக்கும்..
சொல்லாடல் கொண்டதுதான்...

இருந்தாலும்..
முதல் ‘நட்பு’ கவிதை
அழகு...
அருமை...
அற்புதம்....

சொல்லழகும்..
பொருளழகும்...
வரியழகும்...

வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...
Anonymous said…
//காமம் பிரதானமில்லை எனும்போது
நட்போ..! காதலோ..!
எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.
என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது
என்பதே எனக்குப் போதுமானது..!//

இதப் பார்த்தவொன்னே...

நேற்று என் அலுவலகம் முடிந்த இல்லம் திரும்பும்போது நடைபெற்ற நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது...

ஒருவேளை அதைப்போலவா????

பேருந்துக்காகக் காத்திருந்தபோது...
என்னுடன் ஓர் தாடையில் குட்யோண்டு தாடி, காதில் பேஷன் கடுக்கன்... நெற்றியில் மூக்குவரை வந்து விழும் தலைமுடி இப்படிப்பட்ட அங்கஅடையாளத்துடன் இன்றைய ‘ஐ.டி.’இளைஞன் ஒருவனும் என் அருகில் காத்திருந்தான்... பேருந்துக்காக...

வேகமாய்... அதிவேகமாய்... ஓர் ‘இளைஞி’... உடலை இறுக்கத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும்...நிறமாறிப்போன இடுப்புக்கும் கீழிறக்கடத்துடன் ஜீன்ஸ்... டைட்ஸ் டீ சர்ட்ஸ்... நுனிநாக்கில் ஆங்கில வாடை இவற்றுடன் இன்றைய ‘ஐ.டி.’துறை இளைஞிதான் என நினைக்கிறேன்... அவருடைய உடைபாவனையே சொல்லியது...
வந்ததும் “ஹாய்.. என ஆங்கிலத்திலேயே நலம் விசாரிப்பு... இடையிடையே தமிழ்... அதாவது தங்லீஸ்... அப்படி என்ன பேசினார்கள் என்பதை அறியேன்... (நான் எப்போதும் அடுத்தவர் என்ன பேசுகிறார்கள் உன்னிப்பாய் கவனிப்பதில்லை... அவர்கள் சத்தமாய் பேசினால்தான் கவனிக்கும் இயல்பு எனது)

இறுதியில்... அந்த இளைஞி சத்தத்துடன் இறுதியாய் சொன்ன வார்த்தைகள் “மனசு சுத்தமாயிருந்தா போதும்... மனசு சுத்தமாயிருக்கில்ல... அப்ப வந்து பின்னாடி உட்கார்” என்று அந்த இளைஞனை அழைத்தார்... அவரும்..இதற்கு மேல் பேசினால்... அந்த இளைஞி அதிகம் பேசுவாள் என்று நினைத்தாரோ என்னவோ... அந்த இளைஞியின் வாகனத்தில்... தன் பின்னாடி மாட்டியிருந்த பையை கழட்டி... அந்த இளைஞிக்கும் தனக்கும் இடையில் வைத்துக் கொண்டே பின்னால் அமர்ந்தான்...

இந்நிகழ்விலிருந்து... இந்த பேச்சுக்குமுன் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்...

அதைப்போலத்தான்...
இக்கவிதையுமா????
அருமை...அருமை...
ஆண்பெண் என்ற பாகுபாடு இல்லாத நட்பே உயர்ந்தது.
உண்மையில் மனத்தைத் தொட்டது.
வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்.

காமம் எனும் கல்லெறிவது சுலபம்
காயப்படாமல் வாழ்வதே கடினம்

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..